பத்மப்ரியா நம்பர் தா! இல்லைனா *** பண்ணிடுவேன்! ஸ்டேசனுக்கு ஓடிய கேமராமேன்! திடீரென வெளிவந்த வீடியோ!
சென்னை : நடிகை பத்மபிரியாவின் செல்போன் எண்ணை கேட்டு ஒளிப்பதிவாளர் லட்சுமி பிரபாகருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக சூர்யா என்பவர் மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ள நிலையில், லட்சுமி பிரபாகரால் பல பெண்கள் பாலியல் ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் நடிகை பத்மபிரியாவை நேரில் அழைத்து விசாரிக்க வேண்டும் என புகாருக்குள்ளான சூர்யா வீடியோ வெளியிட்டுள்ளார்
சென்னை ராமாபுரம் பாரதி சாலையில் வசித்து வருபவர் லட்சுமி பிரபாகர். இவர் சினிமா துறையில் கடந்த 30 வருடங்களாக கேமரா மேனாக வேலை செய்து வருகிறார்.
இந்நிலையில் கடந்த 2006 ஆம் ஆண்டு சூர்யா என்பவர் பிரபாகரனை சந்தித்து நடிகை பத்மபிரியாவை வைத்து பாரதியார் பாடல் ஒன்றை ஒளிப்பதிவு செய்து தருமாறு கேட்டுள்ளார்.

பத்மபிரியா
இதனிடையே இருவரும் நண்பர்களாக பழகி வந்த நிலையில் கடந்த ஜூன் மாதம் சூர்யா நடிகை பத்மப்ரியாவின் செல்போன் நம்பரை கேட்டு பிரபாகரனுக்கு தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது, பிரபாகரன் மொபைல் நம்பரை தர மறுத்ததால் ஆத்திரமடைந்த சூர்யா தகாத வார்த்தைகளால் திட்டியதுடன் பிரபாகரன் மனைவியை கற்பழித்து விடுவதாக கூறியுள்ளார்.

செல்போன் நம்பர்
மேலும் செல்போன் நம்பரை தர மறுத்தால் கொலை செய்து விடுவதாக கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது. ஆகவே கேமராமேன் பிரபாகரன் இது சம்பந்தமாக ராமாபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், இச்சம்பவம் குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கொலை மிரட்டல்
நடிகையின் செல்போன் நம்பரை கேட்டு திரைப்பட கேமரா மேனுக்கு கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில் புகாருக்குள்ளான சூர்யா ஒரு வீடியோவினை வெளியிட்டுள்ளார். அதில் தன் மீதான புகாரை மறுத்துள்ளதோடு, கேமரமேன் லட்சுமி பிரபாகர் மீது அடுக்கடுக்கான புகார்களை கூறியுள்ளார்.

கார் உண்மையானது இல்லை
அதில்," ஒளிப்பதிவாளராக பணியாற்றி வரும் லட்சுமி பிரபாகர் பல பெண்களின் வாழ்க்கையை சீரழித்துள்ளதாகவும் சினிமா வாய்ப்பு தருவதாக பல பெண்களை ஏமாற்றியுள்ளதாக கூறுகிறார். மேலும் தன் மீதான புகார் உண்மையானது இல்லை எனவும் லட்சுமி பிரபாகரால்தான் பாலியல் ரீதியாக பல பெண்கள் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள் என்றும் நடிகை பத்மபிரியாவை நேரில் அழைத்து காவல் நிலையத்தில் விசாரித்தால் உண்மைகள் வெளிவரும் என்றும் சூர்யா கூறி இருக்கிறார் தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications