குரூப் 4 தேர்வுகளுக்கு விண்ணப்பிப்பது சுமார் 56% சரிவு.. அண்ணாமலை குற்றச்சாட்டு vs உண்மை நிலவரம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுகளுக்கு விண்ணப்பிக்கும் இளைஞர்களின் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து வருவதாக கூறப்படுகிறது. அரசு வேலையில் சேர வேண்டும் என்கிற ஆர்வம் மக்களிடையே குறைந்து வருவதாகவும் சொல்லப்படுகிறது.ஏனெனில் மிக குறைவான காலிப்பணியிடங்கள், கடுமையான போட்டி, வேலை கிடைப்பது கடினம் போன்ற காரணங்களால் அரசு தேர்வுகள் மீது ஆர்வம் குறைந்து வருகிறதாம். கடந்த நான்கு ஆண்டுகளில் சுமார் 56% அளவிற்கு விண்ணப்பதாரர்களின் எண்ணிக்கை குறைந்திருப்பது குறித்து அண்ணாமலை கேள்வி எழுப்பி உள்ளார்.

வீ த லீடர் அமைப்பின் தலைவர் அண்ணாமலை சமூக வலைதளப்பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறுகையில், "அரசுப் பணி என்பது தமிழகத்தில் லட்சக்கணக்கான இளைஞர்களின் கனவு. அந்தக் கனவை நனவாக்கும் நம்பிக்கையின் அடையாளமாக இருக்க வேண்டிய தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (TNPSC) மீதே இன்று இளைஞர்களுக்கு நம்பிக்கை குறைந்து வருகிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது.

About 56 drop in applications for Group 4 exams Annamalai s allegation vs the actual situation

குரூப்-4 தேர்வுக்கு 2022 ஆம் ஆண்டு, 22.06 லட்சம் பேர் விண்ணப்பித்த நிலையில், 2024-ல் 20.37 லட்சமாகவும், 2025-ல் 13.89 லட்சமாகவும், இந்த ஆண்டு, இன்று வரையிலும், வெறும் 9.80 லட்சமாகவும் விண்ணப்பதாரர்களின் எண்ணிக்கை சரிந்துள்ளது. நான்கு ஆண்டுகளில் சுமார் 56% சரிவு என்பது சாதாரணமாகக் கடந்து செல்லக்கூடிய விஷயமல்ல.

பல ஆண்டுகள் தங்கள் இளமைக் காலத்தையும், உழைப்பையும், பணத்தையும் செலவிட்டு அரசுப் பணிக்காகத் தயாராகும் இளைஞர்களுக்கு உரிய காலத்தில் முடிவுகளும், நியாயமான வாய்ப்புகளும் கிடைப்பதில்லை. தேர்வு முடிவுகள் வெளியாவதில் காலதாமதம், தேர்வுக்குப் பிறகு பணிநியமனம் வழங்குவதில் ஏற்படும் தாமதங்கள், தேர்வு நடைமுறைகளில் வெளிப்படைத்தன்மை குறித்த சந்தேகங்கள், முறைகேடுகள் தொடர்பான புகார்கள் எனத் தேர்வு எழுதும் இளைஞர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் ஏராளம். கடந்த காலங்களில், அமைச்சர்கள் வரையில் பணம் வாங்கிக் கொண்டு அரசுப் பணி வழங்கியதான குற்றச்சாட்டுக்களே இதற்கு நேரடி சாட்சி.

இளைஞர்களின் அரசுப் பணி கனவுகளை நனவாக்க வேண்டிய தேர்வாணையத்தின் மீதே நம்பிக்கை குறையத் தொடங்கினால், அது மிகவும் கவலைக்குரிய அறிகுறி. விண்ணப்பதாரர்களின் எண்ணிக்கை ஏன் ஆண்டுதோறும் இவ்வளவு வேகமாகக் குறைந்து வருகிறது என்பதை தமிழக அரசு சிந்தித்துப் பார்க்க வேண்டும். தேர்வு முறையின் மீதும், அரசுப் பணி நியமனத்தின் மீதும் இளைஞர்கள் மீண்டும் நம்பிக்கை கொள்ள, உடனடியாக ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

காலிப்பணியிடங்களை உரிய காலத்தில் நிரப்புவதும், வெளிப்படையான தேர்வு முறையை உறுதிப்படுத்துவதுமே, தமிழக இளைஞர்களுக்கு, மீண்டும் அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மீது நம்பிக்கையை உருவாக்கும்" இவ்வாறு கூறியுள்ளார்.

அண்ணாமலையின் குற்றச்சாட்டும்: உண்மை நிலவரமும்

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கு 2022 முதல் 2025 வரை விண்ணப்பதாரர்கள் சுமார் 37% குறைந்துள்ளது உண்மை தான்.ஆனால் தற்போதை ஆண்டை பொறுத்தவரை குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பிக்க நவம்பர் 5 வரை விண்ணப்பிக்க அவகாசம் இருக்கிறது. எனவே நவம்பர் 3 நிலவரமான 9.80 லட்சத்தை இறுதி எண்ணிக்கையாக கருத முடியாது. எனினும் கடந்த ஆண்டும் எண்ணிக்கை குறைந்துள்ளது என்பது மறுக்க முடியாது. ஏனெனில் 2025-ல் 5,307 இடங்களுக்கு 13.89 லட்சம் பேர் விண்ணப்பித்தனர். ஆகவே ஒரு பணியிடத்திற்கு சுமார் 262 பேர் போட்டியிட்டிருக்கிறார்கள். முன்னதாக 2024-ல் 9,491 இடங்களுக்கு 20.37 லட்சம் பேர் விண்ணப்பித்து இருந்தார்கள். எனவே ஒரு பணியிடத்திற்கு சுமார் 215 பேர் போட்டியிட்டிருக்கிறார்கள்.

எனவே இந்த காலக்கட்டத்தில் நடந்த புள்ளி விவரங்களை வைத்து பார்க்கும் போது, விண்ணப்பதாரர்கள் குறைந்தாலும் போட்டி குறைந்துவிட்டது என்று கூறிவிடவே முடியாது. ஆனாலும் தேர்வர்களுக்கு சில அதிருப்திகள் இருக்கிறது. உதாரணமாக சொல்வது என்றால், தேர்வு முடிவுகள் மிக தாமதமாக வெளிவருவது தான். தேர்வு எழுதி பல மாதங்கள் காத்திருக்கும் தேர்வர்களுக்கு, சான்றிதழ் சரிபார்ப்பு, கலந்தாய்வு, பணிநியமன ஆணை ஆகியவற்றுக்காக நீண்டகாலம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. இதனால் டிஎன்பிஎஸ்சி தேர்வர்கள் கவலை அடைந்துள்ளனர். இதனை அரசு வேகமாக்கினால், இன்னும் அதிகம் பேர் தேர்வுகள் எழுத ஆர்வம் காட்டுவார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+