சென்னையில் 21 ரயில்கள் ரத்து.. மார்ச் 17ல் நடக்கும் பராமரிப்பு பணியால் முக்கிய அறிவிப்பு
சென்னை: சென்னை சென்ட்ரல் - கூடூர் பிரிவில் வரும் 17 ம் தேதி பராமரிப்பு பணி நடைபெற உள்ளது. இந்த பணியின் காரணமாக அன்றைய தினம் 21 ரயில்கள் ரத்து செய்யப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதுதொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
சென்னை சென்ட்ரல் - கூடூர் பிரிவில் கவரைப்பேட்டை மற்றும் பொன்னேரி ரயில் நிலையங்களுக்கு இடையே இன்ஜினியரிங் பணி உள்பட பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இந்த பராமரிப்பு பணி என்பது மார்ச் 17 ம் தேதி காலை 9.25 மணி முதல் மதியம் 2.25 மணி வரை நடைபெற உள்ளது.

இந்த பணியின் காரணமாக அந்த பாதையில் இயங்கும் மின்சார ரயில்கள் உள்பட 21 ரயில்கள் முழுவதுமாக ரத்து செய்யப்பட உள்ளன. இதனால் பொதுமக்கள் மாற்று பிளானை கையில் எடுத்து கொள்வது நல்லது.
அதன்படி மார்ச் 17 ம் தேதி காலை 5.40 மணிக்கு மூர் மார்க்கெட் வளாகத்தில் இருந்து புறப்படும் மூர்மார்க்கெட் காம்ப்ளக்ஸ் -சூலூர் பேட்டை மெமு பயணிகள் ரயில் (வண்டி எண்: 66029), காலை 8 மணிக்கு புறப்படும் சூலூர் பேட்டை - நெல்லூர் மெமு ரயில்(66035), காலை 8.05 மணிக்கு புறப்படும் மூர் மார்க்கெட் - கும்மிடிப்பூண்டி மின்சார ரயில் (42007), காலை 8.35 மணிக்கு புறப்படும் மூர் மார்க்கெட் காம்ப்ளக்ஸ் - சூலூர்பேட்டை மின்சார ரயில் (43411), காலை 9 மணிக்கு புறப்படும் மூர் மார்க்கெட் காம்ப்ளக்ஸ் - கும்மிடிபூண்டி மின்சார ரயில் (42009), காலை 9.30 மணிக்கு இயங்கும் மூர் மார்க்கெட் காம்ப்ளக்ஸ் - கும்மிடிபூண்டி மின்சார ரயில் (42011) உள்ளிட்டவை ரத்து செய்யப்பட உள்ளது.
அதேபோல் காலை 9.30 மணிக்கு புறப்படும் சென்னை கடற்கரை - கும்மிடிப்பூண்டி மின்சார ரயில் (42601), காலை 10.15 மணிக்கு புறப்படும் மூர் மார்க்கெட் காம்ப்ளக்ஸ் - சூலூர்பேட்டை மின்சார ரயில், காலை 10.30 மணிக்கு புறப்படும் மூர் மார்க்கெட் காம்ப்ளக்ஸ் - கும்மிடிபூண்டி மின்சார ரயில்(42013), காலை 11.45 ணிக்கு புறப்படும் மூர் மார்க்கெட் காம்ப்ளக்ஸ் - கும்மிடிபூண்டி மின்சார ரயில் (42015) ஆகியவை ரத்து செய்யப்பட உள்ளது.
மேலும் காலை 34.25 மணிக்கு புறப்படும் ஆவடி - மூர் மார்க்கெட் காம்ப்ளக்ஸ் மெமு ரயில் (66000), காலை 9.55 மணிக்கு புறப்படும் கும்மிடிப்பூண்டி - மூர் மார்க்கெட் காம்பளக்ஸ் மின்சார ரயில் (42016), காலை 10 மணிக்கு இயங்கும் சூலூர்பேட்டை - மூர் மார்க்கெட் காம்ப்ளக்ஸ் மின்சார ரயில் (42408), காலை 10.20 மணிக்கு புறப்படும் நெல்லூர் - சூலூர்பேட்டை மெமு ரயில் (66036), காலை 10.55 மணிக்கு புறப்படும் கும்மிடிப்பூண்டு -சென்னை கடற்கரை மின்சார ரயில் (42604) ஆகியவை ரத்து செய்யப்பட உள்ளது.
அதேபோல் காலை 11.25 மணிக்கு புறப்படும் கும்மிடிபூண்டி - மூர் மார்க்கெட் காம்ப்ளக்ஸ் மின்சார ரயில் (42018), காலை 12 மணிக்கு புறப்படம் கும்மிடிப்பூண்டு - மூர் மார்க்கெட் காம்ப்ளக்ஸ் மின்சார ரயில் (42020), காலை 11.45 மணிக்கு புறப்படும் சூலூர்பேட்டை - மூர் மார்க்கெட் காம்ப்ளக்ஸ் மின்சார ரயில் (42410), மதியம் 12 மணிக்கு புறப்படும் சூலூர்பேட்டை - மூர் மார்க்கெட் காம்ப்ளக்ஸ் மெமு ரயில் (66030), மதியம் 1 மணிக்கு புறப்படும் கும்மிடிப்பூண்டி - மூர் மார்க்கெட் காம்ப்ளக்ஸ் மின்சார ரயில் (42022), மதியம் 1.15 மணிக்கு புறப்படும் சூலூர் பேட்டை -மூர் மார்க்கெட் காம்ப்ளக்ஸ் மின்சார ரயில் (42414) ஆகியவை மார்ச் 17 ம் தேதி ரத்து செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
-
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக் -
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
சென்னை புதிய ஆட்சியர் எஸ். மாலதி ஹெலன் IAS.. விஜய் களமிறக்கிய மாஸ்டர்மைண்ட்.. யார் இவர்? -
தாய் இறந்த துக்கத்திலும்! பாதுகாப்பு கொடுத்த போலீஸாருக்கு கையெடுத்து கும்பிட்டு நன்றி சொன்ன அஜித் -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
சென்னை கோயம்பேடு பாரில் டான்ஸ் ஆடும் போது தகராறு: கார் ஏற்றி இளம்பெண் கொலை! 6 பேர் கைது! பரபர தகவல் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
விஜய்-க்கு புது சவால்.. 13 மாசமாச்சு.. சென்னை ஏர்போர்ட் - கிளாம்பாக்கம் மெட்ரோ திட்டத்தை மறந்த மத்திய அரசு! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன்












Click it and Unblock the Notifications