சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

நாம் தமிழர் உட்பட பல கட்சிகளில் இருந்து விலகி.. திமுகவில் இணைந்த 3000 பேர்! ராஜீவ் காந்தி 'சம்பவம்'

Google Oneindia Tamil News

சென்னை: நாம் தமிழர் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளில் இருந்து விலகி 3,000 பேர் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுகவில் இன்று இணைந்தனர்.

நடிகை மஞ்சு வாரியரின் உயிருக்கு ஆபத்தா?.. 4 நாட்களாக காணவில்லை? பிரபல இயக்குநர் பரபரப்பு பதிவு! நடிகை மஞ்சு வாரியரின் உயிருக்கு ஆபத்தா?.. 4 நாட்களாக காணவில்லை? பிரபல இயக்குநர் பரபரப்பு பதிவு!

நாம் தமிழர் கட்சியின் இளைஞர் பாசறை நிர்வாகிகளாக இருந்த பேராசிரியர் கல்யாணசுந்தரம், வழக்கறிஞர் ராஜீவ் காந்தி ஆகியோர் 2 ஆண்டுகளுக்கு முன்னர் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு எதிராக கலகக் குரல் எழுப்பினர். இதனையடுத்து இருவரும் நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகினர். பேராசிரியர் கல்யாணசுந்தரம், அதிமுகவில் இணைந்தார். வழக்கறிஞர் ராஜீவ் காந்தி, திமுகவில் இணைந்தார்.

மாற்று கட்சியினர் 3,000 பேர்

மாற்று கட்சியினர் 3,000 பேர்

திமுகவில் தற்போது செய்தித் தொடர்பு இணைச் செயலராக இருந்து வருகிறார் ராஜீவ் காந்தி. அவரது ஏற்பாட்டில் நாம் தமிழர் உட்பட பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த 3,000 பேர் இன்று திமுகவில் இணைந்தனர். இதற்கான விழா சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது.

ராஜீவ் காந்திக்கு பாராட்டு

ராஜீவ் காந்திக்கு பாராட்டு

திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் 3,000 பேரும் திமுகவில் இன்று இணைந்தனர். திமுகவில் இணைந்தவர்களை வரவேற்றுப் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், ராஜீவ்காந்தியின் செயல்பாடுகளை குறிப்பாக தொலைக்காட்சி விவாதங்களில் அவரது அணுகுமுறையை வெகுவாகப் பாராடினார்.

திமுக அரசின் சாதனை

திமுக அரசின் சாதனை

மேலும் 10 ஆண்டுகளில் செய்ய வேண்டிய சாதனைகளைவிட அதிகமாக திமுக அரசு இந்த ஓராண்டில் செய்துள்ளது. தி.மு.க-வை பொறுத்தவரை ஆட்சியில் இருந்தாலும் இல்லையென்றாலும் மக்களுக்காக தொண்டாற்றும் என்பது மறுக்க முடியாது என்று கூறினார் முதல்வர் மு.க.ஸ்டாலின். மேலும் இன்னும் 2 ஆண்டுகளில் திமுகவின் 75-வது ஆண்டு விழா நடைபெற உள்ளது என்றும் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.

திமுக ஆட்சி சாதனை பட்டியல்

திமுக ஆட்சி சாதனை பட்டியல்

அத்துடன் ஆட்சி என்பது சொகுசு வாழ்க்கைக்கான பதவி இல்லை; ஆட்சியில் இருந்தால் மக்களுக்கு தொண்டாற்றலாம். ஆட்சியில் இல்லை எனில் மக்களுக்குப் போராட வாதாடலாம் என்பதுதான் திமுக. தற்போதைய ஆட்சியில் அரசு பணிகள் தமிழருக்குதான் என்பது உறுதியாக்கப்பட்டுள்ளது. போட்டி தேர்வுகளில் தமிழ் மொழி தேர்வு தகுதி தேர்வாக்கப்பட்டுள்ளது. ஆலயங்களில் அன்னை தமிழ் ஒலிக்க தொடங்கி உள்ளது. தமிழ் மொழியில் மாவட்ட அரசு ஊழியர்கள் கையெழுத்து போட்டாகும் நிலை உருவாக்கப்பட்டுள்ளது எனவும் பட்டியலிட்டார் முதல்வர் ஸ்டாலின். இந்த நிகழ்ச்சியில் திமுகவின் மூத்த தலைவர்கள் பலரும் பங்கேற்றனர்.

English summary
3,000 Cadres from various parties including Naam Tamilar Party had joined DMK on Monday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X