அம்மா அப்பா சாரி.. கணக்கு கெமிஸ்ட்ரி மிஸ் ரொம்ப பிரஷர் பண்றாங்க.. முடியல! வெளியான மாணவியின் கடிதம்!
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி சின்னசேலம் தனியார் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வந்த மாணவி மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ள நிலையில் மாணவி தனது கைப்பட தனது பெற்றோருக்கு எழுதியதாக கடிதம் ஒன்று சமூக ஊடகங்களில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது.
கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 17 வயது மாணவி ஒருவர் கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் கனியமுத்தூர் பகுதியில் உள்ள சக்தி மெட்ரிகுலேஷன் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வந்தார்.
இந்நிலையில் கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு பள்ளி மாணவி பள்ளியின் கட்டிடத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதாக அவரது பெற்றோருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அவர்கள் சென்று பார்த்த போது மாணவி உயிரிழந்துவிட்டதாக உடலை வாங்கிச் சென்று விடுமாறு பள்ளி நிர்வாகத்தினர் வற்புறுத்தியதாக கூறப்படுகிறது.

பள்ளி கலவரம்
மூன்று நாட்களுக்கும் மேலாகப் போராட்டம் நீடித்து வந்த நிலையில் நேற்று பள்ளி முன்பு திடீரென கூட்டம் கூடி போராட்டம் கலவரமாக வெடித்தது. போராட்டத்தில் நூற்றுக்கணக்கானோர் பங்கேற்ற நிலையில் கலவரமாக மாறியது. பள்ளிக்குள் புகுந்த போராட்டக்காரர்கள் பள்ளி வளாகத்தில் இருந்த பேருந்துகளை அடித்து உடைத்ததோடு தீ வைத்து கொளுத்தினர். மேலும் பள்ளியும் சூறையாடப்பட்டது. பாதுகாப்புக்காக இருந்த போலீசார் தாக்கப்பட்டதோடு 17 போலீசாருக்கு பலத்த காயம் ஏற்பட்டதாக தகவல் வெளியானது.

மாணவி எழுதியதாக கடிதம்
இதையடுத்து கூடுதல் போலீசார் வரவழைக்கப்பட்டு போராட்டக்காரர்கள் விரட்டியடிக்கப்பட்ட நிலையில் இச்சம்பவம் குறித்து உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபி சைலேந்திரபாபு உறுதி அளித்தார். மேலும் மாணவி மரண வழக்கு சிபிசிஐடி போலீஸ் விசாரணைக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் பள்ளியின் தாளாளர் முதல்வர் செயலாளர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். இந்த நிலையில் மாணவி எழுதியதாக கடிதம் ஒன்று சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

உருக்கமான தகவல்
அந்த கடிதத்தில் மாணவி பல உருக்கமான தகவல்களை வெளியிட்டுள்ளார். அதில்,"நான் நல்லாத்தான் படிப்பேன் கெமிஸ்ட்ரியில் நிறைய ஈக்குவேஷனா இருக்கு.. எனக்கு ஈகுவேஷன் படிக்கவே வரல அதனால கெமிஸ்ட்ரி மிஸ் ரொம்ப பிரஷரா பண்றாங்க..ஒரு நாள் அவங்க மேத்ஸ் மிஸ் கிட்ட நான் படிக்கவே மாட்டேன்னு சொல்லிட்டாங்க.. அவங்களும் என்ன பிரஷர் பண்றாங்க.. ஹாஸ்பிடல்ல படிக்காம என்ன பண்றேன்னு ரொம்ப திட்டிட்டாங்க.. எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு நான் படிக்கவே மாட்றேன்னு ரெண்டு பேர்ல யாரோ இவ ஒழுங்காவே படிக்க மாற்றான்னு எல்லா ஸ்டாஃப் கிட்டயும், சொல்லிட்டாங்க..
Recommended Video

சாரி அம்மா அப்பா
இன்னிக்கு காலையில மார்னிங் கிளாஸுக்கு வந்த ஸ்டாப் என்ன படிக்கவே மாட்டியாமே விளையாட்டுத்தனமாவே இருக்கியாமேன்னு கேட்கிறாங்க.. மேத்ஸ் மிஸ்ஸும், கெமிஸ்ட்ரி மிஸ்ஸும் என்ன ரொம்ப பிரஷர் பண்றாங்க.. என்னால முடியல.. மேத்ஸ் மிஸ் என்ன மட்டுமில்ல இங்க இருக்க எல்லாரையுமே டார்ச்சர் பண்றாங்க.. சாந்தி மேடம் உங்களுக்கு நான் ஒரு ரெக்வெஸ்ட் வைக்கிறேன் எனக்கு இந்த வருஷத்துக்கு கட்ற ஸ்கூல் பீஸ் மட்டும் எங்க அம்மா கிட்ட திருப்பி கொடுத்துவிடுங்கள்.. புக் ஃபீஸ் ஹாஸ்டல் பீஸும் கூட கொடுத்துடுங்க.. ஏன்னா நான் இருந்தது கொஞ்ச நாள் தான்.. ப்ளீஸ் மேம் சாரி அம்மா சாரி அப்பா சாரி சந்தோஷ் சாரி துர்கா மேகலா நசீரா நிவேதா ரீனா வேல்விழி சுருதி ஏசி மகா எக்ஸ்ட்ரா" என கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications