"மசாஜ் சென்டர்".. உள்ளே திறந்து பார்த்தால்.. அச்சச்சோ.. அலறிய ஆழ்வார்பேட்டை.. சிக்கிய "தலை"
சென்னை: சென்னையில் மசாஜ் சென்டரில் பட்டப்பகலில் விபச்சாரம் நடத்தியதாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும், இதில் ஈடுபடுத்தப்பட்ட பெண்கள் மீட்கப்பட்டுள்ளனர்.
சென்னையில் இது போன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், இது தொடர்பாக காவல்துறையினர் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்துள்ளன.
தொடர்ந்து அதிகரித்து வரும் பொருளாதார நெருக்கடி, வேலையின்மை, சமூக பாதுகாப்பான வேலை இல்லாது, போதிய ஊதியம் இல்லாது, அதிகரித்து வரும் போதை பொருட்கள் புழக்கம் போன்றவை பெண்களை விபச்சார தொழில்களை நோக்கி நடத்துவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

சென்னையில் மசாஜ் சென்டர்
சென்னையில் வாரத்திற்கு ஒரு முறையோ அல்லது மாதத்திற்கு இரண்டு முறையோ விபச்சாரம் குறித்த செய்திகள் தொடர்கதையாக வந்தவண்ணமிருக்கிறது. இம்முறை ஆழ்வார்பேட்டை ஸ்ரீராம் காலணி பகுதியில் இயங்கி வந்த மசாஜ் சென்டர்களில் விபச்சார தடுப்பு பிரிவு காவல்துறையினர் அதிரடி ரெய்டு நடத்தியதில் சென்டருக்குள் விபச்சாரம் நடந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அதேபோல இதில் ஈடுபடுத்தப்பட்ட நான்கு பெண்கள் மீட்கப்பட்டுள்ளனர்.

அதிரடி ரெய்டு
இந்த பகுதியில் விபச்சாரம் நடைபெற்று வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து காவல்துறையினர் சாதாரண உடையில் அப்பகுதியில் ரோந்தில் ஈடுபட்டனர். இதில் போலீசாருக்கு கிடைத்த தகவல் உண்மை என தெரிய வந்துள்ளது. இதனையடுத்து இதில் ஈடுபடுவோர், ஈடுபடுத்தப்படுவோர் மற்றும் இதனை நடத்துவோரை கைது செய்ய திட்டமிட்டனர். திட்டத்தை தொடர்ந்து இன்று அதிரடியாக மசாஜ் சென்டருக்குள் காவலர்கள் நுழைந்துள்ளனர்.

தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில்
அங்கு பெண்களை வைத்து விபச்சாரம் நடத்திய மசாஜ் சென்டர் உரிமையாளர் அமல்ராஜை கைது செய்தனர். மேலும் இதில் ஈடுபடுத்தப்பட்ட பெண்களையும் காவல்துறையினர் மீட்டுள்ளனர். தமிழ்நாடு முழுவதும் இதுபோன்ற மசாஜ் சென்டர்கள் தொடர்ந்து இயங்கி வருகின்றன. கடந்த ஏப்ரலில் ஈரோட்டில் இதுபோன்ற மசாஜ் சென்டர் கண்டறியப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதேபோல நாமக்கல் மாவட்டத்திலும் கடந்த ஜூலை மாதம் இதுபோன்ற மசாஜ் சென்டர் கண்டறியப்பட்டது.

காரணம்
தொடர்ந்து அதிகரித்து வரும் பொருளாதார நெருக்கடி, வேலையின்மை, சமூக பாதுகாப்பான வேலை இல்லாது, போதிய ஊதியம் இல்லாது, அதிகரித்து வரும் போதை பொருட்கள் புழக்கம் போன்றவை பெண்களை விபச்சார தொழில்களை நோக்கி நடத்துவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
இந்த கொடுமையிலிருந்து பெண்களை நிரந்தரமாக காப்பதற்கு அவர்களின் வாழ்வாதாரத்தில் மாற்றங்களை ஏற்படுத்தினால் மட்டுமே முடியும் என்று நீதிமன்றங்களும் பல வழக்குகளில் கூறியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
ஆலங்குளம் அருகே 6 பேர் அரிவாளால் வெட்டப்பட்ட வழக்கில் ஷாக்.. ஒருவரை சுட்டுப் பிடித்தது போலீஸ்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Kerala: உடலில் 91 காயங்கள்.. கண்ணை மறைத்த கள்ளக்காதல்.. 1½வயது குழந்தையை துடிக்க துடிக்க கொன்ற கொடூரம்! அதிர்ந்த கேரளா -
Thirupparankundram Files: திருப்பரங்குன்றம் பைல்ஸ் ஆவணப்பட திரையிடலுக்கு அனுமதி மறுப்பு.. "மேலிட உத்தரவு" என்ற போலீஸ் -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications