ஒன்ஸ்மோர் மோடி 2024... ஜாதகம் சாதகமா? நவகிரகங்களின் கூட்டணி சொல்வதென்ன
2024ஆம் ஆண்டு லோக்சபா தேர்தலில் யாருக்கு வெற்றி கிடைக்கும்... மோடியே மீண்டும் பிரதமராக வாய்ப்பு உள்ளதா?ஜோதிடர்கள் சொல்வதைப் பார்க்கலாம்.
சென்னை: இந்தியாவின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான லோக்சபா தேர்தல் இன்னும் இரண்டு ஆண்டுகளில் நடைபெற உள்ளது. 2024ஆம் ஆண்டு நடைபெற உள்ள லோக்சபா தேர்தலுக்கு இப்போதிருந்தே அரசியல் கட்சியினர் வியூகம் வகுக்க ஆரம்பித்து விட்டனர். இரண்டு முறை வென்று ஆளும்கட்சியாக உள்ளது பாஜக. மோடி பிரதமராக உள்ள நிலையில் 2024ஆம் ஆண்டு லோக்சபா தேர்தலில் வென்று ஆட்சியமைப்பது யார் நவகிரகங்களின் கூட்டணி சொல்வதென்ன என்று ஜோதிடர்களும் கணித்து கூறியுள்ளனர்.
வருகிற 2024 ஆம் ஆண்டு பிரதமரை தேர்வு செய்வதற்கான லோக் சபா தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த நிலையில் ஜெர்மனி வாழ் இந்தியர்கள் மீண்டும் மோடியே தங்கள் பிரதமராக வர வேண்டும் என ஆராவாரம் செய்திருப்பது தற்போது இணையத்தில் விவாத பொருளாக மாறியிருக்கிறது.
ப்ளூம்பெர்க் செய்தி நிறுவனம் கடந்த 2018ஆம் ஆண்டு ஒரு முக்கியமான ஒரு ஆய்வறிக்கையை வெளியிட்டது.அந்த ஆய்வில் ஒவ்வொரு நாட்டின் தற்போது அதிபர்கள் இன்னும் எத்தனை வருடங்கள் அதிபர்களாகவும், பிரதமராகவும் இருப்பார்கள் என்று பட்டியலிட்டுள்ளது.அந்த ஆய்வில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி 2019இல் நடக்கும் பொதுத் தேர்தலில் மீண்டும் வெற்றிப்பெறுவார். இதுமட்டும் அல்லாமல் மோடி தலைமையிலான ஆட்சி இந்தியாவில் 2024ஆம் ஆண்டு வரையில் தொடரும் எனவும் தெரிவித்திருந்தது.

மோடியின் ஆற்றல்
பொதுவாக ஒருநபர், நாட்டின் பிரதமராகவோ, ஜனாதிபதியாகவோ மிக உயர்ந்த பதவிக்கு வர வேண்டுமானால், அந்த நபரின் ஜாதகத்தில் உள்ள 10ம் இடத்தின் ராசியும், லக்னமும் அவருக்கு உதவி செய்யும் வகையில் இருக்க வேண்டும். 10 ம் இடம் பதவியைக் கொடுத்தாலும், அந்த பதவியை நிர்வகிக்கும் ஆற்றலும் தக்க வைக்கும் திறமையும், இருந்தால் தான் அவரால் இருக்க வேண்டி யது மிகவும் அவசியமாகும். அந்த ஆற்றல் மோடியிடம் இருக்கிறது.

மோடியின் ஜாதகம் சாதகமே
இதை அவருக்குஅளிப்பதும் அவருடைய யோகஜாதகம் தான் மோடியின் ஜாதகத்தில் எண்ணற்ற யோகங்கள் அமைந்துள்ளனவாம் . சந்திர மங்கள யோகம், குரு சந்திர யோகம், குரு மங்கள யோகம், மாளவிகா யோகம் . புதஆதித்ய யோகம், நீச்ச பங்க ராஜயோகம், ருசக யோகம், கஜகேசரி யோகம் என்று ஏகப்பட்ட யோகங்கள் மோடியின் ஜாதகத்தில் வரிசை கட்டி வருகிறது. அதனால் மோடியை 2029 ம்ஆண்டு வரை பிரதமர் பதவியில் இருந்து அசைக்க முடியாது என்று அவருடைய ஜாதகம் கூறுகிறது.

வெற்றி தரும் ராஜயோகம்
ஜாதகத்தில் உள்ள யோகங்கள் ஒருவருக்கு வெற்றியை பெற்றுத்தருகின்றன.அதிலும் ராஜயோக ஜாதகம் இருந்தால் ஒருவருக்கு அரசாளும் யோகம் தேடி வரும்..என்பதற்கு மோடியையே உதாரணமாக கூறலாம்.1950 ம்ஆண்டு செப்டம்பர் மாதம் 17 ம் தேதி பகல் 11 மணிக்கு பிறந்த மோடியின் ராசி மற்றும் லக்கினம் விருச்சிகம் அனுசம் நட்சத்திரம்.

