83 வயதில் 41000 கோடிக்கு அதிபதி! இந்திய ரியல் எஸ்டேட் கிங் சந்துரு ரஹேஜா பற்றி தெரியுமா?
சென்னை: இந்தியப் பணக்காரர் ஒருவர் தனது 83 வயதிலும் ஓய்வு எடுக்காமல் இன்னும் உழைத்துக் கொண்டுள்ளார் என்ற செய்தி ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு உத்வேகம் கொடுக்கும் விதத்தில் அமைந்துள்ளது.
இந்தியப் பணக்காரரான ரத்தன் டாடா மறைந்ததை அடுத்து பலரது பார்வை இந்தியாவில் உள்ள பணக்காரர்கள் மீது விழ ஆரம்பித்துள்ளது. அவர்கள் யார்? எவ்வளவு சொத்து வைத்துள்ளார்கள்? இந்தியப் பணக்காரர்களின் பட்டியலில் எந்த இடத்தில் இருக்கிறார்கள்? என நெட்டிசன் பலரும் இணையத்தில் தகவல் திரட்ட ஆரம்பித்துள்ளனர். அந்த வரிசையில் இதுவரை அதிகம் கவனம் பெறாமல் இருந்த ஒரு 83 வயது பணக்காரரைப் பற்றிய செய்திகள் வெளிவரத் தொடங்கியுள்ளது. அவர் யார்? எவ்வளவு சொத்து வைத்திருக்கிறார்?

ஃபோர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்டுள்ள அறிக்கையின்படி இந்தியப் பணக்காரரான சந்துரு ரஹேஜாவின் சொத்து மதிப்பு 5.4 பில்லியன் டாலர் என்று தெரியவந்துள்ளது. 2015 சாதாரண அளவுக்குச் செயல்புரிந்து வந்த இவரது நிறுவனம் படிப்படியாக வளந்து கொரோனா காலகட்டத்தில் உலகமே பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்த 2020 முதல் 2024 வரை பல மடங்கு வளர்ச்சியைத் தொட்டு உச்சத்தை அடைந்துள்ளது.
இன்று இந்தியப் பணக்காரர்களில் 59 ஆவது இடத்தில் இருக்கிறார் சந்துரு ரஹேஜா. அதேபோல் உலக பில்லினியர்ஸ் பட்டியலில் 624 ஆவது இடத்தில் இருக்கிறார். 60 வயதுக்கு மேல் ஓய்வு எடுத்துக் கொண்டு வாழ்க்கையை அனுபவிக்கக் கிளம்பும் சராசரி இந்தியர்களைப் போல இல்லாமல் 84 வயதில் இந்த இந்தியப் பணக்கார தாத்தா இன்னும் பல கோடி டாலர்களை சேர்ப்பதற்காக உழைத்துக்கொண்டு இருக்கிறார்.
சந்துரு ரஹேஜா மும்பை பல்கலைக்கழகத்தில் எல்.எல்.பி சட்டம் படித்தவர். ரியல் எஸ்டேட் துறையில் முடிசூடா இந்த மன்னர் வாழ்வது மும்பையில்தான். இந்திய ரூபாய் மதிப்பில் சொன்னால் இவரது நிகர சொத்து மதிப்பு 41000 கோடி ரூபாய். இவரது கே ரஹேஜா கார்ப் 1956இல் இருந்து படிப்படியாக வளர்ந்து இன்று வானத்தை எட்டிப் பிடித்துள்ளது.
இந்த 68 ஆண்டுகளில் ரியல் எஸ்டேட் மார்க்கெட்டில் சக்கரவர்த்தியாக மாறி இருக்கிறார். தற்போது சந்துரு ரஹேஜா கே ரஹேஜா கார்ப் நிறுவனத்தின் தலைவராக பணியாற்றுகிறார். இது 1956இல் இந்தக் குழுமத்தை இவரது தந்தை லச்மண்டாஸ் ரஹேஜா நிறுவினர். இது ஒரு ரியல் எஸ்டேட் துறையில் முன்னோடி நிறுவனமாக கருதப்படுகிறது.
இது தவிர நாடு முழுவதும் உள்ள ஷாப்பர்ஸ் ஸ்டாப் என்ற பல்பொருள் அங்காடியை நடத்தி வருகிறது இந்த கம்பெனி. மும்பை, ஹைதராபாத், வதோதராவில் செயல்பட்டுவரும் Inorbit Mall இவருக்குச் சொந்தமானதுதான். மேலும் மும்பை, ஹைதராபாத், சென்னை, புனேயில் அமைந்துள்ள மைண்ட்ஸ்பேஸ் அதிநவீன தகவல் தொழில்நுட்ப பூங்காக்களை இவரது நிறுவனம் நடத்தி வருகிறது.

கே ரஹேஜா கார்ப் குழுமத்தின் கீ JW Marriott Mumbai Sahar, The Westin Hyderabad Mindspace, Bengaluru Marriott Hotel Whitefield, The Dukes Retreat in Lonavala போன்ற பிரம்மாண்ட ஹோட்டல்களை இயங்கிவருகின்றன. இவை அனைத்தும் ஆடம்பரத்தின் அடையாளமாகத் திகழ்கின்றன.
2023 முதல் காலாண்டில் மட்டும் கே ரஹேஜா கார்ப் ஹோம்ஸ், சுமார் ரூ.1,100 கோடி வர்த்தகம் செய்து சாதனை படைத்தது. தெற்கு மும்பையில் உள்ள ரஹேஜா மாடர்ன் விவேரியா, இரண்டு உயர்ந்த கோபுரங்களைப் போன்று வடிவமைக்கப்பட்டுள்ள ஒரு ஆடம்பரமான குடியிருப்பு ஆகும். இதில் விற்பனை செய்யப்பட்ட வீடுகள் மூலம் இந்தப் பணம் சம்பாதிக்கப்பட்டுள்ளது.
இது ரியல் எஸ்டேட் துறையில் மாபெரும் சாதனையாகும். 1941 ஆம் ஆண்டு பிறந்த சந்துரு ரஹேஜா தன் 83ஆவது வயதிலும் நிற்காமல் உழைத்துக்கொண்டிருப்பது அவருக்காக மட்டும் அல்ல. அவரது உழைப்பு மறைமுகமாக நாட்டின் வளர்ச்சியையும் சேர்த்து உயர்த்திக் கொண்டிருக்கிறது.












Click it and Unblock the Notifications