சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

நெய் பாதுஷா.. காஜு கத்லி.. நட்ஸ் ஹல்வா.. ஆர்டர்களை வரவேற்கும் ஆவின்! ஆமா கிலோ எவ்வளவு தெரியுமா?

Google Oneindia Tamil News

சென்னை: ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை, தீபாவளி என பண்டிகைகள் வரிசை கட்டி வருவதால் ஆவினில் 9 வகையான புதிய இனிப்புகள் அறிமுகப்படுத்தப்படுள்ளன.

நெய் பாதுஷா,நட்ஸ் ஹல்வா, ஸ்டப்டு மோதிபாக், காஜு பிஸ்தா ரோல், காஜு கத்லி, நெய் அல்வா, கருப்பட்டி அல்வா என பட்டியல் நீள்கின்றன.

மேற்கண்ட இனிப்பு வகைகளை பொதுமக்கள் மற்றும் அரசு, தனியார் நிறுவனங்கள் மொத்தமாக ஆர்டர் செய்ய தொலைபேசி எண்கள் மற்றும் மின்னஞ்சல் முகவரியும் வெளியிடப்பட்டுள்ளது.

ரிலையன்ஸ் வசமாகும் ஆவின்? கோவையில் இப்பவே ஆரம்பிச்சிட்டாங்களா? பகீர் கிளப்பும் பால் முகவர்கள் சங்கம்! ரிலையன்ஸ் வசமாகும் ஆவின்? கோவையில் இப்பவே ஆரம்பிச்சிட்டாங்களா? பகீர் கிளப்பும் பால் முகவர்கள் சங்கம்!

இனிப்பு வகைகள்

இனிப்பு வகைகள்

1) நெய் பாதுஷா [ GHEE BADUSHA ]

250 கிராம் ரூ.190

2) நட்ஸ் ஹல்வா [ NUTS HALWA ]

250 கிராம் ரூ.190

3) ஸ்டப்டு மோதிபாக் [ STUFFED MOTIPAK ]

250 கிராம் ரூ. 180

4) காஜு பிஸ்தா ரோல் [ KAJU PISTA ROLL ]

250 கிராம் ரூ. 320

 கருப்பட்டி அல்வா

கருப்பட்டி அல்வா


5) காஜு கத்லி [ KAJU KATLI ]

250 கிராம் ரூ. 260

6 ) வகைப்படுத்தப்பட்ட இனிப்பு வகைகள் [ ASSORTED PACK ]

500 கிராம் ரூ.450

7) நெய் அல்வா [ GHEE HALWA ]

250 கிராம் ரூ.125

8) கருப்பட்டி அல்வா [ KARUPATTI HALWA]

250 கிராம் ரூ. 170

9) மிக்ஸர் ( MIXTURE )

200 கிராம் ரூ.100

 ஆவின் நெய்

ஆவின் நெய்

இந்த இனிப்புகள் அனைத்தும் ஆவின் அக்மார்க் நெய்யினால் தயாரிக்கப்படுகிறது. நெய் பாதுஷா, நட்ஸ் ஹல்வா, ஸ்டப்டு மோதிபாக், காஜு பிஸ்தா ரோல், காஜு கத்லி மற்றும் வகைப்படுத்தப்பட்ட இனிப்புகள் சென்னை அம்பத்தூர் பால் பண்ணையில் தயாரிக்கப்பட்டு பிரத்யேகமான முறையில் (Modified Atmospheric Packing) பேக் செய்யப்படுகிறது. இதனால் இனிப்பு வகைகளை கூடுதல் நாட்கள் வரை வைத்து பயன்படுத்தலாம்.

பால் பண்ணை

பால் பண்ணை

கருப்பட்டி அல்வா விருதுநகர் ஒன்றியத்திலும் நெய் அல்வா திருநெல்வேலி ஒன்றிய பால் பண்ணையிலும் தயாரிக்கப்படுகிறது. இவை அனைத்தும் தமிழகம் முழுவதும் 10,000-க்கும் மேற்பட்ட விற்பனை நிலையங்களிலும், பொதுமக்கள் அதிகம் கூடும் சந்தைகள், சாலை சந்திப்புகள், பேருந்து நிலையங்கள் போன்ற இடங்களை தேர்வு செய்து சிறப்பு விற்பனை மையங்கள் மூலமாகவும் பொது மக்களுக்கு சில்லறை விலையில் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

முகவர்கள் மூலம்

முகவர்கள் மூலம்

மேலும் இந்த சிறப்பு இனிப்புகள் முகவர்கள் மூலம் விற்பனை செய்யவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. கிராமப்புற பால் உற்பத்தியாளர்களின் வாழ்வாதரத்தை மேம்படுத்த உதவும் வகையில் அரசு துறை அலுவலகங்கள், தனியார் நிறுவனங்கள், அரசு ஊழியர்கள், கூட்டுறவு நிறுவனங்கள், போக்குவரத்து துறை மற்றும் பிற நிறுவனங்கள் தங்களுக்கு தேவையான காரம் மற்றும் இனிப்பு வகைகளை ஆவின் நிறுவனத்தில் முன்பதிவு செய்து பெறலாம்.

ஆர்டர்கள் வரவேற்பு

ஆர்டர்கள் வரவேற்பு

மேற்கண்ட இனிப்பு வகைகளை மொத்தமாக ஆர்டர் செய்ய பின்வரும் தொலைபேசி எண்கள் மற்றும் மின்னஞ்சல் முகவரி வாயிலாக தொடர்பு கொள்ளலாம்.

சென்னை தலைமை அலுவலகம் - 7358018395

சென்னை (தெற்கு மண்டலம்) - 7358018391

சென்னை (வடக்கு மண்டலம்) - 7358018392

சென்னை (மத்திய மண்டலம்) - 7358018393

இதர மாவட்டங்கள் - 7358018396

வாட்ஸ் ஆப் எண் - 7358018390

கட்டணமில்லா எண் - 18004253300

மின்னஞ்சல் முகவரி : [email protected]

பொதுமக்கள் தங்களின் கருத்துக்களை பதிவு செய்ய ஆவினின் @AavinTn முகநூல், ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாக்ராம் ஆகிய சமூக வலைத்தளங்களையும், மேலும் கூடுதல் தகவல்களுக்கு 18004253300 என்ற அலைபேசி எண்ணை 24X7 தொடர்பு கொள்ளலாம்.

English summary
As festivals like Ayudha Puja, Saraswati Puja and Diwali are coming up, 9 types of new sweets have been introduced in Aavin.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X