சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

'ஆக்சிஜன்' பற்றாக்குறை காரணமல்ல - முடிவுக்கு வந்த திருப்பத்தூர் ஜி.ஹெச் 'திக்திக்' பின்னணி

Google Oneindia Tamil News

சென்னை: திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் உயிரிழந்த நால்வரும் வெவ்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் என்று திருப்பத்தூர் மருத்துவ அலுவலர் தெரிவித்துள்ளார்.

Recommended Video

    ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமல்ல - முடிவுக்கு வந்த திருப்பத்தூர் GH திக்திக் பின்னணி - வீடியோ

    இந்தியாவில் கொரோனா 2வது அலை நாட்டு மக்களை இப்படித் தான் என்றில்லாமல் சக்கையாக பிழிந்து வருகிறது. தினசரி பாதிப்புகள் லட்சங்களில் பதிவாகிக் கொண்டிருக்க, உயிரிழப்புகள் அதிகரித்துக் கொண்டே செல்கின்றன.

    தமிழகத்திலும், ஆக்சிஜன், படுக்கை பற்றாக்குறை என்று நாள்தோறும் பல்வேறு சிக்கல்கள், பிரச்சனைகள் உருவாகின்றன. செங்கல்பட்டு மாவட்டத்தில், நேற்று ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக 13 உயிரிழந்ததாக செய்திகள் வெளியான நிலையில், தற்போது திருப்பத்தூர் மாவட்டத்திலும் அப்படியொரு புகார் எழுந்துள்ளது.

    3வது நாளாக.. அதிகரிக்கும் பெட்ரோல், டீசல் விலை - வாகன ஓட்டிகள் கலக்கம் 3வது நாளாக.. அதிகரிக்கும் பெட்ரோல், டீசல் விலை - வாகன ஓட்டிகள் கலக்கம்

     அரசு மருத்துவமனை

    அரசு மருத்துவமனை

    திருப்பத்தூர் மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா நோய் தொற்றானது அதிகரித்து வருகிறது. அங்கு ஒரு கால நேரத்தில், நாள் ஒன்றுக்கு 10 பேருக்கு கூட நோய்த்தொற்று ஏற்படாமல் இருந்த நிலையில், தற்போது தினம் தினம் நூற்றுக்கணக்கானோர் கொரோனா நோய் தொற்று ஏற்பட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

     நான்கு பேர் பலி

    நான்கு பேர் பலி

    பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட நபர்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது அரசு மருத்துவமனையில் ஆயிரம் பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். தீவிர சிகிச்சையில் ஈடுபடும் நபர்களுக்கு போதிய ஆக்சிஜன் இல்லாததால் அவ்வப்போது அடுத்தடுத்து இழப்பதாக கூறப்படுகிறது. இந்த சூழலில், திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில், நேற்று இரவு அரை மணி நேரத்திற்கு ஒருவர் என அடுத்தடுத்து நான்கு பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியானது.

     கடும் அவதி

    கடும் அவதி

    திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் போதிய ஆக்சிஜன் இல்லாததால் நோயாளிகள் பெரிதும் அவதிப்பட்டு வருவதாக கூறப்பட்டது . அதே போன்று உரிய அடிப்படை வசதி செய்து தர வேண்டும் என்றும் நோயாளிகள் கோரிக்கை வைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. இந்த சூழலில், திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் அரை மணி நேரத்திற்கு ஒருவர் என அடுத்தடுத்து நான்கு பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த உயிரிழப்புக்கு ஆக்சிஜன் தட்டுப்பாடே காரணம் என்றும் கூறப்பட்டது.

     ஆக்சிஜன் தட்டுப்பாடா?

    ஆக்சிஜன் தட்டுப்பாடா?

    இந்த நிலையில், திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் போதுமான அளவு ஆக்சிஜன் உள்ளது என்றும் இறந்தவர்கள் நான்கு பேரும் வெவ்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் என்றும் திருப்பத்தூர் மருத்துவ அலுவலர் திலீபன் பேட்டி அளித்துள்ளார். இதன் மூலம், உயிரிழப்புக்கு காரணம் ஆக்சிஜன் பற்றாக்குறை இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

    English summary
    4 patients died tirupattur govt hospital - திருப்பத்தூர்
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X