60 - 15 = 45.. அமாவாசை போய்டுச்சே.. எடப்பாடி பழனிசாமிக்கு ஒரே சிரிப்புதான்.. செம கூல்.. என்னவாம்?
எடப்பாடி பழனிசாமி திமுகவை கிண்டலடித்து பல்லடத்தில் தொண்டர்களிடம் பேசியுள்ளார்
சென்னை: எடப்பாடி பழனிசாமி தற்போது கூலாக காணப்படுகிறார்.. கேஷூவலாக பேசுகிறார்.. அதிலும் திமுக அரசை, கிண்டலடித்தும், விமர்சித்தும், எடப்பாடி பழனிசாமி பேசியுள்ளது, அறிவாலயத்தையே சூடாக்கி உள்ளது.. அத்துடன், எடப்பாடி பழனிசாமியின் அதிரடி மூவ்களை கண்டு அவரது ஆதரவாளர்கள் தெம்பில் உள்ளார்களாம்.
அதிமுகவை பொறுத்தவரை தற்போது நீதிமன்ற தீர்ப்பு ஒன்றையே நம்பி உள்ளது.. ஒவ்வொரு முறையும், ஓபிஎஸ், எடப்பாடி பழனிச்சாமி என இரு தரப்புக்கும் ஆதரவுகள் மாறி மாறி கிடைத்துவரும், சுப்ரீம்கோர்ட் என்ன சொல்ல போகிறது என்பதுதான், இவர்களின் வருங்கால அரசியலை தீர்மானிக்க கூடியதாக உள்ளது.
இதனிடையே, ஓபிஎஸ் தன்னுடைய பலத்தை பெருக்கி கொள்ளும் முயற்சியில் இறங்கி உள்ளார்.. எடப்பாடி பழனிசாமியோ, தனக்கிருக்கும் பலத்தை இழந்துவிடக்கூடாது என்பதில் முனைப்பு காட்டி வருகிறார்.

டபுள் மாஜி
அதேசமயம், கடந்த வாரம் இருந்த நெருக்கடி, தற்போது எடப்பாடியிடம் இல்லை என்றே தெரிகிறது.. ஒருபக்கம் சட்டரீதியான முனனெடுப்புகளை எடுத்துக்கொண்டு, மறுபக்கம் தன்னுடைய பலத்தையும் தக்க வைத்து வருகிறார்.. இதற்கு நடுவில் பாஜகவின் ஆதரவை பெறும் முயற்சியை எடுத்து கொண்டிருப்பதாகவும், அதற்காகவே 2 மாஜிக்களை டெல்லிக்கு தூது அனுப்பியிருப்பதாகவும் கூறப்படுகிறது.. இது எல்லாவற்றிற்கும் மேலாக, வழக்குகள், விசாரணைகள், கேஸ்கள் என வரிசைக்கட்டி நிற்கின்றன.

சைக்கிள் கேப்
இவ்வளவு களேபரங்கள் இருந்தாலும், திமுகவை விமர்சிப்பதை மட்டும் எடப்பாடி பழனிசாமி கைவிடவில்லை. டைம் கிடைக்கும்போதெல்லாம், திமுக அரசை நறுக் நறுக்கென கேள்வி கேட்டு வருகிறார்.. இன்றும் அப்படித்தான் மாநில அரசை கிண்டலடித்துள்ளார்.. திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் தொண்டர்கள் மத்தியில் எடப்பாடி பழனிசாமி பேசினார்.. அப்போது வழக்கம்போல் குற்றச்சாட்டுகளை சொல்லி வந்தார்.. "முதல்வர் ஸ்டாலின் 38 அறிவிப்புகள் கொண்டுவந்து 38 குழு அமைத்து விட்டார்... பேசாமல் இந்த அரசங்கத்துக்கு குழு அரசாங்கம் என்றே பெயர் வைத்துவிடலாம்..

60 அமாவாசை
அமைச்சர்கள், அதிகாரிகளை நம்பாமல் குழு அமைத்து அறிக்கை வந்த பிறகே திட்டங்களை திமுக அரசு நிறைவேற்றுகிறது. என்னைக்கு குழு அறிக்கை அளிப்பது? என்னைக்கு அரசாங்கம் செயல்படுவது? இப்பவே ஆட்சிப் பொறுப்பேற்று 15 மாதங்கள் ஓடிவிட்டன... இந்த 5 வருடத்தில் 60 அமாவாசை, 15 அமாவாசை போய்விட்டது... இன்னும் 45 அமாவாசை மிச்சம் இருக்கிறது. குழு அமைப்பதற்கே 15 மாதங்களாகிவிட்டது. குழு எப்போது அறிக்கை அளித்து, அதிகாரிகள் அதனை பரிசீலிப்பது. மக்களை ஏமாற்றுகின்ற அரசாங்கம், திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் இருக்கின்றது" என்றார்.

டென்ஷனோ டென்ஷன்
இந்த பேச்சு முழுவதிலுமே, திமுகவை கிண்டல் அடித்து பேசியிருந்தார் எடப்பாடி.. இதற்கு முன்பு பேட்டி தரும்போது டென்ஷனாக காணப்பட்டார்.. அவரது முகத்தில் பதற்றம் தென்பட்டது.. ஆனால், இன்று அப்படி இல்லை.. கூலாக இருந்தார்.. தொண்டர்களிடம் ஜாலியாக பேசினார்.. நிகழ்ச்சியில் அவருக்கு மாலைகள் அணிவித்து வரவேற்பு தந்தபோதுகூட, கேஷூவலாக இருந்தார்.. தொண்டர்களின் வரவேற்பை பொறுமையாக ஏற்றுக் கொண்டார்.

கேஷூவல் பேச்சு
ஆனால் முன்னதாக, சென்னை எடப்பாடி பழனிசாமி ஏர்போர்ட்டிற்கு வந்தபோது, அதே நேரத்திற்கு ஓபிஎஸ்ஸும் வந்துவிட்டார்.. மதுரை செல்வதற்காக சென்னை ஏர்போர்ட் வந்திருந்தார் ஓபிஎஸ்.. அதேபோல கோவை செல்வதற்காக எடப்பாடியும் ஏர்போர்ட் வந்திருந்தார்.. இரு தலைவர்களுடனும் ஏகப்பட்ட ஆதரவாளர்கள் புடைசூழ வந்தனர்.. ஓபிஎஸ்ஸை மதுரைக்கு ஆரவாரத்துடன் ஆதரவாளர்கள் வழியனுப்பி வைத்த அடுத்த சில நிமிடங்களிலேயே எடப்பாடி அங்கு என்ட்ரி தந்தார்.. அப்போது எடப்பாடிக்கு ஆதரவாக கோஷங்கள் எழுப்பப்பட்டன.. 2 தலைவர்களுமே அடுத்தடுத்து ஏர்போர்ட்டில் நுழைந்ததால், சிறிது நேரம் தொண்டர்களிடையே பரபரப்பு ஏற்பட்டது.
-
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
அண்ணாமலை தொடங்கும் புதிய கட்சி.. இணையும் பிரபல பிஸ்னஸ் மேன், திமுக மாஜி அமைச்சர்? அவங்களா? -
என் குழந்தையின் முக ஜாடையை தப்பா பேசுறாங்க! முக்தார், சூர்யா சிவா மீது அலிஷா அப்துல்லா புகார் -
அந்த 2 லேடீஸ்..1 மாஜி தலை! பாஜக மண்ணைக் கவ்வ ‘இவர்கள்’ தான் காரணம்! அமித் ஷாவிடம் அடுக்கிய அண்ணாமலை! -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை?











Click it and Unblock the Notifications