Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ரயிலில் ரிசர்வேசன் செய்த தமிழக மாணவர்களுக்கு இடைஞ்சல்..வடமாநிலத்தவர்கள் அடாவடி..இறக்கி விட்ட போலீஸ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: பெங்களூருவில் இருந்து அசாம் செல்லக்கூடிய ரயிலில் முன்பதிவு செய்த பெட்டிகளை ஆயிரக்கணக்கான வடமாநிலத்தவர்கள் ஆக்கிரமிப்பு செய்து அட்டகாசம் செய்ததால் தமிழக மாணவர்கள் புகார் செய்தனர். பாதிக்கப்பட்ட தமிழக மாணவர்கள் அளித்த புகாரின் பேரில் டிக்கெட் இல்லாத வடமாநில இளைஞர்கள் அனைவரையும் ரயில்வே போலீசார் திருவொற்றியூர் ரயில் நிலையத்தில் இறக்கி விட்டனர்.

வட இந்தியாவில் இருந்து பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள் தமிழகத்தில் பல மாவட்டங்களில் வேலைக்கு வந்துள்ளனர். சென்னை, கோவை, திருப்பூர், மதுரை என முக்கிய நகரங்களில் ஹோட்டல்கள், கட்டிட தொழில்கள், ஆயத்த ஆடை தயாரிப்பு நிறுவனங்களிலும் வேலைக்கு வருகின்றனர். பண்டிகை காலங்களில் தமிழகத்தில் இருந்து தங்களின் சொந்தமாநிலங்களுக்கு அவர்கள் ரயில்களில் பயணம் செய்கின்றனர்.

1000 North Indian passengers who traveled without ticket in the train reservation coach

பெரும்பாலோனோர் முன்பதிவு செய்யப்பட்ட பெட்டிகளில் ஏறி அடாவடி செய்வதாக புகார் எழுவது தொடர்கதையாகி வருகிறது. அரைகுறை ஆடையோடு பெண்கள், குழந்தைகள் அமர்ந்திருக்கும் பெட்டிகளில் சத்தம் போட்டு பேசி அனைவருக்கும் சிரமத்தை கொடுக்கின்றனர் என்ற புகார் அடிக்கடி எழுகிறது.

இந்த நிலையில் இன்றைய தினம் அசாம் மாநிலத்திற்கு செல்லும் பெங்களூரு விரைவு ரயிலில் டிக்கெட் எடுக்காமல் சுமார் ஆயிரத்துக்கு மேற்பட்ட வடமாநிலத்தவர் முன்பதிவு செய்திருந்த பெட்டிகளில் மூட்டையை கட்டிக்கொண்டு ஏறியுள்ளனர். உள்ளே ஏறிய அவர்கள் டிக்கெட் எடுத்து பயணித்தவர்களுக்கு இடம் கொடுக்காமல் 4 பேர் அமரக்கூடிய இடத்தில் 7 பேர் மூட்டை முடிச்சுகளுடன் அமர்ந்து, முன்பதிவு செய்தவர்களுக்கு இடம் தராமல் ஆக்கிரமிப்பு செய்து கொண்டு பயணம் செய்தனர்.

இதனால் பாதிக்கப்பட்ட தமிழக மாணவிகள் ரயில்வே போலீசாருக்கு புகார் தெரிவித்ததையடுத்து திருவொற்றியூரில் ரயில் நிறுத்தப்பட்டது. உடனே அனைத்து முன்பதிவு பெட்டிகளில் ஆய்வு மேற்கொண்டு டிக்கெட் எடுக்காமல் இருந்த சுமார் 1000 வடமாநிலத்தவர்களை கண்டித்து வெளியேற்றினர்.

இந்த கூட்டத்தில் பல பெண்களும் டிக்கெட் எடுக்காமல் ஒரே சீட்டில் அமர்ந்து கொண்டு பயணித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கீழே இறக்கிவிடப்பட்ட பயணிகள் அனைவரும் திருவொற்றியூர் ரயில் நிலையத்தில் கூட்டமாக நின்று கொண்டிருந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. அனைவரும் உடனடியாக கலைந்து போக வேண்டும் என்று ரயில்வே காவல் நிலைய காவலர்கள் விரட்டி விட்டனர். தொடர்ந்து இதுபோல் நடப்பதால், ரயில்வே நிர்வாகம் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உரிய டிக்கெட் எடுத்து பயணிப்பவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

கடந்த மே மாதம் கொல்கத்தாவில் இருந்து கன்னியாகுமரிக்கு இயக்கப்படும் வாராந்திர சிறப்பு ரயிலில் அதிக அளவிலான வடமாநிலத்தவர்கள் பயணம் செய்துள்ளனர். சென்னை எழும்பூர் வந்த நிலையில் முனபதிவு பெட்டிகளில் முன்பதிவு செய்தவர்களுக்கு பதிலாக, அதிக அளவிலான வடமாநிலத்தவர்கள் பயணம் செய்தனர். அந்த ரயில் செங்கல்பட்டு ரயில் நிலையத்திற்கு வந்தபோது பயணிகள் பில்வேறு சிரமங்களை அனுபவித்தனர்.

கன்னியாகுமரி வரை செல்லும் வாராந்திர சிறப்பு இரயிலில் முனபதிவு செய்த பெட்டிகளில் சுமார் 200க்கும் மேற்பட்ட வடமாநிலத்தவர்கள் பயணம் செய்ததாக கூறப்படுகிறது. முன்பதிவு செய்தவர்கள் தங்களது இருக்கைகளில் அமர்ந்த நிலையிலும் வடமாநிலத்தவர்கள், தமிழர்களுக்கு இடையே வாக்கு வாதம் ஏற்பட்டுள்ளது அதிகமாக பெண்கள் பயணித்த பெட்டிகளில் அரைகுறை ஆடைகளுடன் வடமாநிலத்தவர்கள் பயணித்த நிலையில் பெண்கள் மூன்று முறை ரயிலை நிறுத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் ரயில் பயணிகளுக்காக நிறுத்தபட்ட நிலையில், ரயில்வே ஊழியர்களிடம் பயணிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பெண்கள் குழந்தைகள் என முன்பதிவு செய்து செல்லும் ரயில்களில் முறையான பயணசீட்டு இன்றி அதிக அளவிலான வடமாநிலத்தவர்கள் பயணம் செய்ததால் பெரும் அச்சுறுத்தல் இருப்பதாக தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த இரயில்வே மற்றும் செங்கல்பட்டு நகர போலீசார் முன்பதிவு பெட்டிகளில் இருந்த வடமாநிலத்தவர்களை இறக்கி வேறு இரயில்களில் அனுப்பி வைத்தனர்.

ரயில் நிலையம் உள்ளே செல்வதற்கு மெட்ரோ நிலையங்களில் கடைபிடிக்கும் முறையை போல , பயணச் சீட்டு, நடைமேடை அனுமதி சீட்டு உள்ளவர்களை மட்டுமே அனுமதிக்கும் முறையை பின்பற்ற வேண்டும் என்றும் விமான நிலையம் போன்று கெடுபிடி காட்டினால் பயணச்சீட்டு உள்ளவர்கள் ஓரளவேனும் சிரமப்படாமல் பயணம் செய்யமுடியும் என்றும் பயணிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+