Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

திமுகவின் பலத்தை உடைக்க விஜய் இப்படியொரு பிளான்.. ஆதவ் அர்ஜுனாவின் புது போஸ்டிங்? இது நேரடி சவால்

Subscribe to Oneindia Tamil

சென்னை: வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலில் சென்னையை மையப்படுத்தி அரங்கேறும் அரசியல் நகர்வுகள் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன.. அதிலும் இந்த முறை தவெகவின் வருகையானது, திராவிட கட்சிகளுக்கே லேசான கலக்கத்தை தந்து வருகிறது.. அந்தவகையில் இப்போது முக்கிய தகவல் ஒன்று இணையத்தில் கசிந்து வருகிறது..

ஜெயலலிதா காலத்தில் அதிமுக வசமிருந்த சென்னை கோட்டையை, கடந்த சில தேர்தல்களில் திமுக தனது முழுமையான கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தது.. இந்த சூழலில், அடித்தட்டு மக்களின் ஆதரவை இலக்காக கொண்டு தவெக தலைவர் விஜய் வடசென்னையை தனது அரசியல் ஸ்பாட் புள்ளியாக தேர்வு செய்ய திட்டமிடுவது தமிழக அரசியலில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது..

Aadhav Arjuna Vijay dmk Tamizhaga Vettri Kazhagam tamil nadu Assembly Election 2026 tn Election special North Chennai Election 2026 2026

தவெக விஜய்

தவெக பொதுச்செயலாளர் ஆனந்த் மற்றும் தேர்தல் பிரசார மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா ஆகியோரின் சமீபத்திய செயல்பாடுகள் அந்த கட்சியின் வியூகத்தை தெள்ளத்தெளிவாகவே நமக்கு காட்டுகின்றன..

பெரம்பூர் கூட்டத்தில் ஆதவ் அர்ஜுனா பேசிய கருத்துகள், விஜய் வடசென்னை தொகுதிகளில் ஒன்றில் போட்டியிடுவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதை உறுதிப்படுத்துகின்றன.. குறிப்பாக, திமுகவின் பிறப்பிடமாக கருதப்படும் வடசென்னையில் விஜய் போட்டியிடுவது என்பது ஒரு நேரடி சவாலாகவே பார்க்கப்படுகிறது.. கொளத்தூர் அல்லது ஆர்.கே. நகர் போன்ற ஸ்டார் தொகுதிகளில் அவர் களம் காண வேண்டும் என்ற தொண்டர்களின் விருப்பமாக உள்ளதாம்..

வடசென்னை திமுக பலம்

விஜய் வடசென்னையில் போட்டியிடுவதால் ஏற்படும் சாதகமான அம்சங்களை ஆராய்ந்தால், அங்குள்ள உழைக்கும் வர்க்க மக்கள் மற்றும் இளைஞர்களின் வாக்குகள் அவருக்குப் பெரும் பலமாக அமையும்..

திராவிட கட்சிகளின் கோட்டையாகக் கருதப்படும் பகுதியில் நேரடியாகக் களம் இறங்குவது, விஜய்யை ஒரு துணிச்சலான தலைவராகச் சித்தரிக்க உதவும்..

அதேபோல ஆதவ் அர்ஜுனா போன்ற தேர்தல் மேலாண்மை நிபுணர்களின் திட்டமிடல், படை பலம் மற்றும் பண பலம் ஆகியவை ஒருங்கிணைக்கப்படும்போது, அது ஆளுங்கட்சிக்கு கடும் நெருக்கடியையே கொடுக்கும்.. இது சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்டங்களில் கட்சியின் செல்வாக்கை ஒரேடியாக உயர்த்தக்கூடும்..

ஆதவ் அர்ஜுனாவுக்கு புது போஸ்டிங்

இருந்தாலும், இது அவ்வளவு லேசில் நடக்காது.. ஏனென்றால் வடசென்னை என்பது திமுகவின் அடிமட்டக் கட்டமைப்பு மிக வலுவாக உள்ள ஒரு பகுதியாகும்.. தவெக போன்ற புதிய கட்சிக்கு அங்குள்ள ஒவ்வொரு தெருவிலும் வாக்குச் சாவடி முகவர்களை அமைப்பதும், ஆளுங்கட்சியின் அதிகார பலத்தை எதிர்த்து நிற்பதும் சாதாரண விஷயமல்ல..

அதுமட்டுமல்ல, விஜய் ஒரு குறிப்பிட்ட தொகுதியில் முடங்காமல் மாநிலம் முழுவதும் பிரசாரம் செய்ய வேண்டிய சூழலில், சொந்த தொகுதியில் அதிக கவனம் செலுத்த வேண்டிய கட்டாயம் அவருக்குப் பின்னடைவை ஏற்படுத்தலாம்.. 4 முனைப் போட்டியில் வாக்குகள் சிதறும்போது, மிகக் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பு கைநழுவிப் போகும் அபாயமும் உள்ளது..

அசைக்க முடியாத வடசென்னை கோட்டை

அதேபோல ஆதவ் அர்ஜுனாவுக்கு சென்னை மண்டல பொறுப்பு வழங்கப்பட்டிருப்பது தவெகவுக்கு ஒரு பலத்தை கண்டிப்பாக தரும் என்பதில் சந்தேகமில்லை.. ஏற்கனவே தேர்தல் வியூக வகுப்பாளராகப் பணியாற்றிய அனுபவம் அவருக்கு இருப்பதால், சென்னையின் நுணுக்கமான அரசியல் நகர்வுகளையும் ஆளுங்கட்சியின் பலவீனங்களையும் ஆதவ் அர்ஜுனா நன்றாகவே அறிவார்.. இது விஜய்க்கு ஒரு வலுவான களத்தை அமைத்துக் கொடுக்க உதவும்..

இருந்தாலும், காலம் காலமாய், சென்னையில் வேரூன்றியுள்ள திமுகவின் அசைக்க முடியாத அடிமட்ட கட்டமைப்பையும், தேர்தல் நேரத்து அதிகார பலத்தையும் ஒரு புதிய கட்சியின் நிர்வாகியாக அவர் எப்படி எதிர்கொள்ள போகிறார் என்பது மிகப்பெரிய சவாலாகும்.. உழைக்கும் வர்க்க மக்களின் வாக்குகளை ஒருங்கிணைப்பதில் அவரது திட்டமிடல் வெற்றி பெற்றால் மட்டுமே, சென்னையில் த.வெ.க-வால் ஒரு தாக்கத்தை ஏற்படுத்த முடியும்.. அதனால் பொறுத்திருந்து பார்ப்போம்..!!!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+