ஒன்றல்ல.. இரண்டல்ல.. 10க்கும் மேல்! பாலியல் வழக்குகளில் அடுத்தடுத்து சிக்கும் ஆளும் தவெக நிர்வாகிகள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் சமீபகாலமாக சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்துவிட்டதாகவும், உளவுத்துறை தகவல்களைக் கையாள்வதில் நிர்வாகக் குளறுபடிகள் நிலவுவதாகவும் தொடர் குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன. சிறுவர்கள் மற்றும் பச்சிளம் குழந்தைகள் அடுத்தடுத்து மாயமாவது, தொடர் கொலைகள் என மாநிலமே பதற்றத்தில் உள்ள சூழலில், தற்போது ஆளும் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) உட்கட்சி விவகாரங்கள் பெரும் புயலைக் கிளப்பியுள்ளன.

மாநிலத்தின் சட்டம்-ஒழுங்கைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பில் இருக்கும் ஆளும் கட்சியின் நிர்வாகிகள் பலரே, கடந்த சில மாதங்களாக அடுத்தடுத்து பாலியல் வன்கொடுமை, போக்சோ (POCSO) மற்றும் மிரட்டல் வழக்குகளில் சிக்கி கைதாகி வருவது மக்கள் மத்தியிலும் அரசியல் களத்திலும் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.

TVK Functionaries

வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள 15 பேர் கொண்ட பட்டியல்

தவெக நிர்வாகிகள் சிலர் மீது பாய்ந்துள்ள வழக்குகள் மற்றும் அவர்கள் மீது சுமத்தப்பட்டுள்ள தீவிர குற்றச்சாட்டுகள் அடங்கிய 15 பேர் பட்டியல் தற்போது வெளிவந்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது:

1. சேலம் மணிகண்டன்: 50-க்கும் மேற்பட்ட பெண்களை ஆபாச படம் எடுத்து மிரட்டியதாக எழுந்த அதிர்ச்சிப் புகார்.
2. தூத்துக்குடி பாலமுருகன் & ராமநாதபுரம் ஜெயபால்: வேலை வாங்கித் தருவதாகக் கூறி காரில் அழைத்துச் சென்று பெண்ணைக் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்து கொலை மிரட்டல் விடுத்த வழக்கில் கைதான சம்பவம்.
3. தவெக எம்எல்ஏ விஜி சரவணன்: பாலியல் வழக்கில் தொடர்புடையவருக்கு ஆதரவாகச் செயல்பட்டு, பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு மிரட்டல் விடுத்ததாக எழுந்த புகார்.
4. ஆலந்தூர் வேம்புலி: வடக்குப் பகுதி செயலாளராக இருந்த இவர், மகளிர் உடற்பயிற்சி மையப் பொறுப்பாளரான பெண்ணின் வீட்டுக்குள் புகுந்து பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாகப் பதிவு செய்யப்பட்ட வழக்கு.
5. ராணிப்பேட்டை விஜய் மோகன்: கட்சியில் முக்கியப் பொறுப்பு வாங்கித் தருவதாகக் கூறி பெண்ணைப் பாலியல் வன்கொடுமை செய்த விவகாரம்.

6. ஆர்.கே. நகர் 'பாம்பு' தினேஷ்: பகுதி பொறுப்பாளரான இவர், 11 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டது.
7. திருச்செந்தூர் பிரைட்டர், ரூஸ்வெல்ட்: சொந்தக் கட்சியின் பெண் நிர்வாகியிடமே ஆபாசமாகப் பேசி பாலியல் தொல்லை மற்றும் கொலை மிரட்டல் விடுத்ததாக எழுந்த புகார்.
8. திருவள்ளூர் பிரகாஷ் (எ) குட்டி: கட்சியின் பெண் நிர்வாகிக்கு பாலியல் ரீதியான தொல்லை கொடுத்த குற்றச்சாட்டு.
9. சிவகங்கை மகாராஜா, ராபின், ஹரிஸ்: உள்ளூர் பெண் நிர்வாகியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக எழுந்த புகார் பட்டியல்.
10. குளித்தலை ரமேஷ்: ஒன்றிய செயலாளரான இவர் மாற்றுத்திறனாளிப் பெண்ணுக்குப் பாலியல் தொல்லை கொடுத்ததாகப் பதிவான விவகாரம்.

