சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சென்னையில் அதிகரித்த பஸ்கள் எண்ணிக்கை.. 230 பேருந்துகள் இயக்கம்

Google Oneindia Tamil News

சென்னை: 50% அளவுக்கான அரசு ஊழியர்கள் கடந்த திங்கள்கிழமை முதல் பணிக்கு திரும்ப உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில், சென்னையில் பஸ்கள் எண்ணிக்கையை, மாநகர போக்குவரத்து கழகம் அதிகரித்துள்ளது.

கடந்த திங்கள்கிழமை முதல், நான்காவது கட்ட லாக்டவுன், நாடு முழுக்க துவங்கியுள்ளது. மே 31-ஆம் தேதி வரை இந்த லாக்டவுன் நீடிக்கும். இந்த ஊரடங்கு காலத்தில் முன்பைவிட பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

230 government buses are operating in Chennai

இந்த நிலையில் சென்னை மாநகரில் இன்று 200 அரசு பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்து கழக மேலாண் இயக்குனர் கணேசன் அறிவித்தார். தலைமை செயலகத்துக்கு ஏற்கனவே உள்ள 25 பேருந்துகளுடன் கூடுதலாக 25 பேருந்துகள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

மிகவும் அத்தியாவசியம் கொண்ட துறைகளான, பொதுப் பணித்துறை, மின்சாரம், காவல்துறை உள்ளிட்டவற்றை தவிர அனைத்து வகை அரசு ஊழியர்களும், 50 சதவீதம் வரை, திங்கள்கிழமை முதல் பணிக்கு செல்லலாம். தங்கள் சொந்த செலவில் அடிப்படையில்தான் அவர்கள் செல்ல வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அம்பன் புயலை அசத்தலாக கையாண்ட IMD.. கில்லி மாதிரி சொல்லியடித்து.. பல உயிர்களை காப்பாற்றியதுஅம்பன் புயலை அசத்தலாக கையாண்ட IMD.. கில்லி மாதிரி சொல்லியடித்து.. பல உயிர்களை காப்பாற்றியது

அத்தியாவசிய தேவை, அவசரப்பணி, 50% அரசு ஊழியர்களுக்காக மார்ச் 25 முதல் 175 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. தற்போது திங்கள்கிழமை முதல், கூடுதலாக 25 பஸ்கள் இயக்கப்பட ஆரம்பித்தது.

ஆனால் அரசு ஊழியர்கள் பல இடங்களிலிருந்தும் தங்களுக்கு இன்னும் பஸ் சேவை ஆரம்பிக்கப்படவில்லை என புகார் கூறினர். எனவே நேற்று முதல் கூடுதலாக 30 பஸ்கள் சென்னையில் இயங்க ஆரம்பித்துள்ளன.

English summary
With 50% of government employees returning to work, it has been announced that 230 government buses are operating in Chennai city.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X