செங்கல்பட்டில் 'பகீர்'.. 11 கொரோனா நோயாளிகள் மூச்சுத் திணறி பலி - ஆக்சிஜன் தட்டுப்பாடா?
சென்னை: செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் 11 கொரோனா நோயாளிகள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. ஆக்சிஜன் தட்டுப்பாடே உயிரிழப்புக்கு காரணம் என்று புகார் எழுந்துள்ளது.
இந்தியாவில் கொரோனா 2வது அலை கடுமையாக வீசி வருகிறது. நாடு முழுவதும் பல மாநிலங்களில் மக்கள் கொத்து கொத்தாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். பாதிப்பு தீவிரம் அடைபவர்களுக்கு ஆக்சிஜன் சிலிண்டர் தட்டுப்பாடு, ரெமிடிசிவிர் மருந்து தட்டுப்பாடு நிலவுகிறது.
சரியான நேரத்தில் ஆக்சிஜன் உதவி கிடைக்காமல், மூச்சுத் திணறல் ஏற்பட்டு பலரும் இறந்து வருகின்றனர். சாமானிய மக்கள் முதல் பிரபலங்கள் வரை பலரும் இந்த ஆக்சிஜன் தட்டுப்பாடு மரணத்தில் அடக்கம்.

செங்கல்பட்டு அரசு மருத்துவமனை
இந்த நிலையில், செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் தட்டுப்பாடு காரணமாக 5 நோயாளிகள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் தினம் ஆயிரத்து 500க்கும் மேற்போட்டோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதன் காரணமாக செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சுமார் 500-க்கும் மேற்பட்டோர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அதிகரித்த எண்ணிக்கை
இந்நிலையில் நேற்று இரவு பத்து மணி முதல் ஆக்ஸிஜன் பற்றாக்குறை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் ஆக்சிஜன் கிடைக்காமல் சுமார் ஒரு மணி நேரத்துக்குள் அடுத்தடுத்து 5 நோயாளிகள் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். உடனடியாக, அருகிலுள்ள தனியார் மருத்துவமனையில் இருந்து ஆக்சிஜன் கொண்டுவரப்பட்டது. அதற்குள் மேலும் அடுத்தடுத்து சிலர் இறந்தனர். இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 11-ஆக அதிகரித்துள்ளது.

ஆட்சியர் ஆய்வு
இதையடுத்து, சம்பவம் குறித்து தகவலறிந்த மாவட்ட ஆட்சியர் ஜான் லூயிஸ், மருத்துவமனைக்கு நேரில் சென்று ஆய்வு செய்தார். இதன்பின் அவர் கூறுகையில், 'மருத்துவமனையில் போதுமான அளவு ஆக்ஸிஜன் கையிருப்பில் இருந்தது. இருப்பினும் எதிர்பாராத விதமாக உயிரிழப்பு ஏற்பட்டு விட்டது. 11 பேர் உயிரிழப்பு குறித்து, உரிய விசாரணை நடத்தப்படும்' என்றார்.

மருந்துக்கும் தட்டுப்பாடு
நாட்டின் தேசிய தலைநகர் டெல்லி உள்ளிட்ட பல மாநிலங்கள் ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் பல மரணங்களை சந்தித்துக் கொண்டிருக்க, தமிழகம் அந்தளவுக்கு மோசமில்லை என்ற நிலையில் இருந்தது. எனினும், கடந்த சில நாட்களாக தொடர்ந்து ஆக்சிஜனுக்கும், மருந்துகளுக்கும் தட்டுப்பாடு ஏற்பட தொடங்கியது. இந்த சூழலில், செங்கல்பட்டில் அதுவும் அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் 11 பேர் உயிரிழந்திருக்கும் சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications