76வது சுதந்திர தினம்..ஜொலித்த ரிப்பன் மாளிகை..தேசியக் கொடி ஏற்றிய மேயர் பிரியா
சென்னை: 76 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு ரிப்பன் மாளிகை வளாகத்தில் இன்று சென்னை மேயர் பிரியா தேசிய கொடி ஏற்றினார். இதனைத்தொடர்ந்து முறையாக வரி செலுத்திய 6 பேருக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கினார் மேயர் பிரியா.
இந்தியா சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. நாட்டின் 76-வது சுதந்திர தினம், சுதந்திர திருநாள் அமுதப்பெருவிழாவாக இன்று உற்சாகத்துடனும், கோலாகலத்துடனும் கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்நிலையில், நாட்டின் சுதந்திரதின விழாவையொட்டி சென்னை செயிண்ட் ஜார்ஜ் கோட்டை கொத்தளத்தில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்திய தேசியக்கொடியை ஏற்றினார். காவல்துறை அணிவகுப்பு மரியாதையை ஏற்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கோட்டை கொத்தளத்தில் 2வது ஆண்டாக தேசியக்கொடியை ஏற்றினார்.
சென்னை மாநகராட்சியில் மேயர் பிரியா இன்று தேசியக்கொடி ஏற்றினார். மேயராக அதிகாரப்பூர்வமாக தேர்ந்தெடுக்கப்பட்ட உடன் அவருக்கு அரசு சார்பில் சென்னை பெருநகர கட்சி பெயர் கொடி மற்றும் இலட்சினை பொருந்திய நான்கு சக்கர வாகனம் வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து சென்னை மாநகர மேயரின் தலைமை அலுவலகமான ரிப்பன் மாளிகையில் மாநகர மேயர் கொடி கடந்த ஆண்டு ஏற்றப்பட்டது.
இந்த நிலையில் 76 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு ரிப்பன் மாளிகை வளாகத்தில் இன்று சென்னை மேயர் பிரியா தேசிய கொடி ஏற்றினார். இதனைத்தொடர்ந்து முறையாக வரி செலுத்திய 6 பேருக்கு மேயர் பாராட்டு சான்றிதழ் வழங்கினார். மேலும், மாநகராட்சியில் சிறப்பாக பணியாற்றிய 80 பணியாளர்களுக்கு பதக்கங்கள் மற்றும் பாராட்டு சான்றிதழை வழங்கினார்.

Recommended Video
சுதந்திர தினத்தை முன்னிட்டு ரிப்பன் மாளிகை வண்ணமயமாக அலங்கரிக்கப்பட்டிருந்தது. கடந்த ஆண்டு மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி தேசியக்கொடி ஏற்றினார். மேயராக பிரியா தேர்வு செய்யப்பட்ட பிறகு இந்த ஆண்டு பிரியா தேசியக்கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.
-
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு! -
ஸ்டாலின் கொண்டு வந்த காலை உணவு திட்டம் தொடரும்.. மெனு மாற்றம்.. அமைச்சர் ராஜ்மோகன் உறுதி












Click it and Unblock the Notifications