கிளீன் சென்னை.. பொலிவு பெரும் தலைநகர்.. குப்பைகளை அகற்ற மாஸ் முயற்சி.. பிளான் என்ன?
சென்னை: தூய்மையான நகரங்களுக்கான மக்கள் இயக்கம் என்ற பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக சென்னை மாநகராட்சி மாபெரும் குப்பை அகற்றும் பணிகளை முன்னெடுத்துள்ளது. குடியிருப்போர் சங்கங்களின் ஆதரவுடன் ஒவ்வொரு மாதமும் இரண்டு முறை நடத்தப்படும் இந்த இயக்கத்தில் நீர்நிலைகள், பூங்காக்கள் மற்றும் பிற பொது இடங்களில் உள்ள குப்பைகளை மாநகராட்சி அகற்றி வருகிறது.
சென்னையில் நாளொன்றுக்கு சுமார் 6 டன் அளவு குப்பைகள் வெளியேற்றப்படும் நிலையில் அவற்றை பாதுகாப்பாக அப்புறப்படுத்த மாநகராட்சி மேற்கொண்டுள்ள இந்த முயற்சி அனைவரின் வரவேற்பையும் பெற்றுள்ளது.

சென்னை
சென்னையை பொறுத்த அளவில் மக்கள் தொகை சுமார் ஒரு கோடி. 15 மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ள இடங்களில் இவர்கள் தங்கியுள்ளனர். இவை தவிர நாள்தோறும் இந்த பெரு நகருக்கு வந்து செல்வோரின் எண்ணிக்கை சுமார் 10 லட்சம். இந்த 15 மண்டலங்களில் நாள்தோறும் சுமார் 6 மெட்ரிக் டன் அளவில் குப்பைகள் அகற்றப்படுகின்றன.
இரண்டு ஆண்டுகளுக்கு முந்தைய கணக்கெடுப்பின்படி மாநகராட்சியில் குப்பை அகற்றும் பணிகளுக்காக தினசரி 19,300 துப்புரவுப் பணியாளர்கள், 5400 மூன்று சக்கர மிதிவண்டிகள், 12,000 உலோக குப்பைத் தொட்டிகள், 411 பேட்டரியால் இயங்கும் மூன்று சக்கர வாகனங்கள், 134 கனரக காம்பாக்டர்கள், 155 இலகு ரக காம்பாக்டர்கள், 144 கனரக/ இலகு ரக டிப்பர் லாரிகள், 22 முன்பளுதூக்கி இயந்திரங்கள், 15 இயந்திரப் பெருக்கிகள் மற்றும் 10 கடற்கரை மணல் பரப்பினைச் சுத்தம் செய்யும் வாகனங்கள் பயன்பாட்டில் உள்ளன.

குப்பை
தற்போது இந்த எண்ணிக்கை சற்று கூடுதல் குறைவாக இருக்கலாம். ஆனால் இவ்வளவு இருந்தும் நீர்நிலைகள், பூங்காக்கள் மற்றும் பிற பொது இடங்களில் தேங்கும் குப்பைகளை அகற்றுவதில் பெரும் சவால் நிலவி வருகிறது. சிங்கார சென்னை என பெயர் பெற்ற இந்நகரில் இந்த குப்பைகள் அனைவரின் முகத்தையும் சுழிக்க வைப்பதுடன் பெரும் சுகாதார சீர்கேட்டையும் உருவாக்குகிறது.
எனவே இந்நிலையை மாற்ற சென்னை மாநகராட்சி தூய்மையான நகரங்களுக்கான மக்கள் இயக்கம் என்ற பிரச்சாரத்தை முன்னெடுத்துள்ளது. இதன்படி குடியிருப்போர் சங்கங்களின் ஆதரவுடன் ஒவ்வொரு மாதமும் இரண்டு முறை நீர்நிலைகள், பூங்காக்கள் மற்றும் பிற பொது இடங்களில் உள்ள குப்பைகளை மாநகராட்சி அகற்ற முயன்று வருகிறது.

வெற்றி
இந்த இயக்கம் ஓரளவு வெற்றியடைந்துள்ளது. முதல் கட்டமாக அண்ணாநகர், நுங்கம்பாக்கம், பெருங்குடி, சிந்தாதிரிப்பேட்டை, எழும்பூர், அமைந்தகரை, அம்பத்தூர், மணலி, திருவொற்றியூர், திரு.வி.க.நகர், மாதவரம் போன்ற பல்வேறு சுற்றுவட்டாரப் பகுதிகளில் நீர்நிலைகளில் கொட்டப்பட்டிருந்த கட்டுமானக் குப்பைகள் மற்றும் குப்பைகள் அகற்றப்பட்டன. இதில் நீர் நிலைகளில் மட்டும் 128 டன் குப்பைகளும், வழிபாட்டுத் தலங்கள், பேருந்து நிறுத்தங்கள் மற்றும் பிற பொது இடங்களில் இருந்து 192 டன் குப்பைகளும் வெற்றிகரமாக அப்புறப்படுத்தப்பட்டுள்ளது.
Recommended Video

புகார்
இந்த பகுதிகளில் 916 மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளனர். இந்த பணிகளில் 127க்கும் மேற்பட்ட வாகனங்கள், 63 லாரிகள் மற்றும் 23 மண் அள்ளும் இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன. இந்த இயக்கம் தொடர்ந்து நடைபெற்றால் விரைவில் சென்னை குப்பைகளற்ற நகரமாகும் என்றும் அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
அதேபோல குப்பைகளை பொதுவெளியில் கொட்ட வேண்டாம் என்றும் அவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். அவ்வாறு குப்பைகள் கொட்டப்பட்டால் 1913 என்கிற உதவி எண்ணுக்கு தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம் என்றும் கூறியுள்ளனர்.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications