10 மற்றும் 11-ம் வகுப்பு மாணவர்கள் பெயர்த் திருத்தம் செய்ய கடைசி வாய்ப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: 10 மற்றும் 11ஆம் வகுப்பு மாணவர்கள் தங்கள் பெயரில் திருத்தங்கள் ஏதும் இருப்பின் வரும் 17ம் தேதிக்குள் இணையதளம் மூலம் மேற்கொள்ளலாம் என பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது,

பெயர் திருத்தம் என்பது ஒருவருக்கு மிகவும் முக்கியமானது. 10ம் வகுப்பு 11ம் வகுப்பில் ஒருவர் பெயரை திருத்தம் செய்யாவிட்டால் அதுவே அவரது பெயராக நிலைத்து நிற்கும். அதற்கு பிறகு திருத்தம் செய்யவது எளிதானது அல்ல. அதற்கான படி நிலைகள் மிகவும் கடினமானது. நீண்டதும் கூட.

10th and 11th grade students last chance to make a name correction

எனவே 10 மற்றும் 11-ம் வகுப்பு மாணவர்கள் பெயர்த் திருத்தம் செய்ய அவர்கள் தேர்வு எழுதும் முன்பும், தேர்வு எழுதிய பின்பும் கிடைக்கும். அந்த வாய்ப்பை மிஸ் பண்ணக்கூடாது.

பள்ளி கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் 10 மற்றும் 11ஆம் வகுப்பு மாணவர்கள் தங்கள் பெயரில் திருத்தங்கள் ஏதும் இருப்பின் https:/apply1.tndge.org/login என்ற அரசு தேர்வுகள் இயக்கக இணையதளத்தில், பள்ளி அளவில் வழங்கப்பட்டுள்ள Password-ஐ பயன்படுத்தி திருத்தம் செய்யலாம்.

திருத்தங்கள் மேற்கொள்ள இதுவே கடைசி வாய்ப்பு என்றும் வரும் 14ஆம் தேதி முதல் 17ஆம் தேதி வரை இப்பணியை மேற்கொள்ளலாம் என்றும் பள்ளிக்கல்வித்துறை கூறியுள்ளது. மதிப்பெண் சான்றிதழ் தயாரிக்கும் பணி துவங்க உள்ள நிலையில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+