2 வேலையா.. இப்போ நாங்க எங்கே போறது? தமிழ்நாடு ஆசிரியர்களுக்கு வந்த திடீர் குழப்பம்
சென்னை: தமிழ்நாடு அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு ஒரே நாளில் ஆதார் - வாக்காளர் அடையாள அட்டை இணைப்பு பணிக்கு செல்லவும், குறுவள மையப் பயிற்சிக்கு வரவும் அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளதால் ஆசிரியர்கள் குழப்பமடைந்து உள்ளனர்.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தேர்தல் சீர்திருத்த சட்டத்திருத்தம் நிறைவேற்றப்பட்டதை தொடர்ந்து தற்போது நாடு முழுவதும் ஆதார் அட்டையுடன் வாக்காளர் அடையாள அட்டையை இணைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
தமிழ்நாட்டிலும் அரசு அதிகாரிகள் வீடு வீடாக சென்றும், சிறப்பு முகாம்களை அமைத்தும் துரிதமாக ஆதார் - வாக்காளர் அட்டை இணைக்கும் பணியை மேற்கொண்டு வருகின்றனர்.

2 உத்தரவுகள்
இந்த நிலையில் வாக்காளர் அட்டை - ஆதார் இணைப்பு முகாம் பணிக்காகவும், குறுவள மைய பயிற்சிக்காகவும் இருவேறு சுற்றறிக்கை ஒரே நேரத்தில் தங்களுக்கு வந்துள்ளதால் ஆசிரியர்கள் குழப்பமடைந்து உள்ளனர். இதுகுறித்து எழுத்தாளரும், அரசுப் பள்ளி ஆசிரியரையும் உமா மகேஷ்வரி பேஸ்புக்கில் பதிவிட்டு இருக்கிறார்.

குறுவள மைய பயிற்சி
அதில், "கல்வி அமைச்சர் கவனத்திற்கு. கல்வித் துறையில் நீடிக்கும் குழப்பங்கள். கவனிக்கத் தவறும் உயர் அலுவலர்கள். இரண்டு விதமான ஆணைகள் வந்து உள்ளன. அனைத்து 6 ஆம் வகுப்பு முதல் 10 வகுப்புகள் வரையிலான மாணவர்களுக்கு கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு CRC குறுவள மையப் பயிற்சி நடைபெறும். நாளை கட்டாயம் 29.10.2022 கலந்து கொள்ள வேண்டும் என்று ஒரு சுற்றறிக்கை.

ஆதார் - வாக்காளர் அட்டை இணைப்பு பணி
மற்றொன்று... நாளையும் நாளை மறுதினமும் (29.10.2022 மற்றும் 30.10.2022 ஆகிய இரு தினங்களும்) BLO பணியில் இருக்கும் ஆசிரியர்கள் வீடு வீடாகச் சென்று ஆதார் எண் பெற்று ஆன்லைனில் இணைக்க வேண்டும் என்று ஒரு சுற்றறிக்கை. (மாவட்டக் கல்வி அலுவலர் தான் மாவட்ட ஆட்சித் தலைவரின் கடிதத்தை நகலாக இணைத்து அனுப்பியுள்ளார்).

வழிகாட்டுதல் இல்லை
இரண்டுமே தலைமை ஆசிரியர்களுக்கு வந்துள்ளது. சம்மந்தப்பட்ட ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்களிடம் சென்று எந்தப் பணிக்கு செல்வது எனக் கேட்டால் BRT (ஆசிரியர் பயிற்றுநர்)யிடம் கேளுங்கள் என்கின்றனர். BRT யிடம் கேட்டால் சரியான வழிகாட்டுதல் இல்லை என்கின்றனர். மாவட்டக் கல்வி அலுவலர்கள் தான் இதற்கு வழிகாட்டும் இடத்தில் இருக்கின்றனர்.

ஆசிரியர்கள் குழப்பம்
கலெக்டர் ஆர்டரைக் கடைபிடிக்கவா அல்லது கல்வித் துறையின் ஆர்டரைக் கைக்கொள்வதா? இரண்டு பக்கமும் விளக்கம் கேட்டு மெமோ தருவார்கள் ஆசிரியர்களுக்கு. ஏன் இந்தக் குழப்பம் இதையெல்லாம் கவனத்தில் கொள்ள கல்வி அமைச்சர் முன்வர வேண்டும். ஆனால் நாளைக்கு CRC க்கு போறதா BLO பணிக்கு போவதா? ஆசிரியர்கள் உளவியல் சிக்கல்களுக்கு ஆளாகிக் கொண்டுள்ளனர்." என்று குறிப்பிட்டு உள்ளார்.












Click it and Unblock the Notifications