காருக்குள் துடித்து அடங்கிய உயிர்! டாக்டர் மஸ்தான் கொலையானது எப்படி? பகீர் வாக்குமூலம் தந்த டாக்டர்!
சென்னை : முன்னாள் எம்பியும் திமுக சிறுபான்மையினர் உரிமை பிரிவு நிர்வாகியுமான டாக்டர் மஸ்தான் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில், அவர் கொலை செய்யப்பட்டதும் கார் ஓட்டுநர் மற்றும் உறவினர் ஒருவரே இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்ட அதிர்ச்சி தகவல் வெளியாகி இருக்கிறது.
தமிழகத்தில் திமுக ஆட்சி அமைந்த பின் அக்கட்சியின் சிறுபான்மையினர் நல உரிமை பிரிவு செயலாளராக இருந்த டாக்டர் மஸ்தான் தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணைய துணை தலைவராக நியமிக்கப்பட்டார்.
1995 ஆம் ஆண்டு முதல் 2001 ஆம் ஆண்டு வரை அதிமுக சார்பில் மாநிலங்களவை உறுப்பினராக இருந்த அவர் அதன் பிறகு திமுகவில் இணைந்து நிலையில் சிறுபான்மையினர் நலப்பிரிவு பொறுப்பு வழங்கப்பட்டது. மேலும் சிறுபான்மை ஆணைய துணை தலைவராகவும் இருந்து வந்தார்.

மாஜி எம்பி மஸ்தான்
சென்னை சேப்பாக்கத்தில் குடும்பத்துடன் வசித்து வந்த மஸ்தானின் மகனுக்கு கடந்த 22ஆம் தேதி சென்னையில் உள்ள பிரபல நட்சத்திர ஹோட்டலில் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற இருந்தது. இதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வந்த நிலையில் திடீரென அவர் உயிரிழந்தார். இந்நிலையில் அவரது மகனான உறரிஸ் ஷாநவாஸ் தனது தந்தையின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூடுவாஞ்சேரி காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.

மகன் புகார்
அதில் தன்னுடைய சித்தப்பாவின் மருமகன் இம்ரான் பாஷா என்பவருடன் TN 06 AA 1112 என்ற KIA காரில் செங்கல்பட்டு நோக்கி சென்றதாகவும் டோல்கேட் தாண்டி வரும் போது அவருடைய அப்பாவிற்கு வலிப்பு ஏற்பட்டு மார்பு வலி ஏற்பட்டதாகவும் உடனே கூடுவாஞ்சேரி தீபம் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றதாகவும் மருத்துவர்கள் பரிசோதனை செய்து பார்த்துவிட்டு வரும் வழியிலேயே அவரது மஸ்தான் இறந்துவிட்டதாக கூறிதாகவும் அவரது இறப்பிற்கான காரணம் அறிய பிரேத பரிசோதனை செய்து உரிய விசாரணை மேற்கொள்ள வேண்டுமென கூறியிருந்தார். இதனையடுத்து இயற்கைக்கு மாறான இறப்பு வழக்காக பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

இறப்பில் சந்தேகம்
மேற்கண்ட டாக்டர் மஸ்தானின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக விசாரணையில் தெரிய வந்ததால் தாம்பரம் காவல் ஆணையாளர் அமல்ராஜ் உத்தரவின் தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது. தனிப்படையினரின் விசாரணையில் சம்பவ தினத்தன்று இறந்து போன டாக்டர் மஸ்தானுடன் வந்த உறவினர் இம்ரான் பாஷா மீது சந்தேகம் இருப்பதாக தெரியவந்தது. அவருடைய பேச்சில் முரண்பாடு இருந்ததாலும் பிரேத பரிசோதனை செய்த மருத்துவரின் வாக்குமூலத்திலும் டாக்டர் மஸ்தான் மூச்சு திணறல் ஏற்பட்டு இறந்துள்ளார் என தெரிவித்ததாலும் இம்ரான் பாஷாவின் நடவடிக்கைகள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு விசாரிக்கப்பட்டது.

