சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஊரடங்கு நேரத்திலும் ஓடாய் உழைத்தவர்கள்.. கொரோனாவால் தமிழகத்தில் 15 தபால்காரர்கள் பலி

Google Oneindia Tamil News

சென்னை: ஊரடங்கு நேரத்திலும் மக்கள் சேவையை மகேசன் சேவையாக கருதிய தபால்காரர்களில் தமிழகத்தில் 15 பேர் கொரோனாவால் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

உலக தபால் தினம் நேற்று கொண்டாடப்பட்டது. இந்திய தபால் துறை சார்பில் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 9-ஆம் தேதி முதல் 15-ஆம் தேதி தேசிய அஞ்சல் வாரமும் கொண்டாடப்படுகிறது.

15 Postmen in Tamilnadu died of Coronavirus

அந்த வகையில் சென்னை அண்ணா சாலையில் உள்ள தலைமை தபால் அலுவலகத்தில் உலக தபால் தினம் மற்றும் தேசிய அஞ்சல் வாரம் கொண்டாடப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் 1866-ம் ஆண்டு வடிவமைக்கப்பட்ட திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் பழமையான தபால் பெட்டி, அண்ணா சாலையில் உள்ள தலைமை அஞ்சலகத்தின் அஞ்சல் தலை சேகரிப்பு மையத்திற்கு அர்ப்பணிக்கப்பட்டது. இது கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்தது.

உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 3.70 கோடி.. பலி எண்ணிக்கை 10.72 லட்சம் உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 3.70 கோடி.. பலி எண்ணிக்கை 10.72 லட்சம்

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முதன்மை தபால்துறை தலைவர் செல்வக்குமார் கூறுகையில், ஊரடங்கு காலமான 6 மாதத்தில் 40 சதவீதம் வருவாய் குறைந்துள்ளது. கொரோனா ஊரடங்கு காலத்திலும் தபால் பட்டுவாடா தொய்வின்றி நடந்தது.

இந்த அயராத பணியில் பணியாற்றியபோது தமிழகத்தில் 15 தபால்காரர்கள் கொரோனாவால் உயிரிழந்தனர் என அவர் தெரிவித்தார்.

English summary
15 Postmen in Tamilnadu died of Coronavirus after they served people amid corona pandemic.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X