போட்டித்தேர்வர்களுக்கான 'பொக்கிஷம்..' நோட்ஸ் எடுத்து வச்சிக்கோங்க.. ரீவைண்ட் 2022

Subscribe to Oneindia Tamil

சென்னை: 2022 ஆம் ஆண்டின் முக்கிய நிகழ்வுகளை அனைவரும் தெரிந்து கொள்ளும் வகையில் ஜனவரி - மார்ச் வரையிலான முக்கிய நிகழ்வுகளை இதற்கு முன்பு பார்த்தோம்.. தற்போது ஏப்ரல் - ஜூன் வரையிலான முக்கிய நிகழ்வுகளின் தொகுப்புகளை கீழே காணலாம்.

2022-ம் ஆண்டின் இறுதி கட்டத்தை எட்டி விட்டோம்.. இன்னும் ஏறக்குறைய 2 வாரங்களுக்குள் புத்தாண்டு பிறக்க உள்ளது. 2022 ஆம் ஆண்டு முடிவடையும் இந்த தருணத்தில் இந்த ஆண்டின் முக்கிய நிகழ்வுகளை தேதி வாரியாக தொகுத்து இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.

கடந்து வந்த பாதைகளின் நினைவுகளை அசைபோட்டு பார்க்கும் வகையிலும் போட்டித்தேர்வுகளுக்கு தயாராகி வருபவர்களுக்கு 'பொக்கிஷம்' போல சேமித்து வைத்து படிக்கக் கூடிய வகையிலும் நுணுக்கமாக தொகுத்து வழங்கபட்டுள்ளது. ஜனவரி - மார்ச் வரையிலான முக்கிய நிகழ்வுகளை இதற்கு முன்பு பார்த்தோம்.. தற்போது ஏப்ரல் - ஜூன் வரையிலான முக்கிய நிகழ்வுகளின் தொகுப்புகளை கீழே காணலாம்.

ஏப்: 1

இந்திய புவியியல் ஆய்வு மையத்தின் இயக்குநர் ஜெனரலாக டாக்டர் எஸ் ராஜு பொறுப்பேற்றார்.

ஏப்: 2

ஆந்திர பிரதேசத்தின் லெபக்‌ஷியில் உள்ள ஸ்ரீ வீரபத்ர சுவாமி கோவில் மற்றும் ஒற்றைக்கல் நந்தி யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய தற்காலிக பட்டியலில் சேர்க்கப்பட்டது.

ஏப்: 3

நியூசிலாந்தில் நடைபெற்ற மகளிர் உலக கோப்பை கிரிக்கெட்டில் இங்கிலாந்தை வீழ்த்தி ஆஸ்திரேலியா கோப்பையை வென்றது.

ஏப்: 04

2022 மியாமி ஓபன் டென்னிஸ் தொடரின் இறுதி போட்டியின் ஜப்பானின் நவோமி ஓசாகாவை வீழ்த்தி போலந்து வீராங்கனை இகா ஷ்வாடெக் பட்டம் ஒன்றார்.

ஏப்: 05

*இலங்கையில் பிரதமர் மகிந்த ராஜபக்சே தலைமையிலான அரசு பெரும்பான்மை இழந்து கவிழ்ந்தது.

*டெல்லி உயர் நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி முருகேசன் தலைமையில் தமிழக கல்வி கொள்கையை வடிவமைக்க குழு அமைக்கப்பட்டது .இந்தக் குழு ஓராண்டுக்குள் பரிந்துரை அளிக்கும் என முதல்வர் தெரிவித்தார்.

ஏப்: 07

*மருத்துவ படிப்புகளில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு செல்லும் என்று சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு உத்தரவிட்டது.

*சட்ட வல்லுனர்களுடன் ஆலோசித்து வன்னியருக்கான 10.5 சதவீத ஒதுக்கீட்டில் சமூக நீதி நிலைமை நாட்டப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் சட்டப்பேரவையில் உறுதி அளித்தார்.

*தமிழக அரசு நடத்தும் தகுதி தேர்வில் 12 ஆண்டுகளாக தேர்ச்சி பெறாத ஆசிரியர்கள் பணியில் நீடிக்க தகுதியற்றவர்கள் என்று சென்னை உயர் நீதிமன்றம் கூறியது. மேலும் நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டது.

