கொட்டித்தீர்த்த கனமழையால் வேகமாக நிரம்பும் செம்பரம்பாக்கம் ஏரி - 3000 கன அடி நீர் திறப்பு
செம்பரம்பாக்கம் ஏரிக்கு விநாடிக்கு 6000 கனஅடியாக நீர்வரத்து அதிகரித்துள்ளதால் ஏரியில் இருந்து விநாடிக்கு 3000 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
சென்னை: செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து விநாடிக்கு 3000 கன அடி உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. செம்பரம்பாக்கம் ஏரிக்கு 6000 கனஅடி நீர் வரத்து உள்ளதால் திறந்து விடப்படும் உபரிநீரின் அளவும் அதிகரித்துள்ளது. ஒரு புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக கூடுதல் மழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதால் உபரிநீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாக நீர்வள ஆதாரத் துறையினர் தெரிவித்தனர்.
வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளதால் ஏரிகளின் நீர்மட்டம் மளமளவென உயர்ந்தது. செம்பரம்பாக்கம் ஏரி வேகமாக நிரம்பியதால், கடந்த 7ஆம் தேதி உபரிநீர் திறந்து விடப்பட்டது. சில தினங்களாக மழை இல்லாத காரணத்தால் உபரிநீர் திறப்பு 250 கன அடியாக குறைக்கப்பட்டது.
சென்னை,திருவள்ளூரில் நேற்றிரவு பெய்ய தொடங்கிய மழை ஆனது தொடர்ந்து விட்டு விட்டு பெய்து வருகிறது. நேற்று இரவு முதல் பெய்து வரும் கன மழையால் சென்னை நுங்கம்பாக்கம் ,கோயம்பேடு , கோடம்பாக்கம், போரூர், மயிலாப்பூர் ஆகிய பகுதிகளிலும், தாம்பரம் ,பல்லாவரம், மீனம்பாக்கம் ,அம்பத்தூர் ,பூந்தமல்லி ஆகிய புறநகர் பகுதிகளிலும் வெள்ளநீர் சூழ்ந்துள்ளது.

உபரி நீர் திறப்பு
திருவள்ளூர் மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக செம்பரம்பாக்கம் ஏரிக்கு வரும் நீரின் அளவு அதிகரித்துள்ளது. இதனால் செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு வினாடிக்கு 3000 கன அடியாக அதிகரித்துள்ளது.

நீர் வரத்து அதிகரிப்பு
சென்னைக்கு குடிநீர் வழங்கும் செம்பரம்பாக்கம் ஏரியில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடந்த 7ஆம் தேதி உபரிநீர் வெளியேற்றப்பட்டது. முதலில் 250 கன அடி நீர் திறந்து விடப்பட்டு பின்னர் மழையால் நீர்வரத்து காரணமாக படிப்படியாக 2000 அடி வரை உயர்த்தப்பட்டது. பின்பு மழை ஓய்ந்ததால் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து வெளியேற்றப்படும் உபரி நீரின் அளவும் படிப்படியாக குறைக்கப்பட்டது.

22 அடியாக உயர்வு
இந்த நிலையில் கடந்த 25, 26, 27 ஆகிய தேதிகளில் சென்னை, காஞ்சி திருவள்ளூர் மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வுமையம் அறிவித்ததை அடுத்து கடந்த மூன்று தினங்களாக செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 2,000 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. மொத்த நீர் இருப்பு 24 அடி என்கிற நிலையில் தற்போது 22.05 அடியாக உள்ள நிலையில் ஏரியின் நீர் மட்டத்தை 22 அடியில் நிலையாக வைக்கப் பொதுப்பணித்துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

மழை அதிகரிப்பு
இன்று காலை நிலவரப்படி செம்பரம்பாக்கம் ஏரிக்கு 6000 கன அடி நீர் வரத்தும், ஏரியில் இருந்து 3,000 கன அடி நீர் உபரிநீரும் வெளியேற்றப்பட்டு வருகிறது. தொடர்ந்து மழை நீடித்தால் ஏரிக்கு நீர்வரத்து அதிகரிக்கக்கூடும் என அதிகாரிகள் தெரிவித்த நிலையில் தற்போது நீர் வெளியேற்றம் உயர்த்தப்பட்டுள்ளது. ஏரியின் மொத்த கொள்ளளவான 3,645 மில்லியன் கனஅடி நீரில் 2,890 மில்லியன் கன அடி நீர் இருப்பு உள்ளது. அதேபோல் 24 அடி நீர்மட்ட உயர்வில் தற்போது 21.13 அடி உயர்ந்துள்ளது.

2015 மழை வெள்ளம்
கடந்த 2015ஆம் ஆண்டு டிசம்பர் 2ஆம் தேதி பெய்த பெருமழை காரணமாக செம்பரம்பாக்கம் ஏரி நிரம்பியது. தொடர்மழையால் நீர்வரத்து அதிகரிக்கவே, திடீரென செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து அதிக அளவிலான நீர் திறக்கப்பட்டது. அடையாற்றில் ஏற்கனவே வெள்ளம் சென்ற நிலையில் செம்பரம்பாக்கம் ஏரியும் திறக்கப்பட்டதால் சென்னையில் பெருவெள்ளம் சூழ்ந்தது நினைவிருக்கலாம். அதுபோல ஒரு சூழ்நிலை மீண்டும் வரக்கூடாது என்பதற்காகவே அவ்வப்போது ஏரியில் இருந்து உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
Recommended Video

புதிய காற்றழுத்தம்
ஒரு புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக கூடுதல் மழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதால் உபரிநீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாக நீர்வள ஆதாரத் துறையினர் தெரிவித்தனர். தொடர் மழை காரணமாக கடந்த 20 நாட்களாக செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து தொடர்ந்து நீர் வெளியேற்றப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது
-
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி?












Click it and Unblock the Notifications