சிக்கிய உறவினர்
விசாரணையின் போது இம்ரான் பாஷாவின் வாக்குமூலம் முன்னுக்கு பின் முரணாக இருந்தது. சம்பவ தினத்தன்று இறந்து போன டாக்டர் மாஸ்தான் தனது வீட்டிலிருந்து செங்கல்பட்டு நோக்கி சென்ற வழியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்ததலிருந்தும் தொலைப்பேசி உரையாடல்களை கண்காணித்ததிலும் இம்ரான் பாஷா கூறிய விவரங்கள் பொய்யானவை என்று தெரிந்தது. சம்பவ தினத்தன்று டாக்டர் மஸ்தான் வந்த காரில் இம்ரான் பாஷா தவிர மேலும் இரண்டு நபர்கள் வழியில் சேர்ந்து வந்த விவரம் விசாரணையில் தெரிய வந்தது.

திட்டம் தீட்டி கொலை
எனவே இம்ரான் பாஷாவை காவல் நிலையத்திற்கு வரவழைத்து விசாரணை மேற்கொண்டதில் இம்ரான் பாஷா தன்னுடைய சித்தி மகன் தமீம் என்கிற சுல்தான் அகமது மற்றும் அவரது நண்பர்கள் நஷீர், தௌபிக் அகமது, லோகேஷ்வரன் ஆகியோருடன் சேர்ந்து திட்டம் தீட்டி டாக்டர் மஸ்தானை கொலை செய்ததாக ஒப்பு கொண்டார். இம்ரான் பாஷாவின் வாக்குமூலத்தில் டாக்டர் மாஸ்தான் அரசியல் கட்சியில் பொறுப்பில் இருப்பதாலும் மருத்துவமனை நடத்தி வருவதாலும் அவருடன் நல்ல பழக்கம் ஏற்படுத்தி கொண்டு நம்ப வைத்து அவரிடமிருந்து அவ்வப்போது சிறுக சிறுக ரூபாய் 15 லட்சம் வரை கடனாக பெற்றதாகவும் அதனை திரும்ப கேட்டு டாக்டர் மஸ்தான் தொந்தரவு செய்து வந்ததால் தன்னுடைய சித்தி மகன் சுல்தான் அகமது மற்றும் அவனது நண்பர்கள் நஷீர், தௌபிக் அகமது. லோகேஷ்வரன் ஆகியோருடன் சேர்ந்த திட்டம் தீட்டி பைனான்சியரிடம் பணம் பெற போவதாக கூறி நம்ப வைத்து டாக்டர் மஸ்தானை அழைத்து கொண்டு சென்றுள்ளனர்.

மூச்சு திணறல்
அவ்வாறு செல்லும் போது அவரது காரில் இம்ரானும் தமீம் (எ) சுல்தான், மற்றும் நஷீர் ஆகியோருடன் செல்லும் போது அவர்களது காரை தௌபிக் அகமது மற்றும் லோகேஷ்வரன் ஆகியோரை வேறு ஒரு காரில் பின்தொடர்ந்து வர சொல்லி விட்டு செங்கல்பட்டு நோக்கி அழைத்து சென்று தனியான இடத்தில் காரை நிறுத்தி காரின் பின் சீட்டில் உட்காரிந்திருந்த நஷீர் டாக்டர் மஸ்தானின் கைகளை பின்புறமாக இருந்து பிடித்து கொள்ள சுல்தான் அவரது வாய் மற்றும் மூக்கை அழுத்தி பிடித்து மூச்சு திணறல் ஏற்படுத்தி கொலை செய்துள்ளனர்,

5 பேர் கைது
பின்னால் காரில் வந்த தௌபிக் அகமது மற்றும் லோகேஷ்வரன் ஆகியோர் உடந்தையாக இருந்து மற்றவர்களை அங்கிருந்து தப்பிக்க உதவியதாகவும் பின்னர் டாக்டர் மஸ்தானுக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டு மாரடைப்பால் இறந்து விட்டதாக மற்றவர்களை நம்ப வைத்து ஏமாற்றியதை ஒப்புக்கொண்டார். இவ்வழக்கில் சம்மந்தப்பட்ட இம்ரான் பாஷா, தமீம் என்கிற சுல்தான், நஷீர், தௌபிக் அகமது மற்றும் லோகேஷ்வரன் ஆகியோர் கைது செய்யப்பட்டார்கள். மேலும் டாக்டர் மஸ்தானை கொலை செய்ய பயன்படுத்திய கார் மற்றும் இரு சக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது. இவ்வழக்கில் குற்றவாளிகள் ஐந்து பேரையும் செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
-
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
திமுகவே கணிக்கல.. விஜய்யுடன் நெருங்கிய காங்கிரஸ்! பாஜகவை வீழ்த்த இந்தியா கூட்டணி மாஸ்டர் ஸ்கெட்ச் -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்!












Click it and Unblock the Notifications