ஏப்: 09

இலங்கையில் ராஜபக்சே சகோதர்கள் பதவி விலக வேண்டும் என போராட்டம் தீவிரம் அடைந்தது. அதிபர் மாளிகையை முற்றுகையிட்டு மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர்

ஏப்: 10

*இலங்கையில் பொருளாதார நெருக்கடி காரணமாக படகுகள் வழியாக தமிழகத்திற்கு அகதிகளாக நாள்தோறும் இலங்கை மக்கள் வருகை தரத் தொடங்கினார்.

*பூம்பூகார் மாநில விருதுக்கு தஞ்சாவூர் நெட்டி கைவினைக் கலைஞர் ஆர்.ராதா தேர்வு செய்யப்பட்டார்.

ஏப்: 11

*மத்திய பல்கலைக்கழகங்களுக்கான பொது நுழைவுத்தேர்வை ரத்து செய்ய வேண்டும் என சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றம்.

*தமிழகத்தில் புதிதாக 10 அரசு கலை அறிவியல் கல்லூரிகள் தொடங்கபடும் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்தார்.

*ஆந்திராவில் சுற்றுலாத்துறை அமைச்சராக ரோஜா பதவியேற்றார்.

*பாகிஸ்தானின் புதிய பிரதமர் ஆனார் ஷெபாஸ் ஷெரீப்

ஏப்: 12

*மருத்துவமனைகள் மற்றும் சுகாதார சேவை வழங்குதாரர்களுக்கான தேசிய அங்கீகார வாரியத்தின் புதிய தலைவராக மகேஷ் வர்மா நியமிக்கப்பட்டார்.

ஏப்: 13

*அம்பேத்கர் பிறந்த நாள் ஏப்.14 ஆம் தேதி சமத்துவ நாளாக கொண்டாடப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.

*இலங்கையில் போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார் என்று அந்நாட்டு பிரதமர் மகிந்த ராஜபக்சே அறிவித்தார்.

ஏப்: 14

*தமிழ்புத்தாண்டை ஒட்டி ஆளுநர் மாளிகையில் பாரதியார் சிலை திறக்கப்பட்டது.

*ஆளுநர் அளித்த தேநீர் விருதை தமிழக அரசு மற்றும் கட்சிகள் புறக்கணித்தன.அதிமுக, பாஜக பங்கேற்றன.

*போதைப்பொருள் விற்றால் சொத்துக்கள் முடக்கப்படும் என டிஜிபி சைலேந்ந்திர பாபு எச்சரிக்கை விடுத்தார்.

ஏப்: 15

*ஐஸ்லாந்தில் நடைபெற்ற ரெய்க்ஜாவிக் ஓபன் செஸ் போட்டியில் தமிழகத்தை சேர்ந்த பிரக்ஞானந்தா சாம்பியன் பட்டம் வென்றார்

ஏப்: 16

இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கினார். கோவிந்தா கோவிந்தா முழக்கத்துடன் பக்தர்க சாமி தரிசனம் செய்தனர்.

ஏப்;17

அரசு ஊழியர்களுடன் பழைய ஓய்வூதிய திட்டம் வல்லுநர் குழு அறிக்கையை பரிசீலித்து விரைவில் முடிவு செய்யப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

ஏப்: 20

*தமிழகத்தில் கொரோனா அதிகரிப்பு காரணமாக முகக்கவசம் அணிவது மீண்டும் கட்டாயம் ஆக்கப்பட்டது.

*அம்மா முழு உடல் பரிசோதனை மையம் அதி நவீன முழு உடல் பரிசோதனை மையமாக மாற்றப்பட்டது.

ஏப் 21

*கொடநாடு கொலை கொள்ளை வழக்கு தொடர்பாக சசிகலாவிடம் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தினர்.

*சர்வதேச போட்டிகளில் தமிழக வீரர்கள் சிறப்பாக விளையாட தயாராகும் வகையில் பிரம்மாண்ட விளையாட்டு நகரம் சென்னை அருகே உருவாக்கப்படும் என்று முதல்வர் அறிவித்தார்

ஏப்: 22

*பிரதமர் மோடியுடன் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது அணு சக்தி உள்ளிட்ட 6 ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.

2022 rewinds important events from April to march; notes for competitive exam aspirants

ஏப்: 24

*சென்னை கடற்கரை ரயில் நிலையத்தி நடைமடை மீது மின்சார ரயில் மோதி விபத்து ஏற்பட்டது,

ஏப்: 25

தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களை மாநில அரசே நியமிக்க அதிகாரம் அளிக்கும் மசோதா சட்டமன்றத்தில் நிறைவேறியது. அதிமுக பாஜக வெளிநடப்பு செய்தது

ஏப்: 23

ஒரு ஆண்டில் ஆறுமுறை கிராம சபைக் கூட்டம் நடத்தப்படும் என்றும் நவம்பர் 1 ஆம் தேதி உள்ளாட்சி நாள் கொண்டாடப்படும் எனவும் தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.

ஏப் 25

ஊட்டியில் தமிழக பல்கலைக்கழகம் , நிகர்நிலை பல்கலைக்கழகம், மத்திய பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்கள் பங்கேற்ற மாநாட்டை தமிழக கவர்னர் தொடங்கி வைத்தார்.

ஏப்: 26

6-12 வயது வரையுள்ள சிறார்களுக்கு கோவோக்சின் தடுபூசியை செலுத்த இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி கொடுத்தது.

ட்விட்டர் நிறுவனத்தை 3.10 லட்சம் கோடிக்கு விலைக்கு வாங்குவதாக எலான் மஸ்க் ஒப்பந்தம் மேற்கொண்டார்.

ஏப்: 28

மங்கோலியாவில் நடைபெற்ற ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் தொடரில் இந்திய மல்யுத்த அணி 1தங்கம், 5 வெள்ளி, 11 வெண்கல பதக்கங்களை வென்று 5 ஆம் இடம் பிடித்தது.

ஏப்: 29

தமிழகத்தில் சித்த மருத்துவ பல்கலைக்கழக வேந்தராக தமிழக முதல்வர் இருப்பதற்கான சட்ட மசோதா சட்டசபையில் நிறைவேறியது.

மே: 1

சென்னை - மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலை ' முத்தமிழ் அறிஞர் கலைஞர் கருணாநிதி சாலை' என அழைக்கப்படும் என்று முதல்வர் மு.கஸ்டாலின் அறிவித்தார்.

மே; 2

*கொரோனா தடுப்பூசி செலுத்துமாறு யாரையும் கட்டாயப்படுத்தக் கூடாது என்று மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

*மணிலாவில் நடைபெற்ற ஆசிய பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் பிவி சிந்து வெண்கல பதக்கம் வென்றார்.

மே 3

விசாரணைக் கைதிகளை இரவு நேரங்களில் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தக்கூடாது என்று டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவிட்டார்.

மே; 04

*ஜனாதிபதியும், ஆளுநரும் சட்டத்துக்கு உட்பட்டவர்கள் தான் என்றும் பேரறிவாளன் விடுதலை விவகாரத்தில் மத்திய அரசு முடிவை எடுக்காவிட்டால் அவரை விடுவிப்பது குறித்து நாங்களே முடிவெடுப்போம் என்று உச்ச நீதிமன்றம் கூறியது.

*கன்னியாகுமரியில் உள்ள வள்ளுவர் சிலைக்கு லேசர் வெளிச்சம் பெறச்செய்யப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது.

மே: 05

*தமிழக சட்டப்பேரவையில் 2-வது முறையாக நிறைவேற்றப்பட்ட நீட் மசோதாவை ஆளுநர் ஜனபதிக்கு அனுப்பி வைத்தார்.

*ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவை நிரந்தர உறுப்பு நாடாக இணைக்க பிரான்ஸ் ஆதரவு அளிக்கும் என்றும் அந்நாட்டு அதிபர் இமானுவேல் மேக்ரான் பிரதமர் மோடியிடம் உறுதி அளித்தார்.

*அனைத்து அரசு பேருந்துகளிலும் 5 வயது வரை உள்ள குழந்தைகள் இலவசமாக பயணம் செய்யலாம் என்று போக்குவரத்து துறை அமைச்சர் அறிவித்தார்.

மே 07

தமிழகத்தில் திமுக அரசு பதவியேற்று ஓராண்டு நிறைவு ஆனது. சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் பேசிய முதல்வர் ஸ்டாலின் தொடக்க பள்ளி மாணவர்களுக்கு காலை சிற்றூண்டி வழங்கும் திட்டத்தை அறிவித்தார்.

மே: 08

சென்னை மயிலாப்பூரில் தனியாக வசித்து வந்த தம்பதியை நகைக்காக கொலை செய்து விட்டு நேபாளம் தப்பிச்செல்ல முயன்ற கார் ஓட்டுநர் மற்றும் அவரது நண்பரை 6 மணி நேரத்தில் போலீசார் கைது செய்தனர். 5 கோடி மதிப்புள்ள நகைகள் மீட்கப்பட்டன.

மே: 09

*வங்கக் கடலில் உருவான புயலுக்கு இலங்கை வழங்கிய அசானி என்ற பெயர் சூட்டப்பட்டது. புயல் ஆந்திர மாநிலம் மச்ச்லிப்பட்டினம் - நர்சபுரம் அருகே கரையைக் கடந்தது.

*பொருளாதார நெருக்கடியால் இலங்கையில் போராட்டம் நடைபெற்றது. நாடு முழுவதும் கலவரம் வெடித்தது. மக்கள் எதிர்ப்புக்கு அஞ்சி பிரதமர் பதவியில் இருந்து மகிந்த ராஜபக்சே பதவி விலகினார்.

*கிருஷ்ணகிரி மாவட்டம் மயிலாடும்பாறையில் நடைபெற்ற அகழாய்வில் சுமார் 4,200 ஆண்டுகளுக்கு முன்பே தமிழர்கள் இரும்பை பயன்படுத்தியது தெரியவந்துள்ளதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.

மே 10

*இலங்கை முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சே வீட்டை போராட்டக்காரர்கள் முற்றுகையிட்டனர். இதனால் திரிகோணமலை கடற்படை தளத்தில் ராஜபக்சே குடும்பத்தினருடன் தஞ்சம் அடைந்தார்.

*ஆப்கானிஸ்தான் கலவரத்தில் கொல்லப்பட்ட புகைப்பட பத்திரிகையாளர் டேனிஷ் சித்திக் உள்பட 4 இந்தியர்களுக்கு புலிட்சர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டனர்.

* அன்னையர் தினத்தை ஒட்டி வடக்கு ரயில்வே சார்பில் இயக்கப்படுஜ்ம் ரயில்களில் தாயுடன் குழந்தைகள் தூங்க படுக்கை வசதியை இந்திய ரயில்வே அறிமுகம் செய்தது.

மே 11

*மக்கள் கிளர்ச்சி வெடித்த இலங்கைக்கு ராணுவத்தை அனுப்பும் திட்டம் இல்லை என்று இந்திய அரசு தெரிவித்தது.

*ஜிப்மரில் இந்தியை கட்டாயம் பயன்படுத்த வலியுறுத்தவில்லை என்று ஜிப்மர் இயக்குநர் விளக்கம் அளித்தார்.

மே 12

நாட்டின் புதிய தலைமை தேர்தல் ஆணையராக ராஜீவ் குமார் நியமனம் செய்யப்பட்டார்.

மே 13

பேரறிவாளன் விடுதலை விவகாரத்தில் ஜனாதிபதிதான் முடிவெடுக்க முடியும் என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு பதில் மனு தாக்கல்

மே 14

*விலை உயர்வை கட்டுப்படுத்தும் வகையில் கோதுமை ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை விதித்தது.

*திரிபுரா முதல்வர் பொறுப்பில் இருந்து பிப்லப் குமார் தேவ் ராஜினாமா செய்தார். இதையடுத்து புதிய முதல்வராக மாணிக் சஹா தேர்வு செய்யப்பட்டார்.

*தனுஷ்கோடியில் புதிய கலங்கரை விளக்கம் திறந்து வைக்கப்பட்டது. இலங்கையின் தலைமன்னார் வரை ஒளி தெரியும் வகையில் இந்த கலங்கரை விளக்கம் அமைக்கப்பட்டது.

மே 15

ஐக்கிய அரபு அமீரக அதிபராக ஷேக் முகம்மது தேர்வு செய்யப்பட்டார்.

மே 16

கலாசாரம் - கல்வி உள்ளிட்ட துறைகளில் இந்தியா -நேபாளம் உள்பட இடையே 6 ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.

மே 17

உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட 2 போர்க்கப்பல்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார் ராஜ்நாத் சிங்

*6 ஜி தொலைத்தொடர்பு சேவை 2030 க்குள் அமல்படுத்தப்படும் என்று பிரதமர் மோடி டிராய் வெள்ளி விழா நிகழ்ச்சியின் போது தெரிவித்தார். .

மே 18

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 30 ஆண்டுகள் சிறையில் இருந்த பேரறிவாளனை உச்ச நீதிமன்றம் விடுதலை செய்தது. உச்ச நீதிமன்றம் 142-வது சட்டப்பிரிவின் கீழ் தனக்கு உள்ள அதிகாரத்தை பயன்படுத்தி விடுதலை செய்தது.

*தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பான 3 ஆயிரம் பக்கங்கள் கொண்ட விசாரணை அறிக்கையை நீதிபதி அருணா ஜெகதீசன் முதல்வரிடம் வழங்கினார்.

