• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஆப்பிரிக்கக் காட்டில் குரங்கு வேட்டை நடத்தும் பச்சைத் தமிழன்! – யார் இந்த புவனி தரன்?

By staff
Google Oneindia Tamil News

சென்னை: பத்தாவதுகூட சரியாக முடிக்கவில்லை. ஆனால் உலகம் சுற்றும் தமிழனாக வலம்வருகிறார் புவனி தரன். யார் இவர்? எப்படி சாத்தியம்?

உலகமே அறியப்பெற்ற நகரமான தமிழகத்தின் தஞ்சாவூரைச் சேர்ந்தவர்தான் புவனி. வெறும் 25 வயதே நிரம்பிய இளைஞர். சாதாரணமாக உள்ளூர் சானல் ஒன்றில் வேலை பார்த்துவந்த இவர், 'தமிழ் டிரெக்கர்' சானல் ஆரம்பித்து இன்று உலகம் சுற்றும் பயணியாக மாறி இருக்கிறார். அதுவும் ஆப்பிரிக்கா காடுகளில் வாழும் பழங்குடி மக்கள் வரை பயணித்திருக்கிறது புவனியின் கேமிரா கண்கள்.

தமிழகத்தில் மேலும் 5 நாட்களுக்கு கனமழை - சென்னையில் லேசான மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்தமிழகத்தில் மேலும் 5 நாட்களுக்கு கனமழை - சென்னையில் லேசான மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்

 எப்படி நடந்தது இந்த மாற்றம்?

எப்படி நடந்தது இந்த மாற்றம்?

"பக்கா தஞ்சாவூர் பையன் நான். படிச்சது ஒன்பதாவது வரைக்கும்தான். அதுக்கு மேல படிக்க வீட்டில் வசதி இல்ல. சின்ன வயசுலயே அப்பா இரந்துவிட்டார். அம்மா மட்டுமே குடும்பத்தைக் கவனிக்க வேண்டிய நிலை. ஆகவே நான் வீட்டுக் காப்பாற்ற லோக்கல் சானல் ஒன்றில் வேலைக்குச் சேர்ந்தேன். அங்க போகும் முன்பே கம்ப்யூட்டர் மேல ஈர்ப்பு இருந்தது. ஆகவே அப்படியே எடிட்டிங் கத்துக்கிட்டு பகுதிநேரமா வேலையையும் பார்த்தேன். அந்த வருமானம் வீட்டுக்கு உபயோகரமா இருந்தது" எனச் சொல்லும் புவனி தரன் தமிழில் முதன்முதலாக டிராவல் வீடியோக்களை வெளியிட்ட முன்னோடி யூடிடியூபர்களில் ஒருவர். அவரது முயற்சிக்கு முன்மாதிரிகள் தமிழ்நாட்டில் அதற்கு முன்பாக இல்லை. "முதல்ல டிராவல் சம்பந்தமா நிறை வீடியோக்களைத் தேடிப் பார்த்தேன். அதேபோல சானல்கள் தமிழில் இல்லை. அதிகமா ஆங்கிலத்தில்தான் இருந்தது. ஆகவே நாமே இதை செஞ்சா என்ன என்று தோன்றியது. ஒருவேகத்தில் ஆரம்பித்தேன். முன் அனுபவமே இல்லாம நானே கொஞ்சம் கொஞ்சமா கத்துகிட்டு முன்னேறினேன்" என்று கூறுகிறார் புவனி.

முதல் பயணம்

முதல் பயணம்

"லோக்கல் சானல் மூலமா கிடைச்ச வருமானத்தை வைத்து முதன்முதலா ஒரு செகண்ட் ஹாண்டு ராயல் என்ஃபீல்டு பைக் வாங்கினேன். அத வச்சு ஒரு பயணத்துக்கு திட்டம் போட்டேன். ஊர் பக்கத்துலயே இருக்கிற கல்லணை, ஊட்டிக்குப் போய் ஷூட் பண்ணி வீடியோ போட்டேன். அதுதான் முதல் முயற்சி" என்கிறார். முதலில் தமிழ்நாட்டிற்குள் பயணத்தை மேற்கொண்ட புவனி, அடுத்தகட்டமாக இந்தியா முழுக்க பயணிக்கத் திட்டம் போட்டார். ஒருமுறை வட இந்தியா பயணம் போன அவர், கையில் இருந்த காசுகள் செலவாகிவிடவே ஜெய்ப்பூர் முதல் சென்னை வரை லிஃப்ட் கேட்டே வீடு வந்து சேர்ந்துள்ளார். இதற்கு மொத்தம் 12 நாள்கள் பிடித்துள்ளது. பயணத்தின் மீது காதல் கொண்ட புவனிக்கு அதிக பொருளாதார வசதிகள் இல்லை. ஆகவே அதிகப்படியான பயணங்களை லோ பட்ஜெட்டில் திட்டமிட்டு, காசு காலியானதும் லிஃப்ட் கேட்டு பயணிக்கும் வழக்கத்தைக் கடைப்பிடிக்கும் ஐடியாவை கண்டுபிடித்துள்ளார். கொரோனாவில் உலகமே முடங்கிப் போய் தவித்தபோது, புவனியும் உலகம் சுற்ற முடியாமல் முடங்கினார். அதன் பின் நிலைமை சகஜமாகவே அடுத்த பாய்ச்சலை அதிரடியாக ஆரம்பித்தார் புவனி. ஒரு மாத திட்டமாக ஆப்பிரிக்கா போன அவர் அங்கேயே 8 மாதங்கள் வரை இருந்து பல சாகசமான வீடியோக்களை வெளியிட்டு பெரிய ரீச் ஐ எட்டி உள்ளார் புவனி. அவர் ஆப்பிரிக்கா பழங்குடி மக்களுடன் செலவழித்து பிடித்த வீடியோக்கள் ஒவ்வொன்றும் 2 மில்லியன் 1.5 மில்லியன் என எக்கச்சக்கமான வீவ்ஸ்-ஐ எட்டிப் பிடித்துள்ளன. ஏறக்குறைய தனிமனிதனாக தனது யூடியூப் சானல் 940கே பின்தொடர்பவர்களைச் சம்பாதித்திருக்கிறார். இந்த முன்னேற்றம் மாபெரும் ஆச்சரியம்.

கடைசியில் சாப்பிட்டால் உடம்பு ஏற்காது

கடைசியில் சாப்பிட்டால் உடம்பு ஏற்காது

மலேசியா பயணம் முடிந்து ஊர் வந்த கையோடு நாம் புவனியைச் சந்தித்துப் பேசினோம். "தஞ்சாவூர்ல இருந்தப்ப Couch surfing இணையதளம் மூலமா உலகம் முழுக்க உள்ள பயணிகள் எங்க ஊருக்கு வருவாங்க. அவங்களுக்கு எங்க வீட்டிலேயே தங்க வைக்க வசதிகள் செய்து கொடுப்பேன். அதன் மூலம்தான் உலகம் முழுக்க ஒரு அறிமுகம் கிடைச்சது. அத வச்சுத்தான் ஆப்பிரிக்காவுக்கு தயார் ஆனேன். முதல்ல கென்யாவுக்கு என் நண்பர் மூலமா போனேன். கென்யாவைப் பற்றி வைவ் ஆ தமிழில் வெளி யான வீடியோக்களை வெளியிட்டேன். அதற்குத்தான் பெரிய வரவேற்பு. கையில் பத்தாயிரம் ரூபாயோடதான் போனேன். அந்த வீடியோ நல்ல வருமானத்தைக் கொடுத்ததால் 8 மாதம் வரை தங்கினேன். தான்சான்யாவில் குரங்குவேட்டை பழங்குடி மக்களுடன் இரவு ஒருமணிக்கு காட்டுக்குப் போய் வேட்டை ஆடினேன். அந்தப் பழங்குடிகள் மொத்தமே 5400 பேர்தான் இருக்காங்க. அவங்களுக்கு வேட்டையாடி சாப்பிட்டாத்தான் உடம்புக்கு ஏற்றுக்கொள்ளும்.

தொடர்ந்து தொழில் முறை பயணி

தொடர்ந்து தொழில் முறை பயணி

கடையில் சாப்பிட்டா ஒத்துக்காது. அப்படியான சுத்தமான பழங்குடிகள். அந்த வீடியோவுத்தான் 2 மில்லியன் வீவ்ஸ் வந்தது" எனச் சொல்லும் புவனி அந்த மக்களுடன் குரங்கை சமைத்து உண்டுள்ளார். மேலும் எலி வேட்டை நடத்தி சாப்பிட்டுள்ளார். அத்தனை அனுபவமும் புதிது எனச் சொல்லும் புவனிக்கு தொழில் முறையாக மக்களுக்குப் பிடிக்கும் பயணங்களைத் தேர்வு செய்து வீடியோ போட்டால்தான் அதிகம் போகிறது. என் ஆசைக்கு ஊர் சுற்றுவது குறைந்துவிட்டது. இன்னும் இரண்டு ஆண்டுகள் வரை நான் யூடியூப்பில் இருப்பேன். பிறகு ஒரு டிராவல் கம்பெனி ஆரம்பித்து அந்தப் பணியை மேற்கொள்வேன். இறுதிக்காலம் வரை பயணியாக வாழ்வதில் சிக்கல் இருக்கிறது. தொடர்ந்து தொழில் முறை பயணியாக வாழ்வது சிரமம் என்கிறார்.

English summary
Achievers of Tamil nadu, tamil trekker biography: A young man Bhuvani Tharan from Thanjavur is traveling the world for his youtube channel. You can find the answer who is tamil trekker here. tamil trekker bhuvani wife and family life explained in this article.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X