சங்கம் முக்கியமா? சாப்பாடு முக்கியமா? சாப்பாடுதான்.. எனக்கு பசிக்குமில்ல.. வைரலாகும் சிறுவன் வீடியோ
சென்னை: குழந்தைகள் பேசினாலே அழகுதான். அதிலும் புத்திச்சாலித்தனமாக பேசினால் கொள்ளை அழகு. இதுபோன்ற குழந்தைகள் பேசும் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
கோவை மாவட்டத்தைச் சேர்ந்த ஸ்மித்திகா என்ற குழந்தை ஏதோ தவறு செய்துவிட்டதற்கு அவரது அம்மா லேசாக அடித்தார். அதற்கு அந்த குழந்தையோ தப்பு செஞ்சா அதென்ன அடிக்கிறது... அடிக்காமல் வாயால் குணமா சொல்லோனும் என கூறியது வைரலானது.
இதை வைத்து மீம்ஸ் கிரியேட்டர்களும் பிஸியாக இருந்தனர். இதை அரசியல்வாதிகளுக்கு பக்காவாக மீம்ஸ் கிரியேட் செய்தனர்.

சங்கத்துல
அதுபோல் இன்னொரு வீடியோவும் தற்போது வைரலாகி வருகிறது. அதில் பேசும் ஸ்டைலை பார்த்தால் மதுரை பக்கம் என தெரிகிறது.
அந்த வீடியோவில் அந்த சிறுவனிடம் இளைஞர் அணி சங்கத்துல சேர்ந்துட்டே சரியா என்று யாரோ கேட்கின்றனர்.

2000 ரூபாய்
அதற்கு அந்த சிறுவனோ ஹூம் என்கிறார். போய் உங்கம்மாகிட்ட ரூ. 2000 வாங்கிவிட்டு வா என்கிறார். ம்ம் என்று சொல்லிவிட்டு அந்த சிறுவன் செல்கிறான்.

சாப்பாடு
அதற்கு அந்த நபரோ போய்விட்டு வருவியா இல்லையா என கேட்க சாப்பிட்டு வரேன் என்கிறான் சிறுவன். சங்கம் முக்கியமா இல்லை சாப்பாடு முக்கியமா என அவர் கேட்க அதற்கு அந்த சிறுவன் சாப்பாடு முக்கியம் என்கிறார்.
அழுதுகொண்டே
சங்கத்தில உறுப்பினர் நீ, சாப்பாடு முக்கியம்ங்கற என அந்த நபர் கேட்க அதற்கு சிறுவனோ சாப்பாடுதான்... அப்போ எனக்கு பசிக்கும் இல்ல நான் சாப்பிட கூடாதா? என அழுது கொண்டே கேட்கிறான். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications