கொலை மிரட்டல் வழக்கில் மீரா மிதுனுக்கு நிபந்தனை ஜாமீன் .. வெளியே வருவாரா?
சென்னை: இரண்டாவது வழக்கில் மீண்டும் கைது செய்யப்பட்ட துணை நடிகை மீரா மிதுனுக்கு சென்னை நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ளது. ஜாமீன் பெற்றாலும் மீரா மிதுன் வெளியில் வர முடியாத சூழ்நிலை உள்ளது.
துணை நடிகையும், பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமானவருமான மீரா மிதுன், பட்டியலினத்தவர்கள் பற்றி மிகவும் சர்ச்சையாக பேசியதால் அவர் மீது வன்கொடுமை தடுப்புச்சட்டம் உட்பட 7 பிரிவுகளில் போலீசார் வழக்கு பதிவுசெய்தனர்.

மீரா மிதுன் கைது
தன்னை யாரும் கைது செய்ய முடியாது என்று போலீசாருக்கு சவால் விட்ட மீரா மிதுனை கேரளாவில் கடந்த 14-ம் தேதி சென்னை சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர். அவர் சாம் அபிஷேக்கும் கைது செய்யப்பட்டார். இதனை தொடர்ந்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி விண்ணப்பித்து இருந்த மீரா மிதுனுக்கு நீதிமன்ற ஜாமீன் கொடுக்க மறுத்து விட்டது.

அடுத்த அடி
இதற்கிடையே மீரா மிதுன் தன்னைப் பற்றி சமூக வலைதளங்களில் அவதூறு கருத்துகள் கூறி வருவதாக ஜோ மைக்கல் பிரவீன் என்பவர் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் மீரா மிதுனை மீண்டும் கைது செய்தனர். ஜோ மைக்கல் பிரவீன் என்பவர் 2020-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் எம்.கே.பி நகர் காவல் நிலையத்தில் இந்த புகாரை கொடுத்து இருந்தார். அதன் அடிப்படையில் நடிகை மீரா மிதுன் மீது கொலை மிரட்டல் விடுத்தல், ஆபாசமாக பேசுதல், பிறருக்கு தொல்லை தருதல், தகவல் தொழில்நுட்ப சட்டம் உட்பட ஐந்து பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.

ஜாமீன் வழங்கியது
கைது செய்யப்பட்ட மீரா மிதுனை சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் போலீசார் இன்று காலை ஆஜர்படுத்தினார்கள். மீரா மிதுனிடம் மேலும் பலகட்ட விசாரணை நடத்த வேண்டியதுள்ளது. எனவே அவரை 2 நாள் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி வழங்க வேண்டும் என்று நீதிமன்றத்தில் போலீசார் அனுமதி கேட்டனர். இந்த நிலையில் ஜோ மைக்கல் பிரவீன் என்பவர் கொடுத்த வழக்கில் மீரா மிதுனுக்கு நீதிமன்றம் இன்று ஜாமீன் வழங்கி இருக்கிறது.
Recommended Video

வெளியே வருவதில் சிக்கல்
எம்.கே.பி.நகர் போலீஸார் கைது செய்த வழக்கில் மீரா மிதுனுக்கு நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கினாலும் அவர் வெளியில் வருவதில் சிக்கல் உள்ளது. ஏனெனில் அவர் ஏற்கெனவே எஸ்சி/எஸ்டி வன்கொடுமைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள்ளார். அதற்கான ஜாமீன் மனுவை செசன்ஸ் நீதிமன்றம் தள்ளுபடி செய்ததால் தற்போது கொலை மிரட்டல் ஜாமீன் பெற்றிருந்தாலும் மீரா மிதுனால் வெளியில் வர முடியாது.
-
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ












Click it and Unblock the Notifications