* தமிழக அரசு சார்பில் இலங்கை மக்களுக்கு முதல் கட்டமாக ரூ. 45 கோடியில் அரிசி, பால் பவுடர் அத்தியாவசிய பொருட்கள் கப்பல் மூலம் அனுப்பி வைக்கப்பட்டது.

*உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட கப்பல் தகர்க்கும் ஏவுகணை சோதனை வெற்றி அடைந்தது.

மே 19

*பேரறிவாளன் விடுதலைக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சி அறப்போராட்டத்தில் ஈடுபட்டது.

*கால்நடைகளுக்கு ஆம்புலன்ஸ் சேவை திட்டம் ஆந்திராவில் தொடங்கப்பட்டது. டாக்டர் ஒய் எஸ்.ஆர். கால்நடை ஆம்புலன்ஸ் சேவை என இந்த திட்டத்திற்கு பெயர் தொடங்கப்பட்டது.

*உலக கோப்பை வில்வித்தையில் இந்தியாவுக்கு வெண்கல பதக்கம் கிடைத்தது.

*பாலியல் தொழிலாளிகள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க முடியாது என உச்ச நீதிமன்றம் உத்தரவு

மே 20

சென்னை எழும்பூர், மதுரை, கன்னியாகுமரி, ராமேஸ்வரம் , காட்பாடி ஆகிய 5 ரயில் நிலையங்கள் சர்வதேச தரத்திற்கு உயர்த்தப்படும் என மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்.

மே 21

*பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு அதிரடியாக குறைத்தது. பெட்ரோல் மீதான வரி லிட்டருக்கு 8-ம் டீசல் மீதான வரி 6-ம் குறைக்கப்பட்டது.

*குழந்தைகளின் வளர்ச்சியை கண்டறிவதற்கான 'ஊட்டச்சத்தை உறுதி செய்' திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

மே 22

செசபிஸ்ல் மாஸ்டர்ஸ் ஆன்லைன் ரேபிட் செஸ் போட்டியில் உலக சாம்பியனான மேக்னஸ் கார்சலனை இரண்டாம் முறையாக பிரக்ஞானந்தா தோற்கடித்தார்.

மே: 23

அமெரிக்கா, இந்தியா, ஜப்பான், ஆஸ்திரேலியா உள்ளிட்ட 13 நாடுகள் இணைந்து இந்தோ - பசிபிக் பொருளாதார வளர்ச்சி கூட்டமைப்பை உருவாக்கி உள்ளன.

மே 24

சுதந்திரம் பெற்ற பிறகு முதல் முறையாக மேட்டூர் அணை மே மாதம் பாசனத்திற்காக திறக்கப்பட்டது. இதற்கு முன்பாக 1942-45 ஆண்டுகளில் மே மாதத்தில் தண்ணீர் திறக்கப்பட்டு இருந்தது.

மே: 25

*குவாட் உச்சி மாநாடு ஜப்பானில் நடைபெற்றது. 2 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த மாநாடு நடைபெற்றது.

*பயங்கரவாத வழக்குகளில் சிக்கிய காஷ்மீர் பிரிவினை வாத தலைவர் யாசின் மாலிக்கிற்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

மே 26

*பிரதமர் மோடி சென்னை வருகை தந்தார். ரூ. 31,500 கோடி மதிப்பிலான திட்டங்களை பிரதமர் தொடங்கி வைத்தார்.

மே 27

*லடாக் பகுதியில் ராணுவ வீரர்கள் சென்ற வாகனம் ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் 7 வீரர்கள் உயிரிழந்தனர்.

*சதுரங்க கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தாவுக்கு இந்திய ஆயின் கார்பரேஷன் நிறுவனத்தில் பணி வழங்கப்பட்ட்டுள்ளது.

*கர்ப்பிணிகள் சுயமாக இணையதளத்தில் கர்ப்பத்தை பதிந்து அடையாள எண் பெறும் வசதியை மக்கள் நல்வாழ்வுத்தூறை அமைச்சர் மா.சுப்ரமணியன் தொடங்கி வைத்தார்.

* சர்வதேச அளவில் மிகவும் உயரியதாக கருதப்படும் புக்கர் பரிசு இந்தி எழுத்தாளர் கீதாஞ்சலி ஸ்ரீக்கு வழங்கப்பட்டது.

மே 28

சென்னை ஓமந்தூரார் தோட்டத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் சிலை திறக்கப்பட்டது. துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு இந்த சிலையை திறந்து வைத்தார்.

மே 29

*நேபாளத்தில் விமானம் ஆற்றில் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 4 இந்தியர்கள் உள்பட 22 பயணிகள் உயிரிழப்பு

*கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் இந்தியாவின் வெற்றி உலகத்திற்கு ஒரு பாடமாக அமைந்துள்ளது என்று பில்கேட்ஸ் பாராட்டினார்.

*15-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் குஜராத் டைட்ன்ஸ் அணி சாம்பியன் பட்டம் வென்றது.

மே 30

*உலக அளவில் வலிமையான விமானப்படை: சீனாவை பின்னுக்கு தள்ளி இந்தியா 3 ஆம் இடம் பிடித்தது. முதல் இரண்டு இடங்களில் முறையே அமெரிக்காவும் ரஷ்யாவும் உள்ளன. (டபிள்யூடிஎம்எம்ஏ) என்ற அமைப்பு இந்த பட்டியலை வெளியிட்டுள்ளது.

*நாட்டில் சோதனை முயற்சியாக குஜராத் மாநிலம் கட்ச் மாவட்டத்தில் ட்ரோன் மூலம் இந்திய அஞ்சல் துறை மருந்து பார்சல் விநியோகத்தை வெற்றிகரமாக நடத்தியது.

ஜூன் 1

இந்தோனேசியாவில் நடைபெற்ற ஆசிய கோப்பை ஹாக்கி போட்டியில் இந்திய அணி வெண்கல பதக்கம் வென்றது.

ஜூன் 2.

*சிங்கார சென்னை திட்டத்தின் கீழ் 1.81 கோடியில் வண்ண விளக்குகளால் ஒளிரூட்டப்பட்ட ரிப்பன் கட்டிடத்தை பொதுமக்களுக்கு முதல்வர் மு.க ஸ்டாலின் அர்ப்பணித்தார்.

*இந்தியா முழுவதும் வீட்டில் இருந்தபடியே கோவில் பட்டி கடலை மிட்டாய் பெறலாம் என்று அஞ்சல் துறை தெரிவித்தது. கிலோ ரூ.390 க்கு விநியோகிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

*உலக கோப்பை துப்பாக்கி சுடுதலில் இந்தியாவின் ஸ்வப்னில் வெள்ளி பதக்கம் வென்றார்.

ஜூன் 3

*தமிழகத்தில் இருந்து மாநிலங்களவை தேர்தலில் 6 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். திமுக: 3, அதிமுக 2, காங்கிரஸ் தரப்பில் 1 தேர்வு ஆகினர்.

*மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்த நாள் விழா அரசு விழாவாக கொண்டாடப்பட்டது.

ஜூன் 4

*சென்னை- புதுச்சேரி சொகுசு பயணிகள் கப்பல் சுற்றுலா திட்டத்தை முதல்வர் மு.க ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

*பீகார் தலைநகர் பாட்னா அருகே 2 ஆயிரம் ஆண்டுகள் பழமையான செங்கல் சுவர்களினால் கட்டப்பட்ட சுவர் கண்டுபிடிக்கப்பட்டது.

*பிரெஞ்சு ஓபன் மகளிர் ஒற்றையர் பிரிவில் போலந்து நாட்டின் ஸ்வியாடெக் சாம்பியன் பட்டம் வென்றார்.

ஜூன் 5

*உலக சுற்றுச்சூழல் தினத்தை ஒட்டி சுற்றுச்சூழலில் சிறப்பாக செயல்பட்ட ஆட்சியர்கள், பள்ளிகளுக்கு பசுமை விருதுகளை முதல்வர் வழங்கினார்.

*பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி ஆடவர் பிரிவில் ஸ்பெயினின் ரபேல் நடால் சாம்பியன் பட்டம் வென்றார்.

ஜூன் 8

*தமிழகத்தில் கடைகள் ,வணிக வளாகங்கள் 24 மணி நேரமும் இயங்க அனுமதி வழங்கப்பட்டது. 3 ஆண்டுகளுக்கு அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

*கேரள தங்க கடத்தல் வழக்கில் முதல்வர் பினராயி விஜயன் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு தொடர்பு இருப்பதாக ஸ்வப்னா சுரேஷ் பரபரப்பு குற்றச்சாட்டு முன்வைத்தார்.

ஜூன் 09

*மாமல்லபுரத்தில் நடைபெறும் செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான இலச்சினையை முதல்வர் வெளியிட்டார்.

*நடிகை நயன் தாரா - விக்னேஷ் சிவன் திருமணம் நடைபெற்றது. நடிகர் ரஜினிகாந்த், ஷாருக்கான் உள்பட திரையுலகம் திரண்டு வந்து வாழ்த்து தெரிவித்தது.

*சென்னை உயர் நீதிமன்றத்தில் முதல் பெண் 'சோப்தார்' ஆக திலானி என்பவர் நியமிக்கப்பட்டார்.

ஜூன் 10

*அகமதாபாத்தில் புதிய இஸ்ரோ வளாகத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.

*300 ஆண்டுகளுக்கு முன்பு 600 பேர் மற்றும் 1.5 லட்சம் கோடி தங்கத்துடன் மூழ்கிய சான் ஜோஸ் கப்பல் அருகே மேலும் 2 கப்பல்கள் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.

ஜூன் 11

*விலங்குகளுக்காக உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட அனோகோவாக்ஸ் என்கிற கொரோனா தடுப்பூசியை மத்திய அரசு அறிமுகப்படுத்தியது.

ஜூன் 13

*நேஷனல் ஹெரால்டு வழக்கில் ராகுல் காந்தியிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்தியது.

*அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கான 'எண்ணும் எழுத்தும்' திட்டத்தை முதல்வர் தொடங்கி வைத்தார்.

*ஆசியாவிலேயே மிக நீளமான தந்தங்களை கொண்ட யோகேஸ்வரா யானை கர்நாடக வனப்பகுதியில் இறந்தது. இந்த யானையின் ஒரு தந்தம் 2.54 மீட்டர் நீளமும் மற்றொரு தந்தம் 2.34 மீட்டர் நீளமும் கொண்டது.

ஜூன் 14

*முப்படைகளில் 4 ஆண்டுகள் சேவை செய்யும் பணியான அக்னி பாதை திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.

*பரத் கவுரவ் ரயில்கள் திட்டத்தின் கீழ் நாட்டின் முதல் தனியார் ரயில் கோவையில் இருந்து ஷீரடிக்கு சென்றது.

*அடுத்த 18 மாதங்களில் 10 லட்சம் மத்திய அரசு பணியிடங்களை நிரப்ப பிரதமர் மோடி உத்தரவிட்டார்.

ஜூன்: 16

*அதிமுகவில் ஒற்றைத்தலைமை விவகாரம் பூதாகரமாக வெடிக்கத் தொடங்கியது. அதிமுகவில் தன்னை யாரும் ஓரம் கட்ட முடியாது என்று ஓபிஎஸ் கூறினார்.

*மத்திய அரசு அறிவித்த புதிய அக்னிபாத் திட்டத்திற்கு எதிராக வடமாநிலங்களில் பெரும் போராட்டங்கள் வெடித்தன.

ஜூன் 17

*அக்னிபாதை திட்டத்தில் விரைவில் ஆள்சேர்ப்பு பணி தொடங்கும் என்று பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் அறிவித்தார். வயது வரம்பு 21-ல் இருந்து 23 ஆக உயர்த்தப்படுவதாகவும் அறிவித்தார்.

*அக்னிபாதை திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் 12 ரயில்களுக்கு தீ வைக்கப்பட்டன.

ஜூன் 18

*துணை ராணுவம், மத்திய பாதுகாப்பு படைகளில் அக்னிபாதை வீரர்களுக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்தது.

*காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாட்டுவில் அணை கட்ட விடமாட்டோம் என முதல்வர் மு.க ஸ்டாலின் திட்டவட்டமாக தெரிவித்தார்.

*துருக்கி நாட்டை எல்லா மொழிகளிலும் 'துருக்கியே' என்று அழைக்க வேண்டும் என்ற கோரிக்கையை ஐநா ஏற்றுக்கொண்டது.

ஜூன் 19

*வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இனைப்பதற்கான விதிமுறைகள் அடங்கிய அரசாணையை மத்திய அரசு வெளியிட்டது.

*அக்னிபாதை திட்டம் திரும்ப பெறப் படமாட்டாது என மத்திய அரசு திட்டவட்டமாக அறிவித்தது.

ஜூன் 20

*சென்னை மாமல்லபுரத்தில் நடைபெறும் செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான ஜோடி ஓட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். 75 நகரங்கள் வழியாக சென்னைக்கு இந்த ஜோதி வந்தடையும்

*தமிழகத்தில் 10,12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியானது. பிளஸ் 2-வில் 93.7 சதவீதமும் 10 ஆம் வகுப்பில் 90 சதவீத தேர்ச்சி விகிதமும் இருந்தது

*தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை விற்பனை செய்ய வேதாந்தா நிறுவனம் முடிவு செய்தது.

