கண்டுக்கவே மாட்றார்.. நீங்களாவது பரவாயில்லைணே! ஓபிஎஸ்க்கு போனை போட்ட ‘கொங்கு’ புள்ளி! பரபர அதிமுக!

Subscribe to Oneindia Tamil

சென்னை : அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் உச்சகட்டத்தில் இருக்கும் நிலையில் எடப்பாடி பழனிச்சாமி தரப்பிலிருந்து தங்களுக்கு உரிய மரியாதை அளிக்கவில்லை என ஓபிஎஸ் தரப்பிடம் பேசிய கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த முக்கிய நிர்வாகி ஒருவர் விரைவில் அவரை சந்திக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

கடந்த சில நாட்களாகவே அதிமுகவில் எடப்பாடி தரப்பில் இருக்கும் ஒன்றியச் செயலாளர்கள், பொதுக்குழு உறுப்பின உள்ளிட்ட நிர்வாகிகள் ஓபிஎஸ் பக்கம் தாவி வருகிறார்கள். அதே சமயம் பல பொதுக்குழு உறுப்பினர்கள் பலரும் பேச்சு வார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த 2 நாட்களுக்கு முன்னர் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரின் தீவிர ஆதராவளரும், எடப்பாடி பழனிசாமி தரப்பில் இருந்தவருமான உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினருமான ஐயப்பன் ஓபிஎஸ் தரப்பில் அடைக்கலமானார்.

 டெல்டா டீம்

டெல்டா டீம்

இதே டெல்டா மாவட்டங்களான திருச்சி, தஞ்சை கொங்கு மண்டல பகுதிகளான சேலம், கோவை, ஈரோடு ஆகிய மாவட்டங்களில் இருக்கும் மூத்த அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், நிர்வாகிகள் மற்றும் பொதுக்குழு உறுப்பினர்களும் ஓ.பன்னீர்செல்வம் தரப்புக்கு செல்வதற்கான பேச்சுவார்த்தைகளில் இறங்கியிருக்கின்றனர். எடப்பாடி தரப்பைப் போல முன்னாள் அமைச்சர்கள், நிர்வாகிகளை களமிறக்காமல் தானே நிர்வாகிகள் அனைவரிடமும் நேரிடையாகப் பேசி வருகிறார். இதனால் பேச்சுவார்த்தை சுணக்கமில்லாமல் தொடர்கிறது.

கொங்கு மண்டலம்

கொங்கு மண்டலம்

ஓ.பன்னீர்செல்வம் தரப்பு ஆதரவாளர்கள் உள்ள மாவட்டங்களில் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக உள்ளவர்களையும், கொங்கு மண்டலத்தில் எடப்பாடி பழனிச்சாமி எதிர்ப்பு நிர்வாகிகளையும் ஒருங்கிணைக்க தனித்தனியாக குழுக்களை அமைத்துள்ளதாகவும் அவர்களிடம் தொடர்ந்து பேச்சு வார்த்தைகள் நடத்தப்பட்டு வருவதாக கூறுகின்றனர் தேனி தரப்பினர். மேலும் டெல்டா பகுதிகளில் இருக்கும் நிர்வாகிகள் சிலரும் எடப்பாடி பழனிச்சாமி மீது கடும் அதிருப்தியில் இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கும் நிலையில் அவர்களும் விரைவில் ஓ பன்னீர்செல்வத்தை சந்திக்க இருப்பதாக கூறப்படுகிறது.

வைத்தியலிங்கம்

வைத்தியலிங்கம்

டெல்டா மாவட்டங்களை பொறுத்தவரை முழுக்க முழுக்க வைத்தியலிங்கம் இதற்காக களம் இறங்கி ஓ பன்னீர்செல்வத்தின் கரங்களை வலுப்படுத்த திட்டம் தீட்டி வருகிறார். இந்நிலையில் கொங்கு மண்டலத்தை தவிர பிற மாவட்டங்களில் எடப்பாடிக்கு செல்வாக்கு இல்லை என்ற தோற்றத்தை உருவாக்கி அதிமுகவிலிருந்து அவரை ஓரம் கட்ட வேண்டும் என்பதே ஓபிஎஸ்-ன் எண்ணமாக உள்ளது. மேலும் கொங்கு மண்டலத்திலும் எடப்பாடி பழனிச்சாமி செல்வாக்கை குறைத்தால் அது தங்கள் தரப்புக்கு பெரிய அளவிலான முன்னேற்றமாக இருக்கும் என கருதுகிறார்.

 நேரடியாக பேச்சுவார்த்தை

நேரடியாக பேச்சுவார்த்தை


இந்நிலையில் கொங்கு மண்டலத்தில் ஜெயலலிதா காலத்தில் இருந்து ஓபிஎஸ் உடன் நெருக்கமாக இருந்தவர்களுடன் அவரே நேரடியாக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். முன்னாள் அமைச்சர்கள் ,எம்எல்ஏக்கள் ,ஒன்றிய செயலாளர் அளவிலான நிர்வாகிகளிடம் நேரடியாகவே ஓபிஎஸ் பேசி வரும் நிலையில் அதிமுகவை மீட்டெடுக்கும் போது நிச்சயம் உரிய மரியாதை அளிக்கப்படும் எனக் கூறியிருக்கிறார், அப்போது ஓ பன்னீர்செல்வத்திடம் பேசிய கொங்கு மண்டல நிர்வாகி ஒருவர் பொதுக்குழு வரை தங்களை நன்கு கவனித்துக் கொண்ட எடப்பாடி பழனிச்சாமி தற்போதைய சூழ்நிலையில் கண்டுகொள்ளவில்லை என கூறியிருக்கிறார்.

நல்ல முடிவு

நல்ல முடிவு

தென் மாவட்ட நிர்வாகிகளையே இபிஎஸ் சார்ந்து இருப்பதாகவும், நீங்கள் அதே சமூகத்தைச் சார்ந்தவராக இருந்தாலும் இவ்வளவு பிரச்சனைகளுக்கு பிறகும் என்னிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியது மகிழ்ச்சியளிப்பதாக கூறியிருக்கிறார். விரைவில் யோசித்து நல்ல முடிவை அறிவிக்கிறேன் எனவும் கூறியதாக கூறப்படுகிறது. இதனால் ஓபிஎஸ் தரப்பு உற்சாகத்தில் ஆழ்ந்திருக்கிறது. இந்த தகவல் எடப்பாடி பழனிச்சாமி தரப்புக்கும் கிடைத்துள்ளதாகவும் அவர்களும் சமாதானம் பேசும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+