திடீரென கருப்பாக மாறிய சென்னையில் இருக்கும் பிரபல பீச்.. ஷாக்கான மக்கள்.. என்ன நடந்தது?
சென்னை: சென்னையில் உள்ள திருவொற்றியூர் கடற்கரை திடீரென கருப்பாக மாறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சென்னையை சுற்றி சுற்றி பல்வேறு கடற்கரைகள் இருக்கின்றன. இங்கே சுற்றுலா பயணிகள் அதிகம் வருவதாக இதை தூய்மைப்படுத்துவதற்கான பணிகள் நடந்து வருகின்றன.
இதில் சில மெரினா, பெஸ்ஸி போன்ற கடற்கரைகள் அதிக மக்கள் செல்லும் இடங்களாக உள்ளன. இந்த கடல் பகுதிகள் அசுத்தமாக இருப்பதாக அவ்வப்போது புகார்கள் வைக்கப்படும். இருந்தாலும் இந்த கடல் பகுதிகளை பாதுகாக்க, இங்கே இருக்கும் மீன் வளங்களை பாதுகாக்க போதுமான நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் எடுத்து வருகின்றன.

இந்த பேமஸான கடற்கரைகள் போக மற்ற சில கடற்கரைகளுக்கு மக்கள் அதிகமாக செல்ல மாட்டார்கள். மிகவும் குறைவான எண்ணிக்கையில் மட்டுமே மக்கள் செல்வார்கள். அதில் நீலாங்கரை, ஈஞ்சம்பாக்கம் போன்ற கடற்கரைகள் மக்கள் குறைவாக செல்லும் கடற்கரைகள் ஆகும்.
சென்னையில் மக்கள் வருகையை, சுற்றுலாவை அதிகரிக்கும் பொருட்டு புதிய கடற்கரைகளை உருவாக்கும் பணிகளும் நடந்து வருகின்றன. எலியட்ஸ் பீச், மெரினா பீச், திருவான்மியூர் பீச் என்று சென்னையில் பல்வேறு பீச்கள் இருக்கின்றன. சென்னை மெரீனாவை சர்வதேச தரத்திற்கு மாற்றுவதற்கான பல்வேறு பணிகள் கடந்த சில மாதங்களாக நடந்து வருகின்றன. முக்கியமாக இங்கே பல புதிய சுற்றுலா அமைப்புகள் உருவாக்கப்பட உள்ளன, சென்னையின் அடையாளங்களில் ஒன்று மெரினா பீச். உலகின் இரண்டாவது பெரிய பீச்.
வரும் நாட்களில் காசிமேடு மற்றும் திருவொற்றியூர் பாரதி நகர் இடையே உள்ள பகுதியை சுத்தம் செய்து, அதை அழகுபடுத்த உள்ளனர். அதன்பின் இதை மக்கள் பயன்படுத்தும் வகையில் சுற்றுலா பீச்சாக மாற்ற உள்ளனர். இங்கே தற்போது பழைய படகுகள் மட்டுமே நிறுத்தப்பட்டு உள்ளன. இங்கே நடைமேடை அமைப்பது, மண் பகுதியை சுத்தம் செய்வது, விளக்குகளை போடுவது, அலங்கார அமைப்புகளை ஏற்படுத்துவது போன்ற மாற்றங்களை செய்ய உள்ளனர். இதன் மூலம் மக்கள் பயன்படுத்தும் புதிய பீச்சாக இது உருவெடுக்கும் என்று கூறப்படுகிறது.
இங்கே தூய்மைப்படுத்தும் பணிகள் நடந்து வரும் நிலையில்தான் நேற்று சென்னையில் உள்ள திருவொற்றியூர் கடற்கரை திடீரென கருப்பாக மாறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அங்குள்ள மெட்ரோவாட்டர் கழிவுநீர் குழாய்களில் இருந்தும், குடியிருப்பு பகுதிகளில் இருந்தும், ஆயிரக்கணக்கான லிட்டர் கழிவுநீர் சுத்திகரிக்கப்படாமல், கடற்கரைக்கு எப்போதும் விடப்படுகிறது.
இதுதான் வடசென்னையில் உள்ள திருவொற்றியூர் கடற்கரை கருப்பு நிறமாக மாற காரணமாக பார்க்கப்படுகிறது. பல்லவன் நகர், தேசிய நகர், நாகராஜ் தோட்டம் போன்ற பகுதிகளில் இருந்து பெரும்பாலான மீன்பிடி குக்கிராமங்களில் இருந்து கழிவுநீர் கடற்கரையில் விடப்படுகிறது. கடற்கரையில் கழிவுநீர் கடலில் கலந்த காரணத்தால் சுமார் 100 அடி தூரம் வரை கடல் கருப்பாக இருந்தது.
இதனால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். சென்னை மெரினா பீச்சில் இருந்து கோவளம் வரை இருக்கும் பகுதி முழுக்க புனரமைக்க தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. இங்கே புதிய சுற்றுலா தளங்களை அமைப்பது, வாட்டர் விளையாட்டுகளை ஏற்படுத்துவது, மீனவர்களுக்காக ஜெட் போட்டுகளை வழங்குவது. புதிய பூங்காக்கங்களை ஏற்படுத்துவது. அதேபோல் வாக்கிங், ஜாக்கிங், சைக்கிளிங் செல்ல வசதிகளை ஏற்படுத்துவது என்பது போன்ற பணிகளை செய்ய தமிழ்நாடு அரசு உத்தரவிட்டு உள்ளது.
இப்படிப்பட்ட நிலையில் திருவொற்றியூர் கடற்கரை திடீரென கருப்பாக மாறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
விசிகவுக்கு 'டாட்டா'.. திமுகவுக்கு 'நோ'! தனிக்கட்சி தொடங்குகிறாரா ஆளூர் ஷாநவாஸ்? பின்னணி -
“திமுக - அதிமுக இணைந்து ஆட்சி அமைக்க சதி திட்டம் தீட்டியது யார்?” ஸ்டாலினுக்கு செங்கோட்டையன் கேள்வி -
பெப்பே காட்டிய விஜய்.. விஷத்தை கடைந்த ராகுல்.. திமுக, காங்கிரஸ் பந்தம் டோட்டலாக க்ளோஸ் ஆயிருச்சே -
"பன்றிக்கு நன்றி சொல்லி குன்றின் மேல் ஏறி".. மரியா வில்சனின் வெள்ளை அறிக்கையை விமர்சித்த திமுக -
தண்ணீர் பாட்டில் வீசுனாங்க.. ஆனால் இன்னைக்கு! ஓபிஎஸ் சொன்னதுமே ஸ்டாலின் கொடுத்த ரியாக்ஷன் -
வெளியே போறோம்..புரட்சி செய்யும் புதுக்கோட்டை மும்மூர்த்திகள்! சி.விஜயபாஸ்கருக்கு சிக்கல்! என்னாச்சு? -
OG திமுக இதுதான்.. ரெண்டு பேருமே பெரிய தலக்கட்டாச்சே! மணி & கோவை தட்டித் தூக்கும் திமுக! பரபர கொங்கு -
காங்கிரஸ் செய்த கழுத்தறுப்புகள்.. ஆசிர்வாதம் செய்த ராகுல் காந்தி! விடாத திமுக.. குதிக்கும் தலைகள்! -
விஜய் சார் இதை மறந்துடாதீங்க.. திமுக ஐடி விங்க் வெளியிட்ட மீம் வீடியோ..! -
திமுக செய்த சாதனை.. உண்மையை ஒப்புக்கொண்ட TVK.. அப்போ பெண்களுக்கான 'இந்த' திட்டம் வருமா? வரதா? -
அண்ணா அறிவாலயத்தில் ஆட்டம் போட்ட மகளிரணி.. ரீல்ஸ் போடச் சொல்லும் ஸ்டாலின்! தவெகவைப் பார்த்து சூடு? -
தவெகவுக்கு முக்கியத்துவம்?.. மாங்குடியில் ப.சிதம்பரம் செய்த சம்பவம்..அதிருப்தியில் திமுக நிர்வாகிகள்












Click it and Unblock the Notifications