ஜூன் 21

*ஜனாதிபதி தேர்தலில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளராக திரவுபதி முர்மு அறிவிக்கப்பட்டார்.

*எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக யஷ்வந்த் சின்கா அறிவிக்கப்பட்டார்.

*சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு மைசூரு அரண்மனை வளாகத்தில் பிரதமர் மோடி யோகாசன பயிற்சியை மேற்கொண்டார்.

ஜூன் 23

*அதிமுக பொதுக்குழுவில் புதிதாக தீர்மானங்கள் நிறைவேற்ற நீதிமன்றம் தடை விதிப்பு..அடுத்த பொதுக்குழு ஜூலை 11 ஆம் தேதி நடைபெறும் என்று அதிமுக தரப்பில் அறிவிக்கப்பட்டது. கூட்டத்தில் பங்கேற்ற ஒபிஎஸ் மீது தண்ணீர் பாட்டில் வீசப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

*தகவல் தொடர்பு சேவைக்கான ஜிசாட் 24 செயற்கைக் கோள் விண்ணில் ஏவப்பட்டது.

ஜூன் 24

*நிதி ஆயோக் அமைப்பின் தலைவராக ஐ.ஏ.எஸ் அதிகாரியான பரமேஸ்வரன் ஐயர் நியமிக்கப்பட்டார்.

*அதிமுக பொதுக்குழு ஒப்புதல் கொடுக்காததால் ஒருங்கிணைப்பாளர்கள் பதவி காலாவதியாகிவிட்டதாக அதிமுகவின் எடப்பாடி பழனிசாமியை சந்தித்த பிறகு சிவி சண்முகம் பேட்டி அளித்தார்.

ஜூன் : 25

*அமெரிக்காவில் கருக்கலைப்பு செய்வதற்கு தடை விதித்தது நீதிமன்றம்: 50 ஆண்டுகளாக அமலில் இருந்த கருக்கலைப்பு சட்ட உரிமை நீக்கப்பட்டது. இது ஒரு துக்கரமான நாள் என ஜோ பைடன் தெரிவித்தார்.

*குஜராத் கலவர வழக்கில் பிரதமர் மோடி குற்றமற்றவர் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

*உலக கோப்பை வில்வித்தையில் ஜோதி , அபிஷேக் ஜோடி தங்க பதக்கம் வென்றது.

*தமிழகத்தை சேர்ந்த மூத்த பத்திரிகையாளர் மாலன் எழுதிய 'ஒரு பிணந்தூக்கியின் வரலாற்று குறிப்புகள்' என்கிற நூல் சாகித்ய அகடமி மொழிபெயர்ப்பு விருதுக்கு தேர்வு ஆனது.

ஜூன் 27

*ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கு தடை விதிக்க அவசர சட்டம் கொண்டு தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

*ஜெர்மனியின் ஜி 7 நாடுகளின் மாநட்டு நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி கலந்து கொண்டார்.

ஜூன் 28

*ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருள்களுக்கு ஜூலை 1 முதல் தடை விதிக்கப்படும் என மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பூபேந்திர யாதவ் அறிவிப்பு

*ரிலையன்ஸ் ஜியோ தலைவராக ஆகாஷ் அம்பானி நியமிக்கப்பட்டார்.

ஜூன் 29

*மகாராஷ்டிராவில் சிவசேனாவில் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் அதிருப்தி எம்.எல்.ஏக்கள் அணி வகுத்தனர். இதனால், ஆட்சி கவிழும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து உத்தவ் தாக்கரே முதல்வர் பொறுப்பில் இருந்து விலகினார்.

ஜூன் 30

*ஆஸ்கர் விருது குழுவில் கலை அறிவியல் குழு உறுப்பினராக அழைக்கப்பட்ட முதல் தென்னிந்திய நடிகர் என்ற பெருமையை சூர்யா பெற்றார்.

*மகாராஷ்டிராவின் முதல்வராக ஏக்நாத் ஷிண்டே பதவியேற்றார்.

*சிங்கப்பூரின் செயற்கைகோள் உள்பட 3 செயற்கை கோள்களுடன் பி.எஸ்.எ.வி சி -53 ராக்கெட் விண்ணில் பாய்ந்தது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+