Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ரூ.5000 + ரூ.8000.. ஸ்டாலின் கையில் எடுத்த பிரம்மாஸ்திரம்.. பெண்களை தேடி வரப்போகும் பணம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சட்டமன்றத் தேர்தல் களம் அனல் பறக்கத் தொடங்கியிருக்கும் வேளையில், தி.மு.க மீண்டும் அரியணை ஏறினால் இல்லத்தரசிகளின் பட்ஜெட் 'ஜாக்பாட்' அடிக்கப்போகிறது என்பதுதான் தற்போதைய கோட்டை வட்டார மகளிருக்கு இந்த முறை மெகா சலுகைகளை வாரி வழங்கத் தயாராகிவிட்டது அறிவாலயம்.

dmk tamil nadu assembly elections 2026

வீடு தேடி வரும் 5,000 ரூபாய்!

கடந்த முறை ஆட்சிக்கு வந்தபோது 'மகளிர் உரிமைத் தொகை' திட்டத்தின் கீழ் மாதம் 1,000 ரூபாய் வழங்கி இல்லத்தரசிகளின் கைகளில் பணப்புழக்கத்தை ஏற்படுத்தியது அரசு. இப்போது தேர்தல் வாக்குறுதியாக இந்தத் தொகையை 2,000 ரூபாயாக உயர்த்தத் திட்டமிடப்பட்டுள்ளது.

இது ஒருபுறமிருக்க, மாணவ, மாணவிகளின் உயர்கல்வியை ஊக்கப்படுத்தும் 'புதுமைப் பெண்' திட்டம் மற்றும் மாணவர்களுக்கான 'தமிழ்ப்புதல்வன்' திட்டம் ஆகியவற்றின் கீழ் வழங்கப்படும் 1,000 ரூபாய் ஊக்கத்தொகையும் இனி 1,500 ரூபாயாக அதிகரிக்கப்பட உள்ளது.

வறுமையான குடும்பத்தின் வீட்டில் கல்லூரி செல்லும் ஒரு மாணவி மற்றும் ஒரு மாணவர் இருந்தால், தாயின் உரிமைத் தொகையையும் சேர்த்து அந்த ஒரே குடும்பத்திற்கு மாதம் 5,000 ரூபாய் நேரடிப் பணப் பலனாகக் கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. "விலைவாசி உயர்வைச் சமாளிக்க இந்தத் தொகை ஒரு பெரிய பிடிமானமாக இருக்கும்" என்பதே பெண்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

இல்லத்தரசிகளுக்கு 'ஸ்பெஷல்' கூப்பன்!

இவை அனைத்திற்கும் சிகரம் வைத்தாற்போல், இந்த முறை புதுமையான ஒரு அறிவிப்பை தி.மு.க கையில் எடுத்துள்ளது. குடும்பத் தலைவிகளுக்கு ஆண்டுக்கு ஒருமுறை 8,000 ரூபாய் மதிப்பிலான 'இல்லத்தரசி கூப்பன்' வழங்கப்பட உள்ளது. திமுக-வின் தேர்தல் அறிக்கையில் 'ஹீரோயின்' ஆக ஜொலிக்கும் 'இல்லத்தரசி' கூப்பன் திட்டம், இப்போது தமிழகத் தேர்தல்களத்தின் ஹாட் டாபிக். ஒரு முறை வழங்கப்படும் இந்த 8,000 ரூபாய் மதிப்பிலான கூப்பனை வைத்து, 'வீட்டு உபயோகப் பொருட்களை (Electronic Appliances) வாங்கிக் கொள்ளலாம்' என முதல்வர் அறிவித்திருந்தார்.

இல்லத்தரசி கூப்பன் என்ற பெயரில் 8 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான கூப்பனைப் பயன்படுத்தி வாஷிங் மெஷின், டி.வி., ஃபிரிட்ஜ், மிக்சி, மைக்ரோவேவ் அவன் மற்றும் மின் அடுப்புகள் போன்ஏற்கனவே பயன்படுத்தி வரும் பழைய பொருட்களுக்கு புதிய பொருட்களை பெற்றுக்கொள்ளலாம் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். வீட்டு உபயோகப் பொருட்களை, வருமான வரி செலுத்தாத குடும்பங்களைச் சேர்ந்த இல்லத்தரசிகள் புதிதாக வாங்கிக்கொள்ளலாம் அல்லது

எளிமையாகச் சொன்னால், ரேஷன் கார்டு வைத்திருக்கும், வருமான வரி செலுத்தாத குடும்பங்களின் பெண் தலைவிகளுக்கு 8,000 ரூபாய் மதிப்புள்ள ஒருமுறை பயன்படுத்தக்கூடிய (One-time) கூப்பன் வழங்கப்படும். இந்த கூப்பனை வைத்துக்கொண்டு உங்கள் வீட்டுக்குத் தேவையான எலக்ட்ரானிக் பொருட்களை நீங்களே வாங்கிக்கொள்ளலாம்.

இந்தத் தொகை ஒரே தவணையாக இல்லத்தரசிகளின் கைகளில் சேரும்.

அத்தியாவசியத் தேவைகள் அல்லது பண்டிகை காலச் செலவுகளுக்கு இந்தப் பணம் பெரும் உதவியாக இருக்கும் எனத் தெரிகிறது.

அரசியல் கணக்கு: எடுபடுமா 'பண' வியூகம்?

ஏற்கனவே நடைமுறையில் இருக்கும் திட்டங்களின் தொகையை உயர்த்துவதுடன், புதிய கூப்பன் திட்டத்தையும் அறிவித்திருப்பது வாக்காளர்களை, குறிப்பாகப் பெண் வாக்காளர்களைத் தன் பக்கம் ஈர்க்க ஸ்டாலின் போடும் 'மாஸ்டர் பிளான்'.

"நிர்வாகச் சிக்கல்கள் இருந்தாலும், அடிமட்ட மக்களிடம் நேரடிப் பணப் பலன் கொண்டு செல்வதுதான் தேர்தல் வெற்றியைத் தீர்மானிக்கும்" என நம்புகிறது ஆளுங்கட்சி தரப்பு. எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களுக்கு நடுவே, இந்த 5,000 ரூபாய் மாத வருமானக் கணக்கு தேர்தல் முடிவுகளில் எந்த மாதிரியான மாற்றத்தை ஏற்படுத்தப்போகிறது என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+