Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"எல்லை மீறி போறீங்கடா".. போக போக தனி தீவுலாம் வாங்கலாம்.. டிரெண்டாகும் "அவதாரம்" அன்னபூரணி மீம்ஸ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தன்னை தானே அவதாரம் என்று அறிவித்துக்கொண்ட அன்னபூரணியை வைத்து நெட்டிசன்கள் கடந்த சில நாட்களாக நிறைய மீம்களை வெளியிட்டு வருகிறார்கள்.

கடந்த 3 நாட்களாக இணையம் முழுக்க அன்னபூரணிதான் டாக் ஆப் தி டவுன். அன்னபூரணி அம்மா அருள்வாக்கு வழங்க போவதாக சமூக வலைத்தளங்களில் போஸ்டர் ஒன்று சமீபத்தில் வெளியானது. ஆதிபராசக்தி அவதாரமாக உருவெடுத்துவிட்டார். அவர் மக்களுக்கு அருள் வழங்க போகிறார் என்று கூறப்பட்டு இருந்தது.

ஜனவரி 1ம் தேதி எல்லோரும் செங்கல்பட்டிற்கு வந்துவிடுங்கள் என இந்த போஸ்டரில் குறிப்பிடப்பட்டு இருந்தது. இதையடுத்து டிரெண்டாக தொடங்கிய அன்னபூரணி இப்போது வைரலாக உள்ளார். இவரின் நிகழ்ச்சிக்கும் போலீசார் தடை விதிக்கும் அளவிற்கு நிலைமை சென்றுள்ளது.

 அம்மா அம்மா

அம்மா அம்மா

இந்த நிலையில் அன்னபூரணியை வைத்து நெட்டிசன்கள் கடந்த சில நாட்களாக நிறைய மீம்களை வெளியிட்டு வருகிறார்கள். முக்கியமாக அவரின் வீடியோக்களை வைத்து பலவகையாக எடிட் செய்து வீடியோ மீம்ஸ்களை வெளியிட்டு வருகின்றன. ஒரு பக்கம் ஹாரிஸ் ஜெயராஜ் பேன்ஸ், அவரின் பாடல் பிஜிஎம்களை அன்னபூரணி அருள்வாக்கு வழங்கும் வீடியோவில் போட்டு கலாய்த்து உள்ளனர்.

பாடல்கள் மீம்ஸ்

பாடல்கள் மீம்ஸ்

ஹாரிஸ் பாடல்கள் தங்களை இப்படித்தான் மயக்குகிறது என்று மீம்ஸ் போட்டுள்ளனர். யுவன் சங்கர் ராஜா பேன்ஸும் இதேபோல் அவரின் பாடல்களை வைத்து மீம்ஸ் போட்டு இருக்கிறார்கள். இவர் இதற்கு முன் சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர் என்பதை அதை வைத்து நிறைய மீம்ஸ் போடப்பட்டு வருகிறது.

எப்படி ஆரம்பித்த வாழ்க்கை

எப்படி ஆரம்பித்த வாழ்க்கை

எப்படி ஆரம்பித்த வாழ்க்கை.. இப்போது எப்படி போய் கொண்டு இருக்கிறது பாருங்கள் என்று மீம்ஸ் போட்டு கிண்டல் செய்து வருகிறார்கள். அம்மா அன்னபூரணி அம்மா..என்னடி இது என்று எந்திரன் படத்தில் சிட்டி ரோபாவை பார்த்து பெண்கள் சாமி ஆடும் மீமை வைத்து பலர் கிண்டல் செய்துள்ளனர்.

வடிவேல்

வடிவேல்

இன்னும் சிலர் வடிவேலிடம் பைத்தியமாக இருக்கும் நபர் ஏமாற்றும் காமெடியையும் பகிர்ந்து உள்ளனர். லட்சுமி ராமகிருஷ்ணனை பார்த்து.. மேடம் நான் முன்னமாதிரி இல்லை.. இப்ப அவதாரம் ஆகிட்டேன் என்று கூறுவது போல காமெடியான மீம்ஸ்கள் போடப்பட்டு இருக்கின்றன.

ஸ்க்விட் கேம்ஸ்

ஸ்க்விட் கேம்ஸ்

அதேபோல் சமீபத்தில் நெட் பிளிக்சில் ஹிட் அடித்த ஸ்க்விட் கேம்ஸ் வைத்தும் இதில் நிறைய மீம்ஸ் போடப்பட்டுள்ளது. அதில் இருக்கும் பொம்மையை எடிட் செய்து மீம்ஸ் போட்டு உள்ளனர்.

நீயே கடவுள்

நீயே கடவுள்

அதிலும் சமீபத்தில் இன்டர்வியூ ஒன்றில் அன்னபூரணி சாமி ஆடியதை வைத்தும் பலர் மீம் போட்டுள்ளனர். உன் வாழ்க்கையில் சிக்கல் இருந்தால் கடவுளிடம் முறையீடு.. ஆனால் உனக்கு வாழ்க்கையே சிக்கலாகி இருந்தால் நீயே கடவுள் ஆகிவிடு என்று தத்துவங்களை வைத்தும் நிறைய அன்னபூரணி மீம்ஸ் போடப்பட்டு வருகிறது.

நித்தியானந்தா

நித்தியானந்தா

இதெல்லாம் போக உச்சமாக நித்தியானந்தாவை வைத்தும் சிலர் மீம்ஸ் போட்டு வருகிறார்கள். ஆரம்பத்தில் இப்படித்தான் இருக்கும். போக போக தனி தீவுலாம் வாங்கலாம் என்று அன்னபூரணியிடம் நித்தியானந்தா கூறுவது போல மீம்ஸ் போடப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+