தவெகவில் இணையும் மேலும் 5 அதிமுக எம்.எல்.ஏ.க்கள்? யார் யார்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஆளும் தமிழக வெற்றிக் கழகம் அதிமுகவிலிருந்து மேலும் 5 சட்டமன்ற உறுப்பினர்களைத் தங்கள் பக்கம் இழுப்பதற்கான தீவிரப் பேச்சுவார்த்தைகளில் இறங்கியுள்ளது. இதற்கான ஆலோசனைகளை தவெக தரப்பு தீவிரமாக இறங்கி உள்ளதாம்.

இந்த பேச்சுவார்த்தை தற்போது இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளதாம். விசிக, சிபிஎம், சிபிஐ போன்ற கட்சிகள் எப்போது வேண்டுமானாலும் ஆட்சிக்கு வழங்பகும் ஆதரவை வாபஸ் வாங்கலாம் என்று கூறப்படுகிறது. ஆளும் கூட்டணிக் கட்சிகளிடையே ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாடுகள் மற்றும் சலசலப்புகளுக்கு மத்தியில் வெளியாகி இருக்கும் நிலையில்.. கூடுதல் அதிமுக எம்எல்ஏக்கள் ஆதரவை பெற்று இடைத்தேர்தலை சந்திக்கலாம் என்று விஜய் நினைக்கிறாராம்.

TVK AIADMK

தவெகவின் பதவி

சமீபத்தில், அதிமுகவின் முக்கிய முகங்களான சி. விஜயபாஸ்கர், எம்.ஆர். விஜயபாஸ்கர், டி. ஜெயக்குமார், இசக்கி சுப்பையா, சத்யபாமா மற்றும் மரகதம் குமரவேல் ஆகியோர் தங்கள் எம்எல்ஏ பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்தனர். அனுபவமிக்க இந்த நிர்வாகிகளுக்கு, தவெக தலைமை உடனடியாகத் துணைப் பொதுச்செயலாளர் மற்றும் மாவட்டச் செயலாளர் போன்ற முக்கிய பொறுப்புகளை வழங்கி கௌரவித்தது. இது அக்கட்சியின் உள்கட்டமைப்பை மேலும் பலப்படுத்தியது.

இடைத்தேர்தல் உறுதிமொழி

தவெகவில் இணைந்த இந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு, வரவிருக்கும் இடைத்தேர்தலில் மீண்டும் அதே தொகுதிகளில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படும் எனத் தலைமை உறுதியளித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இவர்கள் தங்களின் எம்.எல்.ஏ. பதவிகளை முறையாக ராஜினாமா செய்த பிறகே கட்சியில் இணைந்ததால், கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க முடியாமல் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தரப்பு சட்டரீதியாகப் பின்னடைவைச் சந்தித்துள்ளது. இந்தச் சூழல், அதிமுகவில் அதிருப்தியில் உள்ள மற்ற சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் தைரியத்தை அளித்துள்ளது.

தவெகவின் வியூகம்

தவெகவின் இந்தத் தீவிர விரிவாக்க நடவடிக்கை வெறும் அரசியல் காய்நகர்த்தல் மட்டுமல்ல.. சட்டமன்றத்தில் தனிப்பெரும்பான்மையைப் பலப்படுத்தும் நோக்கம் கொண்டது. ஆளும் தவெக அரசில் அங்கம் வகிக்கும் முக்கிய கூட்டணிக் கட்சியான இடதுசாரிகள், அரசின் சில கொள்கை முடிவுகள் மற்றும் நிர்வாக ரீதியான செயல்பாடுகளில் தொடர்ந்து அதிருப்தி தெரிவித்து வருகின்றனர். இதனால், அரசுக்கு அளித்து வரும் ஆதரவை அவர்கள் திரும்பப் பெறக்கூடும் என்ற சூழல் நிலவுவதால், ஆட்சிப் பலத்தை உறுதிப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் தவெக தலைமை உள்ளது.

கூட்டணிக் கட்சிகளின் நெருக்கடிகளிலிருந்து விடுபடவும், தனித்து நின்று பெரும்பான்மையை நிலைநாட்டவும், வரவிருக்கும் இடைத்தேர்தல்களில் நேரடி வெற்றியைப் பதிவு செய்வது தவெகவிற்கு அவசியமாகிறது. சட்டமன்றத்தில் தங்களின் சொந்த பலத்தை அதிகரிப்பது மட்டுமே ஆட்சிக்கு முழுமையான பாதுகாப்பைத் தரும் எனத் தலைமை கருதுகிறது.

5 எம்.எல்.ஏ.க்களுடன் தீவிரப் பேச்சு

இதன் தொடர்ச்சியாகவே, தற்போது மேலும் 5 அதிமுக எம்.எல்.ஏ.க்களுடன் பேச்சுவார்த்தை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் 2 பேர் தனித்தொகுதி சட்டமன்ற உறுப்பினர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இடைத்தேர்தல் அறிவிப்பு வருவதற்கு முன்பே, களத்தில் தவெக தொண்டர்களுடன் இணைந்து தேர்தல் பணிகளைத் தொடங்க ஏதுவாக, தாமதிக்காமல் இவர்கள் உடனே தவெகவில் இணையும்படி அறிவுறுத்தப்பட்டு உள்ளதாம்.

எதிர்பார்க்கப்படும் அடுத்த நகர்வு

தற்போது நடைபெற்று வரும் சட்டமன்றக் கூட்டத்தொடர் செப். 8ம் தேதி நிறைவடைந்தவுடன், இந்த 5 எம்.எல்.ஏ.க்களின் ராஜினாமா மற்றும் இணைப்பு முறைப்படி நடைபெறும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நகர்வு உண்மையாகும் பட்சத்தில், அது அதிமுகவிற்கு மீள முடியாத பெரும் பின்னடைவை ஏற்படுத்துவதோடு, தமிழகத்தில் ஒரு மினி பொதுத்தேர்தல் போன்ற விறுவிறுப்பான இடைத்தேர்தல் களத்தை உருவாக்கும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+