Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பெட்ரோல்,டீசல் மூலம் 4.5 லட்சம் கோடி வருமானம் - விலை உயர்வை மோடி கொண்டாடுவாரா? - ப.சிதம்பரம் விளாசல்

பெட்ரோல், டீசலுக்கு விதிக்கப்படும் வரியின் மூலம் ஒரு ஆண்டில் மட்டும் மத்திய அரசு நான்கரை லட்சம் கோடி ரூபாய் வருவாய் ஈட்டியுள்ளதாக முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் குற்றம் சாட்டியுள்ளார்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு மத்தியில் ஆளும் மோடி அரசின் பேராசையே காரணம் என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் நிதியமைச்சருமான ப.சிதம்பரம் குற்றஞ்சாட்டியுள்ளார். பெட்ரோல், டீசலுக்கு விதிக்கப்படும் வரியின் மூலம் ஒரு ஆண்டில் மட்டும் மத்திய அரசு நான்கரை லட்சம் கோடி ரூபாய் வருவாய் ஈட்டியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 100 கோடி தடுப்பூசியை கொண்டாடியதைப் போல பெட்ரோல், டீசல்,கேஸ் விலை உயர்வை மோடி கொண்டாடுவாரா என்றும் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.

தினசரியும் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தி வருகின்றன. பல நகரங்களில் ஒரு லிட்டர் பெட்ரோல் 110 ரூபாய்க்கு மேல் விற்பனையாகிறது. டீசல் விலை 100 ரூபாயை தாண்டியுள்ளது. பெட்ரோல், டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் என பல்வேறு தரப்பினர் கோரிக்கை வைத்தும் மத்திய அரசு கண்டுகொள்ளவில்லை.

பெட்ரோல், டீசல் விலை உயர்வு தொடர்பாக மத்திய அரசை எதிர்க்கட்சிகள் கடுமையாக குற்றம் சாட்டி வருகின்றனர். பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி மக்களுக்கு தொல்லை கொடுப்பதில் மோடி அரசு சாதனை படைத்துள்ளது என காங்கிரஸ் கடுமையாக விமர்சித்தது. பெட்ரோல், டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் வலியுறுத்தி வருகின்றனர்.

ப.சிதம்பரம் ட்வீட்

ப.சிதம்பரம் ட்வீட்

கச்சா எண்ணெய் விலை குறையும் போது வரியை உயர்த்திய மத்திய அரசு, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் பீப்பாய்களின் விலை உயரும்போது வரியை குறைக்க முன்வர வேண்டும் என்று பொதுமக்களும் அரசியல் தலைவர்களும் வலியுறுத்தி வருகின்றன. மத்திய அரசைக் கண்டித்து போராடத்தை அறிவித்துள்ளனர். காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் நிதியமைச்சருமான ப.சிதம்பரம் தனது ட்விட்டர் பதிவில்,100 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டதை அமைச்சர்களுடன் இணைந்து கொண்டாடும் பிரதமர் மோடி, பெட்ரோல், டீசல் விலை 100 ரூபாயை கடந்ததையும் கொண்டாட வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 1000 ரூபாயை தாண்டும் போது கொண்டாட மற்றொரு வாய்ப்பு இருக்கும் எனவும் பதிவிட்டுள்ளார்.

ப.சிதம்பரம் குற்றச்சாட்டு

ப.சிதம்பரம் குற்றச்சாட்டு

பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு மத்தியில் ஆளும் மோடி அரசின் பேராசையே காரணம் என்றும் ப.சிதம்பரம் குற்றஞ்சாட்டியுள்ளார். சென்னையில் தமிழ் வர்த்தக சங்கம் சார்பில் நடைபெற்ற பொருளாதாரம் குறித்த கருத்தரங்கில் பேசிய ப.சிதம்பரம் மத்திய அரசை கடுமையாக சாடினார். பெட்ரோல், டீசல் விற்பனையில் இருந்து ஓரளவிற்கு வருவாய் எடுக்கலாம் என்றாலும் இதையே முக்கிய வருவாயாக கொண்டு மத்திய அரசு செயல்படுகிறது என்று குற்றம் சாட்டினார்.

வரி வருமானம் எவ்வளவு

வரி வருமானம் எவ்வளவு

பெட்ரோல்-டீசல் மீது 33 சதவிகித அளவிற்கு வரி விதிக்கப்படுவது சரியல்ல என்று தெரிவித்த ப. சிதம்பரம், தவறான வரிக் கொள்கையே இதற்கு காரணம் என்றார். இந்த ஆண்டு மட்டும் நான்கரை லட்சம் கோடி ரூபாய் பெட்ரோல், டீசல் விற்பனையில் இருந்து வருவாய் கிடைத்து இருக்கிறது என்றும் தெரிவித்தார்.

மாநில நிதியமைச்சர்களின் கருத்துக்கள்

மாநில நிதியமைச்சர்களின் கருத்துக்கள்

ஜி.எஸ்.டி. கவுன்சில் அமைப்பு அதிகாரம் இல்லாத அமைப்பாக இருக்கிறது. மாநில நிதி அமைச்சர்களின் கருத்துகள் அந்த அமைப்பில் ஏற்கப்படுவதில்லை என்றும் தெரிவித்தார். தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களில் நிதி அமைச்சர்கள் தங்கள் கருத்துகளை வெளிப்படையாக தெரிவித்ததால், தமிழகம், கேரளா மற்றும் கொல்கத்தா மாநிலங்களின் நிதியமைச்சர்கள், நிதி அமைச்சர்கள் குழுவில் இடம் பெறவில்லை என்றும் ப.சிதம்பரம் குற்றஞ்சாட்டியுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+