11. மதுரை கண்ணன்: பத்தாம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவிக்கு பாலியல் ரீதியாக அத்துமீறிய குற்றச்சாட்டு.
12. வில்லிவாக்கம் மதன் ராஜ்: பாதுகாப்புப் பணியில் இருந்த பெண் காவலரிடமே அத்துமீறிப் பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கிளம்பிய சர்ச்சை.
13. அசோக் நகர் ஆனந்த்: நடைபாதையில் ஆதரவின்றித் தூங்கிக் கொண்டிருந்த 65 வயது மூதாட்டியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட அதிர்ச்சி விவகாரம்.
14. அரக்கோணம் சசிகுமார்: கட்சியில் பதவி வாங்கித் தருவதாக ஆசைவார்த்தை கூறி திருமணமான பெண்ணிடம் பாலியல் அத்துமீறல் செய்த குற்றச்சாட்டு.
15. கன்னியாகுமரி கிறிஸ்டோபர்: உதவி செய்வது போல் காரில் ஏற்றிச் சென்று கல்லூரி மாணவிக்குப் பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் சிக்கியது.

கட்சிப் பதவி அதிகார துஷ்பிரயோகமா? மக்கள் கொந்தளிப்பு

பள்ளி மாணவிகள், ஆதரவற்ற மூதாட்டிகள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் தங்கள் கட்சியை நம்பிப் பணியாற்ற வரும் பெண் நிர்வாகிகள் என யாரையும் விட்டுவைக்காமல் அத்துமீறல்கள் நடந்துள்ளதாகப் புகார்கள் குவிவது சாமானிய மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

"கட்சியில் பொறுப்பு வாங்கித் தருகிறோம்", "வேலை வாங்கித் தருகிறோம்" என்று கூறி பெண்களை ஏமாற்றிப் பாலியல் வன்கொடுமை செய்வதும், பாதிக்கப்பட்ட பெண்கள் தைரியமாகப் புகார் அளிக்கும் போது எம்எல்ஏ அளவிலான செல்வாக்கு மிக்க நபர்கள் குற்றவாளிகளுக்கு ஆதரவாக நின்று மிரட்டல் விடுப்பதும் எத்தகைய பாதுகாப்பற்ற சூழலை உருவாக்குகிறது என்ற கண்டனங்கள் எழுந்துள்ளன. பெண் காவலருக்கே பாதுகாப்பு இல்லாத நிலையை ஒரு பகுதி நிர்வாகி ஏற்படுத்துகிறார் என்றால், எளிய பெண்களுக்கு யார் பாதுகாப்பு என்ற கேள்வி சமூக வலைதளங்களில் விஸ்வரூபம் எடுத்துள்ளது.

நடவடிக்கை வெறும் கண்துடைப்பா?

பொதுவாக இதுபோன்ற விவகாரங்கள் வெளிச்சத்திற்கு வந்து காவல்நிலையப் படியேறும் போது, "கட்சியின் நற்பெயருக்குக் களங்கம் ஏற்படுத்தியதால் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கப்படுகிறார்" என்று பெயரளவில் ஓர் அறிக்கை வெளியிட்டுவிட்டு தலைமை ஒதுங்கிக் கொள்வதாக எதிர்க்கட்சிகள் கடுமையாகச் சாடி வருகின்றன.

ஆனால், குற்ற வழக்கில் சிக்கும் நபர்கள் மீது சட்டப்படியான கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படுவதை உறுதி செய்வதும், பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உரிய நீதியைப் பெற்றுத் தருவதும் ஆளும் அரசுக்குரிய முதன்மைக் கடமையாகும். உள்ளூர் மட்டத்தில் அதிகார பலத்தைக் காட்டி வழக்குகளை நீர்த்துப் போகச் செய்யும் முயற்சிகள் தீவிரமாக நடப்பதாகவும் பாதிக்கப்பட்ட தரப்பினர் குமுறுகின்றனர்.

முதல்வருக்கு எழும் கடும் நெருக்கடி

ஒருபுறம் மாநில அளவில் சட்டம்-ஒழுங்கு பலவீனமடைந்துவிட்டது, உளவுத்துறை சுணக்கமாக இருக்கிறது என்ற விமர்சனங்கள் ஓங்கிக் கொண்டிருக்கும் நிலையில், மறுபுறம் சொந்தக் கட்சியின் பொறுப்பாளர்களே அடுத்தடுத்துக் கடுமையான பாலியல் குற்றங்களில் சிக்குவது முதலமைச்சர் விஜய்க்குப் பெரும் நிர்வாக நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

"பெண்கள் பாதுகாப்புதான் எங்கள் அரசின் முதல் கொள்கை" என்று மேடைகளில் பேசுவதோடு நின்றுவிடாமல், சொந்தக் கட்சிக்குள் புரையோடிப் போயிருக்கும் சமூக விரோதிகளைக் கூண்டோடு களையெடுக்க வேண்டிய கட்டாயம் தவெக தலைமைக்கு ஏற்பட்டுள்ளது. பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் எதிரான குற்றங்களில் ஈடுபடுவோர் ஆளுங்கட்சியினர் என்ற பாரபட்சமின்றி இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கப்பட வேண்டும் என்பதே பொதுமக்களின் உடனடி எதிர்பார்ப்பாக உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+