1 ரிங் கொடுத்தா சாப்பிட வரலைனு அர்த்தம்! போன் காலில் Code Word வைத்த ஏ.வி.மெய்யப்ப செட்டியார்
சென்னை: ஏவி மெய்யப்ப செட்டியார் வீட்டுக்கு போன் செய்ய ஒரு CODE WORD வைத்திருந்தார். அந்த அளவுக்கு அவர் சம்பாதித்த பணத்தை சிக்கனமாக செலவு செய்து ஏவிஎம் நிறுவனம் என்ற ஆலமரத்தை உருவாக்கினார் என நடிகர் இளவரசு சிலாகித்து பேசியுள்ளார்.
86 வயதான ஏவிஎம் சரவணன் கடந்த வியாழக்கிழமை வயது மூப்பால் காலமானார். ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்ட நடிகர்களின் வளர்ச்சிக்கு ஊன்றுகோலாக இருந்தவர். எத்தனையோ நடிகர், நடிகைகள் இன்று ஒரு அந்தஸ்தில் இருக்க காரணமாக இருந்தவர்.

உழைப்புக்கேற்ற ஊதியத்தை அள்ளி அள்ளித் தந்தவர். மனிதநேயமிக்கவர். கதை, தொழில்நுட்பம், அனைத்தும் சரவணனுக்கு அத்துபடி! "சகலகலா வல்லவன்" படத்தில் "இளமை இதோ இதோ" பாடல் மூலம் கமலுக்கு மிகப் பெரிய நட்சத்திர அந்தஸ்தை கொடுத்தார்.
அதிர்ந்த ரஜினி
ரஜினி இன்று கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கலாம். ஆனால் "மிஸ்டர் பாரத்" படத்திற்கு சரவணன் ரஜினிக்கு கொடுத்த பணத்தை பார்த்து அவரே மிரண்டுவிட்டாராம். அதாவது அதுவரை வாங்கிய சம்பளத்தை விட 10 மடங்கு அதிக சம்பளத்தை கேட்காமலேயே அள்ளி கொடுத்தாராம்.
சிறந்த பண்பாளர்
சிறிய நடிகர், பெரிய நடிகர் என்ற எந்த பாகுபாடும் இல்லாமல் அனைவருடனும் இயல்பாக பழகக் கூடியவர். கோபமே வராதாம். அப்படியே வந்தாலும் "மடச்சாம்பிராணி" என்ற வார்த்தையை தவிர வேறு எந்த வார்த்தையாலும் யாரையும் புண்படுத்தமாட்டார். இவரது இழப்பு திரைத் துறைக்கு மிகப் பெரிய இழப்பு என்கிறார்கள்.
ஏவிஎம் மெய்யப்ப செட்டியார்
ஏவி மெய்யப்ப செட்டியார் உயிருடன் இருந்த காலத்திலும் நிறுவனத்தை கையில் எடுத்து சிறப்பாக நடித்தியவர் சரவணன் என்கிறார்கள். இந்த நிலையில் மெய்யப்ப செட்டியார் குறித்து நடிகர் இளவரசு ஒரு யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில், மெய்யப்ப செட்டியார் வீட்டுக்கு போன் செய்ய ஒரு code word வைத்திருந்தார்.
1 ரிங்ல கட் பண்ணால்
1 ரிங்ல கட் பண்ணிட்ட சாப்பிட வரலைனு அர்த்தம். இரண்டு ரிங்ல கட் செய்தால் சாப்பிட வரார்னு அர்த்தம். 3 முறை கட் செய்துவிட்டு 4ஆவது ரிங் வந்தால் மட்டுமே குடும்பத்தினர் போனை எடுத்து பேச வேண்டுமாம். 1960 காலகட்டங்களில் போன் வைத்திருந்தாலே அவர்கள் பெரிய பணக்காரர்கள், ஆனால் ஒரு போன் காலால் காசை மிச்சப்படுத்த மெய்யப்ப செட்டியார் இப்படி டிரிக்ஸை கையாண்டிருக்கிறார் என்றால் காசோட அருமையை அவர் எப்படி புரிந்து வைத்துள்ளார் பாருங்கள் என இளவரசு தெரிவித்துள்ளார்.
யார் இந்த மெய்யப்பன்
காரைக்குடியை சேர்ந்தவர் ஏவி மெய்யப்ப செட்டியார். இவர் 1907 ஆம் ஆண்டு பிறந்தார். வடபழனியில் ஏவிஎம் தயாரிப்பு நிறுவனத்தை நடத்தியவர். தென்னிந்திய திரைத்துறையின் மும்மூர்த்திகளில் ஒருவராக மெய்யப்பன் திகழ்ந்தார் (எஸ்.எஸ். வாசன், எல்.வி.பிரசாத்- மற்ற இருவர்).
மெய்யப்பன் திரைத்துறை
மெய்யப்பன் ஆரம்பத்தில் திரைத்துறைக்கு தொடர்பான இசை தட்டுக்களை விற்பனை செய்து வந்தாராம். பின்னர் ஒலிப்பதிவு செய்து படங்களை தயாரிப்பது என மெல்ல திரையுலகில் மெய்யப்பன் கால் பதித்தாராம். தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட படங்களை தயாரித்திருந்தார். அத்துடன் ஏவிஎம் அறக்கட்டளை என்ற ஒன்றை தொடங்கி அதன் மூலம் ஏழை, எளியவர்களுக்கு உதவி செய்தார். இந்த உதவிகள் இன்றளவும் தொடர்கின்றனவாம். பின்னர் வயது மூப்பு காரணமாக 72 ஆவது வயதில் 1979 ஆம் ஆண்டு காலமானார்.












Click it and Unblock the Notifications