நாளை சென்னையில்”பவர்கட்” இந்த இடங்களில் மின்சாரம் இருக்காது! உங்க ஏரியா இருக்கானு செக் பண்ணிக்கங்க.!
சென்னை : பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை சென்னை மாகரின் முக்கிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் வினியோகம் இருக்காது எனவும் பொதுமக்கள் தேவையான முன்னேற்பாடுகளை செய்து கொள்ள வேண்டும் என மின்சார வாரியத்தின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக மின்சார வாரியத்தின் சார்பில் தமிழகம் முழுவதும் பொதுமக்களுக்கு மின்சார விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
மாதம் ஒருமுறை அல்லது மூன்று மாதங்களுக்கு ஒருமுறை மின் வழித்தடங்கள், டிரான்ஸ்பார்மர்கள், மின் வடங்கள் ஆகியவற்றில் தடையின்றி சேவை வழங்குவதற்காக பராமரிப்பு பணிகளை மேற்கொள்வது வழக்கம்.

சென்னை மின்வாரியம்
இந்நிலையில் சென்னை நாளை முக்கிய பகுதிகளில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட இருப்பதாகவும் இதன் காரணமாக காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை சென்னையின் மிக முக்கிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது எனவும் எனவே பொதுமக்கள் தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துகொள்ள வேண்டும் என தமிழ்நாடு மின்சார வாரியத்தின் சார்பில் கூறப்பட்டுள்ளது.

நாளை மின் தடை
அதன்படி சென்னை தரமணி, பெருங்குடி , இராமப்பா நகர், சர்ச் பிரதான சாலை, அப்போலோ மருத்துமனை மறும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும், தாம்பரம் கடப்பேரி, துர்கா நகர் வீட்டுவசதி வாரிய குடியிருப்பு, ஏரிக்கரை தெரு, காமாட்சி நகர், பாரதிதாசன் தெரு, திருவள்ளுவர் தெரு சுற்றுவட்டார பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது.

ஆவடி செங்குன்றம்
இதேபோல், ஆவடி செங்குன்றம் பகுதியில் விவேக்பார அவென்யூ, ஜோதி நகர், மகாலட்சுமி நகர், வடிவேல் நகர் தெரு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளிலும், சோத்துபெரும்பேடு , அலிமேடு, பள்ளசூரப்பேடு, மேட்டுசூரப்பேடு, மேட்டுகாலனி வட்டிகாரன்பாளையம், கொளத்தூர் , ராஜஸ் அபார்ட்மெண்ட், சாந்திகாலனி, செந்தில் அவென்யூ, காந்திமதி தெரு, சீனிவாசன் நகர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மின் விநியோகம் தடை செய்யப்படும்.

5 மணி நேர பராமரிப்பு பணி
மேலே கூறப்பட்டுள்ள பகுதிகளில் காலை 9 மணி முதல் நண்பகல் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது எனவும், மதியம் 2 மணிக்குள்ளாக பராமரிப்பு பணிகள் முடிவடைந்தவுடன் மின் விநியோகம் செய்யப்படும் என மின்சார வாரியம் கூறியுள்ளது. சுமார் 5 மணி நேரம் மின் விநியோகம் இருக்காது என்பதால் பொதுமக்கள் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
-
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
சென்னை மடிப்பாக்கத்தில் பயங்கர தீ விபத்து.. பகலும் இரவானது.. கரும்புகையால் திணறிய மக்கள் - வீடியோ! -
சென்னை கீழ்ப்பாக்கம் ஏடிஎம்மில் கொள்ளை முயற்சி.. அலாரம் அடித்ததும் மர்ம நபர் தப்பி ஓட்டம்! -
மயிலாப்பூர் டூ அம்பத்தூர்.. கார் இருந்தாலும் சைக்கிள் பயணம்! உலக சைக்கிள் தினத்தில் அறிய வேண்டிய கதை -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
மெரினா கடற்கரைக்கு அடியில் அதிசயம்! சென்னை மெட்ரோ 2ம் கட்டத்தில் மாஸ்: லைட்ஹவுஸ் நிலையம் உருவாகிறது -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம்












Click it and Unblock the Notifications