முதல்வரான மோடி
மோடி 1985க்கு பிறகு தீவிர அரசியலில் இருந்தாலும் 15 ஆண்டுகள் வரை அரசியல் மூலமாக ஒரு கவுன்சிலராக கூட மோடி இருந்தது இல்லை. ஆனால் 2001ஆம் ஆண்டில் குஜராத் மாநிலத்தில் நடைபெற்ற பூகம்பத்தினால் அப்பொழுது குஜராத் முதல்வராக இருந்த கேசபாய்படேலுக்கு மக்களிடம் எதிர்ப்பு கிளம்ப இந்த எதிர்ப்பை குறைக்கவே மோடி முதல்வராக்கப்பட்டார்.

தேடி வந்த பதவி
முதல்வர் பதவி தேடி வந்துள்ளது. இதுதான் ராஜயோகம். மோடியின் ஜாதகத்தில் மகாராஜா யோகம் இருந்ததால் தான் அப்பொழுது குஜராத்தில் கேசபாய் படேலுக்குஅடுத்து பல தலைவர்கள் பாஜகவில் இருந்தும் மோடி குஜராத் முதல்வராக வர முடிந்தது. இந்த மகாராஜா யோகம் இருந்தால் ஒருத்தர் என்ன நினைத்தாலும் சாதிக்க முடியுமாம். இந்த யோகத்தைப் பெற்றவர்கள் என்ன செய்தாலும், அது வெற்றியாகவே முடியும். அவர்களை யாராலும் எந்த விதத்திலும் அசைக்க முடியாது.

நவகிரகங்களும் சாதகம்
கட்சிகளின் கூட்டணி ஒருபக்கம் இருந்தாலும் கிரகங்களின் கூட்டணி, தசாபுத்தி, ஜாதக அமைப்பும் ஆட்சிக்கட்டிலில் அமரப்போகிறவரின் வெற்றியைத் தீர்மானிக்கிறது. அரசியல்வாதிகள் பலரும் ஜோதிடர்களின் ஆலோசனைப்படியே பல முடிவுகளை எடுக்கின்றனர். கடவுளை நம்பாத தலைவர்கள் கூட கடந்த சில ஆண்டுகளாக பரிகார பூஜைகள், ஜோதிட ஆலோசனைகளை செய்து வருகின்றனர். பொதுவாகவே கிரகப் பெயர்ச்சிக்கும், அரசியலுக்கும் தொடர்பு உண்டு. 2024ஆம் ஆண்டு சனி பகவான் கும்ப ராசியில் பயணம் செய்வார். குரு பகவான் ரிஷப ராசியில் பயணம் செய்வார். அப்போது சனி, குருவின் பார்வை விருச்சிக ராசிக்கு கிடைக்கிறது. அதே போல ராகு மீன ராசியிலும் கேது கன்னி ராசியிலும் பயணம் செய்வார். பாம்பு கிரகங்களின் பயணமும் மோடிக்கு சாதகமாகவே உள்ளது.

யோக ஜாதகம்
மோடி ஜாதகத்தில் பல யோகங்கள் அணி வகுத்து நிற்கின்றன. அவரை மீண்டும் பிரதமர் பதவியில் உட்கார வைக்க 100 சதவிகித வாய்ப்புள்ளது என்கிறார்கள் ஜோதிடர்கள். 2021ம் ஆண்டு மோடிக்கு சந்திர திசை முடிந்து செவ்வாய் திசை தொடங்கியுள்ளது. செவ்வாய் திசை 7 ஆண்டுகள் அதாவது 2028ஆம் ஆண்டு வரை நீடிக்கும். இந்த 7 ஆண்டுகளும் மோடியின் வாழ்க்கையில் பொற்காலமாக இருக்கும். நாட்டில் நிறைய மாற்றங்களை செய்வார் என ஜோதிடர்கள் கணித்துள்ளனர்.

அசைக்கவே முடியாது
இந்தியா உலகின் வல்லரசாக உலகில் இருக்கும் என்கிறார்கள். இதைத் தான் மோடியும் 2029 ல் இந்தியா உலகின் 2 வது பொருளாதார நாடாக இருக்கும் என்கிறார். எனவே மோடியின் ஜாதகம் இந்தியாவுக்கு சாதகமாக இருப்பதால் இந்தியாவையும் யாரும் இனி அசைக்க முடியாது. இந்தியாவை ஆளும் மோடியையும் 2029 வரை அசைக்கவே முடியாது என்று கூறுகின்றனர் ஜோதிடர்கள்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications