ஆவின் பால் விலை உயராது.. வயிற்றில் பால்வார்த்த அமைச்சர் நாசர்.. விரைவில் தண்ணீர் பாட்டில் அறிமுகமாம்
சென்னை: தனியார் பால் விலை உயர்த்தப்பட்டிருந்தாலும், ஆவின் பால் விலை உயர்த்தப்படாது என்று அமைச்சர் நாசர் தெரிவித்துள்ளார்.
Recommended Video
தமிழகத்தில் ஆவின் நிறுவனம் பல்வேறு வகையான பால் பொருட்களைத் தயாரித்து விற்பனை செய்து வருகிறது. தற்போது நுகர்வோரின் தேவையினை பூர்த்தி செய்யும் வகையில், இந்த ஆண்டு புதிய பால் பொருட்களை அறிமுகப்படுத்தி விற்பனை செய்ய தமிழக அரசு திட்டமிட்டது.
அந்த வகையில் பலாப்பழ ஐஸ்கிரீம், வெள்ளை சாக்லேட், கோல்ட் காபி, வெண்ணெய் கட்டி, பாஸந்தி, ஆவின் ஹெல்த் மிக்ஸ், பாலாடைக் கட்டி, அடுமனை யோகர்ட் ஆவின் பால் பிஸ்கட், ஆவின் வெண்ணெய் முறுக்கு ஆகிய 10 புதிய பால் பொருட்களை ஆவின் நிறுவனம் இன்று அறிமுகப்படுத்தியுள்ளது. சென்னை நந்தனத்தில் உள்ள ஆவின் அலுவலகத்தில் பால்வளத்துறை அமைச்சர் நாசர் அறிமுகம் செய்து வைத்தார்.

புதிய பொருட்கள் அறிமுகம்
இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து அமைச்சர் நாசர் கூறுகையில், நிதிநிலை அறிக்கையின் போது ஆவின் சார்பாக 36 புதிய அறிவிப்புகள் அறிவிக்கப்பட்டது. அதில் இதுவரை 26 அறிவிப்புகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன. இன்று ஆவின் சார்பாக 10 புதிய பொருட்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இதன் மூலம் ஆவின் சார்பாக மொத்தமாக 200க்கும் மேற்பட்ட விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

விரைவில் தண்ணீர் பாட்டில்
இந்த 10 புதிய பொருட்களை அறிமுகம் செய்து வைத்ததன் மூலம் தமிழக அரசுக்கு மாதம் ரூ.2 கோடி லாபத்தை எதிர்பார்க்கிறோம். இது, வரும் நாட்களில் மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கிறோம். ஆவின் தண்ணீர் பாட்டில் விற்பனை எப்போது தொடங்கப்படும் என்பது விரைவில் அறிவிக்கப்படும். தனியார் பால் நிறுவனங்கள் விலை உயர்வு என்பது மத்திய அரசு தொடர்புடையது.

ஆவின் பால் விற்பனை அதிகரிப்பு
அதனை தமிழக அரசு கட்டுப்படுத்த முடியாது. ஆவின் பால் விலை உயர்த்தப்படாது. அமுல் உள்ளிட்ட பால் நிறுவனங்களின் விலை உயர்வால், ஆவின் பால் விற்பனை சுமார் 50 அயிரம் லிட்டர் பால் விற்பனை அதிகரித்துள்ளது. கடந்த காலத்தில் 38 லட்சம் லிட்டர் கொள்முதல் செய்யப்பட்டு வந்தது. ஆனால் இப்போது 41 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் அதிகரித்துள்ளது.

பண்டிகை காலம்
ஆவின் நிறுவனத்தின் பால் விலையை அதிகரித்து விற்பனை செய்யும் கடைகளுக்கு சீல் வைக்கப்படும். அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழகத்தில் அடுத்தடுத்து பண்டிகைகள் வரவுள்ளன. அதற்கான ஆவின் பொருட்களின் தயாரிப்புகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. புதிய பொருட்களும் விரைவில் அறிமுகம் செய்து வைக்கப்படும் என்று தெரிவித்தார்.
-
சென்னையில் மாறிய ரூல்ஸ். அடுக்குமாடி வீடுகள், வணிக நிறுவனங்கள், ஓட்டல்களுக்கு மாநகராட்சி அதிரடி -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்!












Click it and Unblock the Notifications