சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ரயில்வே பணியில் 90% பேர் வடக்கர்கள் தான்! தமிழகர்கள் 1 சதவீதம் தான்! முக்கிய அதிகாரி வெளியிட்ட தகவல்

Google Oneindia Tamil News

சென்னை : மத்திய அரசு ரயில்வே பணிகளில் 90 சதவீதம் பேர் பீகார் மற்றும் உத்திரப் பிரதேசம் மாநிலத்தில் இருந்துதான் பணியில் சேருகின்றனர் என ரயில்வே பாதுகாப்பு படை உதவி முதன்மை பாதுகாப்பு ஆணையர் லூயிஸ் அமுதன் கூறியுள்ளார்.

கல்லூரி மாணவர்கள் மின்சார ரயில்கள், ரயில் நிலைய நடைமேடைகள் மற்றும் நிலைய வளாகங்களுக்குள் எவ்வாறு நடந்து கொள்வது என்பது குறித்து ரயில்வே பாதுகாப்பு படை சார்பில் சென்னையில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் மாணவர்களிடையே மோதலை தடுப்பது தொடர்பாகவும் ரயில்வே காவல்துறையினரும், ரயில்வே பாதுகாப்பு படை போலீசாரும் சென்னை கீழ்ப்பாக்கம் பச்சையப்பன் கல்லூரியில் மாணவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

கேரளாவை உலுக்கும் தக்காளி காய்ச்சல் பீதி! அறிகுறிகள் என்ன? செய்ய வேண்டியவை கூடாதவை..? முழு தகவல்கள் கேரளாவை உலுக்கும் தக்காளி காய்ச்சல் பீதி! அறிகுறிகள் என்ன? செய்ய வேண்டியவை கூடாதவை..? முழு தகவல்கள்

விழிப்புணர்வு நிகழ்ச்சி

விழிப்புணர்வு நிகழ்ச்சி

அப்போது மாணவர்களிடையே பேசிய ரயில்வே பாதுகாப்பு படை உதவி முதன்மை பாதுகாப்பு ஆணையர் லூயிஸ் அமுதன் எந்த இலக்கிற்காக படிக்கிறோம் என கல்லூரியிலே முடிவெடுத்து கொள்ளுங்கள். அடிப்படை தகுதி 10ஆம் வகுப்பு இருந்தால் போதும் அதிக சம்பளத்திற்கு மத்திய அரசு ரயில்வேயில் பணி கொட்டி கிடக்கிறது. மத்திய அரசு ரயில்வே பணிகளில் 90 சதவீதம் பேர் பீகார் மற்றும் உத்திரப் பிரதேசம் மாநிலத்தில் இருந்துதான் பணியில் சேருகின்றனர்.

வேலை வாய்ப்பு

வேலை வாய்ப்பு

1 சதவீதம் கூட தமிழகத்தில் தேர்வாவதில்லை. தமிழகத்தில் குறைந்தபட்சமாக அரசு தேர்வுகளில் விண்ணப்பிக்க கூட யாரும் முன்வரவில்லை என்பது கோபம் கலந்த வருத்தமளிக்கிறது. தமிழகத்தை போல தரமான கல்வி பிற மாநிலங்களில் கிடைக்காதபோதும், அவர்கள் தங்களின் கடின உழைப்பின் மூலம் தேர்வாகின்றனர்" என்றார். அவரது இந்த பேச்சு சமூக வலைதலங்களில் வேகமாக பரவி வருகிறது.

மாணவர்களுக்கு அறிவுரை

மாணவர்களுக்கு அறிவுரை

முன்னதாக பேசிய ரயில்வே காவல்துறை கண்காணிப்பாளர் அதிவீர பாண்டியன் பேசிய போது, "மாணவர்கள் தங்கள் குடும்ப பிண்ணனியை அறிந்து படிப்பில் நாட்டம் செலுத்த வேண்டும்" தொடர்ந்து, கல்லூரி மாணவர்கள் சிலர் ரயிலில் அராஜகத்தில் ஈடுபடுவது போன்ற செயல்களில் ஈடுபட கூடாது. தனியாக சென்றால் அமைதியாக செல்லும் மாணவர்கள், கூட்டம் சேர்ந்தவுடன் குற்றச் செயல்புரிய தூண்டப்படுகிறீர்கள். இப்படி செய்வதால் வாழ்க்கையை இழந்துவிடுவோம் என்பதை மறந்துவிடுகிறீர்கள்." என்றார்.

கண்டிப்பு தேவை

கண்டிப்பு தேவை

ரயில்வே காவல்துறையினர் மாணவர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தி கொண்டிருந்த போது அங்கு கூடியிருந்த சில மாணவர்கள் விழிப்புணர்வு நிகழ்ச்சியை கவனிக்காமல் இருந்ததால் ரயில்வே காவல்துறை கண்காணிப்பாளர் அதிவீர பாண்டியன் அந்த மாணவர்களை கடுமையாக கண்டித்தார். அவர்களது சிகை அலங்காரங்களை பார்த்து விமர்சித்ததோடு, அடுத்த முறை பார்க்கும் போது அவ்வாறு இருக்கக் கூடாது என எச்சரித்தார்.

English summary
90 per cent of the central government railway workers from Bihar and Uttar Pradesh , said Louis Amuthan, assistant security chief of the Railway Security Force.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X