எனக்கு துணை முதல்வர் பதவி தருவதாக ஆதவ் அர்ஜுனா சொன்னார்.. தாராபுரத்தில் சீமான் பகிர்ந்த சீக்ரெட்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தாராபுரம், மதுராந்தகம் இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடுகிறது. தனது கட்சி வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் செய்த சீமான், விஜய்யை கடுமையாக சாடினார். ஆதவ் அர்ஜுனா தன்னை வந்து சந்தித்த போது துணை முதல்வர் பதவி தருவதாக கூறினார். ஆட்டுக்கு இருக்கும் மூளை கூட தவெக கட்சியினருக்கு கிடையாது என்று சீமான் காட்டமாக கூறினார்.

தாராபுரம் தொகுதியில் நாம் தமிழர் வேட்பாளர் கார்த்திகாவை ஆதரித்து நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பிரசாரம் செய்தார். அப்போது தமிழக முதல்வர் விஜய்யையும், தவெகவையும் தனது பாணியில் கடுமையாக விமர்சித்தார். சீமான் பேசியதாவது:-

Aadhav Arjuna offered the Deputy Chief Minister post Seeman speaks in Dharapuram

ஆட்டுக்கு கூட மூளை இருக்கு

ஆதவ் அர்ஜுனா வந்து.. எடப்பாடி சொல்ற மாதிரி, ஆதவ் என்னைய கூப்டு பேசுனதுக்கு எதுக்கு தெரியுமா? எடப்பாடி பழனிசாமியுடன் நான் கூட்டணி வைக்க வேண்டும். நான் துணை முதல்வர்.. அப்படித்தான் சொன்னார். அதற்கு ஒத்துக்கொள்ளவில்லை என்றதும் வேளாண் துறை அமைச்சர் ஆக்கிரலாம் என்றார். யாரு நீங்கள்ளாம். ஆட்டுக்கு கூட கொஞ்சம் மூளை இருக்கு..

இந்த வெற்றிக் கழகம் கட்சியில் இருப்பவர்களுக்கு ஒன்றும் கிடையாது. மக்களின் பிரச்சினையை மனதில் இருந்து பேசத் தெரியாதவன். திரும்ப திரும்ப சொல்கிறேன். குறிப்புகளோடு பேசுகிறவன் அல்ல தலைவன். குறிக்கோளோடு பேசுகிறவன் அவன் தான் தலைவன். ஏதோ அவர் ஓட்டிட்டார். நாங்கள் 15 ஆண்டுகளாக திராவிட அரசியலுக்கு எதிரான அரசியலை கட்டமைத்து வைத்தோம். அவர் வந்து அறுவடை செய்துவிட்டார்.

தம்பி ஆட்சியில் நீங்களும் வாழ்கிறீர்கள். நானும் வாழ்கிறேன். எதாவது ஒன்று நடக்கட்டும். என்னைக்காவது ரோட்டில் இறங்கி தண்ணீர் இல்லை.. கரண்ட் இல்லை என்று போரடினால் நாங்கள் விசில் ஊதிக்கொண்டே வந்து கொண்டு இருப்போம். கொடுமைதான். சட்டசபையில் சட்டம் ஒழுங்கு கெட்டுப்போச்சு என்று கேள்வி கேட்டால் மூன்று நாள் கழித்து வந்து பேசுகிறேன் என்று போகிறார். எழுதி படிக்க வேண்டும். சட்டம் ஒழுங்கிற்கும் சர்க்காரியா கமிஷனுக்கும் மிசாவுக்கும் என்ன சம்மந்தம் இருக்கு..

அக்கறையை காட்டுனீர்களா?

நானாக இருந்தால் ஆங்காங்கே குற்றங்கள் நடக்கிறது. இது தொடக்க நிலைதான். போகப்போக இந்த குற்றங்கள் முற்று முழுதாக கட்டுப்படுத்தப்படும். தடுக்கப்படும். எதிர்க்கட்சி தலைவருக்கு இதை பதிலாக கொடுக்கிறேன். உங்கள் ஆட்சியில் போக போக குற்றம் கூடியது. எங்கள் ஆட்சியில் போக போக குற்றங்களை குறைப்போம் என்ற உறுதியை நான் தருகிறேன்.. இவ்வளவுதான் பேசனும்..

சர்க்காரியா கமிஷனிலே.. வாங்கி பழகிய கை.. பேசிப்பழகிய பொய்.. போட்டுப் பழகிய பை.. இதெல்லாம் தெரிந்துதான் அவரை மூன்று முறை முதல்வர் ஆக்கியிருக்கிறார்கள். அதுக்கு ஒரு கூட்டம்.. நானே காட்டு காட்டுவேன்.. நீங்க காட்ட வேற சொல்றீங்க என்று சொல்கிறார். முதல்வர் அவர்களே நீங்கள் என்னத்தை காட்டுனீங்க.. ஏதாவது ஒரு போராட்டத்தில் பங்கேற்று மக்களின் பிரச்சினையில் உங்களுக்கு இருக்கும் அக்கறையை காட்டுனீர்களா?" என்று ஆவேசமாக பேசினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+