'எங்கள் சாமியே மீண்டு வா'.. ரஜினி குணமடைய தீச்சட்டி ஏந்தி, மண் சோறு சாப்பிட்டு ரசிகர்கள் வழிபாடு!
சென்னை: தமிழ்நாட்டு மக்கள் மனங்களை கொண்ட 'சூப்பர் ஸ்டார்' ராஜினிகாந்துக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்பட்டது. தலைநகர் டெல்லியில் இந்த விருதை பெற்றுக் கொண்ட நடிகர் ரஜினி அதன்பின்னர் சென்னை திரும்பினார்.
கடந்த வியாழக்கிழமை வீட்டில் இருந்த நடிகர் ரஜினிகாந்த்துக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது.
தலை சுற்றல், மயக்கம் ஏற்பட்டதால் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

நடிகர் ரஜினிகாந்த்துக்கு உடல்நலக்குறைவு
முதலில் வழக்கமான உடல் பரிசோதனைக்காக ரஜினி அனுமதிக்கப்பட்டதாக கூறப்பட்டது. பின்னர், அவருக்கு மூளைக்கு செல்லும் ரத்தக்குழாயில் அடைப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து மூளைக்கு செல்லும் ரத்தக்குழாயில் ஏற்பட்ட அடைப்பு சரி செய்யப்பட்டு விட்டதாகவும், அவர் சில நாட்களில் வீடு திரும்புவார் என்றும் காவேரி மருத்துவமனை அறிக்கை வெளியிட்டது.

முதல்வர் மு.க.ஸ்டாலின் நலம் விசாரித்தார்
நடிகர் ரஜினிகாந்த் குணமடைய வேண்டி முதல்வர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட பலர் வாழ்த்து தெரிவித்தனர். இன்று காவேரி மருத்துவமனைக்கு சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின் ரஜினியின் உடல்நிலை குறித்து டாக்டர்களிடம் கேட்டறிந்தார். நடிகர் ரஜினிகாந்த் குணமடைய வேண்டி அவரது ரசிகர்கள் தமிழகம் முழுவதும் பிரார்த்தனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

தீச்சட்டி ஏந்தி வழிபாடு
ரஜினிகாந்த் குணமடைந்து வீடு திரும்ப வேண்டி புதுச்சேரியில் ரஜினி ரசிகர்கள் தீச்சட்டி ஏந்தி வழிபட்டனர். புதுவை மறைமலை அடிகள் சாலையில் உள்ள அம்மன் கோவிலுக்கு சென்ற ரஜினி ரசிகர்கள் அம்மனுக்கு தீச்சட்டி ஏந்தி ரசிகர்கள் சிறப்பு வழிபாடு நடத்தினார்கள். 'எங்கள் சாமியே மீண்டு வா' என குறிப்பிட்ட பேனரை வைத்து பூஜைகள் செய்தனர்.

மண் சோறு சாப்பிட்டு...
நடிகர் ரஜினிகாந்த் நலம்பெற வேண்டி திருப்பரங்குன்றத்திலும் 108 தேங்காய் உடைத்தும், மண் சோறு சாப்பிட்டும் ரஜினி ரசிகர்கள் சிறப்பு வழிபாடு மேற்கொணடனர். இதேபோல் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் நடிகர் ரஜினி குணமடைய வேண்டி ரசிகர்கள் சிறப்பு பிரார்த்தனை செய்து வருகின்றனர். டுவிட்டர், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களிலும் ரஜினி குணமடைய வேண்டி ரசிகர்கள் விருப்பம் தெரிவித்து வருகின்றனர்.
-
சென்னை மடிப்பாக்கத்தில் பயங்கர தீ விபத்து.. பகலும் இரவானது.. கரும்புகையால் திணறிய மக்கள் - வீடியோ! -
சென்னை கீழ்ப்பாக்கம் ஏடிஎம்மில் கொள்ளை முயற்சி.. அலாரம் அடித்ததும் மர்ம நபர் தப்பி ஓட்டம்! -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு -
“என் மகனுக்கு TVK என பெயர் வைக்கப் போகிறேன்” - தவெக எம்.எல்.ஏ பல்லவி அறிவிப்பு -
மயிலாப்பூர் டூ அம்பத்தூர்.. கார் இருந்தாலும் சைக்கிள் பயணம்! உலக சைக்கிள் தினத்தில் அறிய வேண்டிய கதை -
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள் -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
பழைய பன்னீர்செல்வமா வாங்க.. அண்ணாமலையை விடாத அமித் ஷா! பாஜக அள்ளிக் கொடுக்கும் ரெண்டு லட்டு! என்ன? -
CBSE உள்பட தனியார் பள்ளிகளில் கல்வி கட்டணத்தை கேட்டிலேயே எழுதி வைக்க வேண்டும்.. தமிழகத்தில் உத்தரவு












Click it and Unblock the Notifications