பெருங்குடியில் 113 கோடியில் பிரம்மாண்ட மேம்பாலம்.. சென்னை மெட்ரோ எடுத்த மாஸ்டர் முடிவு
சென்னை: போக்குவரத்து நெரிசலை குறைக்க பெருங்குடியில் ரூ.113 கோடியில் மேம்பாலம் அமைக்க சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது. பெருங்குடி சந்திப்பில் அமையவுள்ள இந்த மேம்பாலமானது ஐடி நிறுவனங்கள் அதிகமுள்ள எம்.ஜி.ஆர். பிரதான சாலையில் இருந்து ஒரு பிரத்யேக சாய்வு பாதையாக இருக்கும். இப்பாதை அமைந்தால் ஓ.எம்.ஆர். சாலையில் இருந்து வேளச்சேரி - தரமணி இணைப்புச் சாலையை நோக்கிச் செல்லும் வாகனங்கள் எளிதாக போக முடியும்.
சென்னையை பொறுத்தவரை ஐடி நிறுவனங்கள் அதிகம் அமைந்துள்ள ஓஎம்ஆர் சாலை, தரமணி ஐடி பார்க், பெருங்குடி, துரைப்பாக்கம், சோழிங்கநல்லூர், வேளச்சேரி, பள்ளிக்கரணை பகுதிகளில் கடுமையான நெரிசல் ஏற்படுவது வாடிக்கையாக உள்ளது. இந்த நெரிசலை குறைக்க பல்வேறு வழிகளில் அரசு முயன்று வருகிறது. ஒரே நேரத்தில் பல ஆயிரம் வாகனங்கள் காலை மற்றும் மாலை வேளையில் செல்வதால் தாங்க முடியாத நெரிசல் ஏற்படுகிறது.
மற்ற நேரங்களிலும் நெரிசல் இயல்பாகவே அதிகமாக உள்ளது. சென்னையின் பிரதான நுழைவுவாயிலான ஜிஎஸ்டி சாலைக்கு நிகராக நெரிசல் உள்ள பகுதியாக ஓஎம்ஆர் சாலை இருக்கிறது. இதனால் எத்தனை சிக்னல்களில் மேம்பாலம் அமைத்தாலும் நெரிசல் குறைந்தபாடில்லை.. குறிப்பாக பெருங்குடி, எம்ஜிஆர் சாலை சந்திப்பில் நெரிசல் அதிகமாக இருக்கிறது. அங்கு தான் பல ஐடி நிறுவனங்கள் அமைந்துள்ளன. அங்கு மேம்பாலம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

சென்னை நந்தனத்தில் உள்ள மெட்ரோ ரெயில் தலைமை அலுவலகத்தில் நேற்று நெரிசலை குறைப்பது தொடர்பாக கலந்தாய்வு நிகழ்ச்சி நடந்தது. அப்போது பெருங்குடி சந்திப்பு மற்றும் எஸ்.ஆர்.பி. டூல்ஸ் சந்திப்புகளில் நிலவும் போக்குவரத்து நெரிசலை குறைக்க ரூ.113.80 கோடியில் மேம்பாலங்கள் கட்ட தனியார் நிறுவனத்துக்கு சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் ஒப்பந்தம் வழங்கியது. சாலைகள், மின்சாரப் பணிகள், வடிகால் அமைப்புகள் மற்றும் இதர உள்கட்டமைப்பு வசதிகளுடன் இந்த மேம்பாலம் அமைய இருக்கிறது.
18 மாதங்களில் இந்த பணிகளை முடித்திட அரசு திட்டமிட்டுள்ளது. இதேபோல, பெருங்குடி சந்திப்பில் அமையவுள்ள இந்த மேம்பாலமானது எம்.ஜி.ஆர். பிரதான சாலையில் இருந்து ஒரு பிரத்யேக சாய்வு பாதையைக் கொண்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது சோழிங்கநல்லூர் நோக்கிச் செல்லும் வாகனங்கள் தடையின்றி வலதுபுறம் திரும்புவதற்கு வழிவகை செய்யும் என மெட்ரோ அதிகாரிகள் தெரிவித்தனர்.
எஸ்.ஆர்.பி. டூல்ஸ் சந்திப்பில் அமையும் பாலம் ஓ.எம்.ஆர். சாலையில் இருந்து வேளச்சேரி - தரமணி இணைப்புச் சாலையை நோக்கிச் செல்லும் வாகனங்கள் எவ்விதத் தடையும் இல்லாமல் வலதுபுறம் திரும்புவதற்கு வழிவகை செய்யும். இதன் மூலம் அந்தச் சந்திப்பில் நிலவும் போக்குவரத்து சீராகும் என சென்னை மெட்ரோ ரெயில் நிறுவன அதிகாரிகள் கூறினார்கள்.
இந்த நிகழ்ச்சியில் சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் சித்திக், திட்ட இயக்குநர் அர்ச்சுனன், தலைமை பொது மேலாளர் லிவிங்ஸ்டோன் எலியேசர், ஜெயசெல்வின் கிளாட்சன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த மேம்பால பணிகள் ஓ.எம்.ஆர் (OMR) சாலையில் உள்ள போக்குவரத்து நெரிசலை பெருமளவு குறைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 18 மாதங்களுக்குள் பணிகளை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
-
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சிறகடிக்க ஆசை : கண்ணீர் விட்டு அழுத மனோஜ்.. இவருக்கா இந்த நிலைமை? முத்து மீனா செய்த செயல்! கதையே மாறுது -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
Illatharasi: இல்லத்தரசிகளுக்கு ரூ 8000! திமுக கூப்பனில் பிரிட்ஜ், வாஷிங் மெஷின் வாங்க முடியுமா? -
சிறுசேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்தவர்களுக்கு சூப்பர் சர்ப்ரைஸ்.. ஏப்ரல் 1 மத்திய அரசின் அதிரடி -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
சிலிண்டர் ஏஜென்சி வைத்திருக்கும் நண்பனின் தந்தைக்கு மாதம் 1.90 லட்சம் வருமானம்.. நெட்டிசன் தகவல் -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்?












Click it and Unblock the Notifications