திடீரென ஓபிஎஸ் வீட்டு முன்பு குவிந்த குடுகுடுப்பைக்காரர்கள்.. என்ன வாக்கு சொன்னார்கள் தெரியுமா?
சென்னை : அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரம் பெரிதாய் வெடித்துள்ள நிலையில், திடீரென ஓ.பன்னீர் செல்வத்தின் வீட்டின் முன் குவிந்த 10க்கும் மேற்பட்ட குடுகுடுப்பைக்காரர்கள், அதிமுகவின் அடுத்த பொதுச்செயலாளர் ஓபிஎஸ் அய்யா தான் என உருட்டிய வீடியோ சமூக வலைதளங்களில் மிக வேகமாகப் பரவி வருகிறது.
Recommended Video
அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரம் தொடர்பாக இவ்வளவு நாளாக தங்களது ஆதரவாளர்கள் மூலம் வார்த்தை போர் நடத்தி வந்த எடப்பாடி பழனிச்சாமியும், ஓ.பன்னீர்செல்வமும் தற்போது நேரடியாக மோதத் தொடங்கியுள்ளனர்.
உள்ளாட்சி அமைப்புகளில் அதிமுகவினர் போட்டியிட சிக்கல் ஏற்பட்ட நிலையில் இது தொடர்பாக படிவங்களை அனுப்பினால் தான் கையெழுத்திடுவதாக கடிதம் அனுப்பினார் ஓபிஎஸ்.

எடப்பாடி பழனிச்சாமி கடிதம்
இதற்கு பதில் கடிதத்தை நேற்று எடப்பாடி பழனிச்சாமி அனுப்பினார். அதில் தன்னை தலைமை கழகச் செயலாளர்கள் என்றும் ஓபிஎஸ்ஐ பொருளாளர் என்றும் குறிப்பிட்டுள்ளார் கடந்த 23ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழுவில் 2021 ஆம் ஆண்டு செயற்குழுவில் கொண்டுவரப்பட்ட சட்ட திருத்தங்கள் அங்கீகரிக்கப்படாததால் ஒருங்கிணைப்பாளர் பதவி காலாவதி ஆகிவிட்டதாக தெரிவித்திருந்தார்.

ஓபிஎஸ்க்கு பதிலடி
மேலும் இருவரும் கூட்டாக அழைப்பு கொடுத்த பொதுக்குழுவை நடத்த விடாமல் காவல்துறைக்கும் நீதிமன்றத்திற்கும் சென்று விட்டு அதிமுகவை செயல்படாத நிலைக்கு கொண்டு சென்று விட்டு தற்போது கடிதம் அனுப்புவது ஏற்புடையதாக இல்லை எனக் கூறியிருந்தார். கடிதத்தின் முன்னதாக அன்பு அண்ணன் ஓ பன்னீர் செல்வத்திற்கு என்றும் எடப்பாடி பழனிச்சாமி அந்த கடிதத்தில் குறிப்பிட்டு இருந்தார்

குடுகுடுப்பைக்காரர் குறி
இந்நிலையில் சென்னையில் உள்ள ஓ.பன்னீர்செல்வத்தின் வீட்டில் நேற்றும் ஆலோசனை நடத்தி வந்த நிலையில், அவரது வீட்டுக்கு முன் திடீரென குடுகுடுப்பைக்காரர் ஒருவர் வந்து ஓபிஎஸ் தான் அதிமுகவின் அடுத்த தலைமை எனவும், நல்ல காலம் பொறக்குது என குடுகுடுப்பை உருட்டியபடி பேசிய வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. அதே நேரத்தில் சென்னையில் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சொல்லி வைத்தார் போல் 10க்கும் மேற்பட்ட குடுகுடுப்பைக்காரர்கள் குவிந்தனர்.

ஓபிஎஸ் தரப்பு உற்சாகம்
மேலும் அதிமுகவின் அடுத்த பொதுச் செயலாளராக மட்டுமல்ல அடுத்த முதல்வராகவும் ஓபிஎஸ் ஐயா தான் வருவார் என கூடி நின்ற குழுவைக்காரர்கள் உற்சாகமாக உருட்ட அங்கிருந்த அதிமுக நிர்வாகிகள் குஷியானார்கள். தொடர்ந்து ஓ பன்னீர்செல்வத்தை சந்தித்து பேசிய குடுகுடுப்பைக்காரர்கள் அவருக்கு இனி நல்ல காலம் தான் எனக் கூறி சால்வை அணிவித்து மரியாதை அளித்ததோடு தங்களது வாழ்த்துக்களையும் கூறினர். தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது. அதே நேரத்தில் இதெல்லாம் செட்டப் வேலை என விமர்சிக்கின்றனர் இபிஎஸ் ஆதரவாளர்கள்.
-
இபிஎஸ் வர்றதுக்குள்ள இப்படியா.. எஸ்.பி.வேலுமணி முகத்துக்கு நேராக துரோகின்னு கத்திய அதிமுக நபர் இவரா? -
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
SP Velumani: எல்லாத்துக்கும் ஒரு லிமிட் இருக்கு..சீண்டிய எடப்பாடி சீறிய வேலுமணி..வழியனுப்பகூட வரலையே -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications