Vaiyapuri: "கல்வி கண்ணெனத் தகும்" மகன் ஷ்ரவனை டாக்டராக்கிய வையாபுரி! என்ன படிக்கிறார் தெரியுமா?
சென்னை: நடிகர் வையாபுரியின் மகன் ஷ்ரவன் பல் மருத்துவம் படித்துள்ள நிலையில் தற்போது ஹைதராபாத்தில் ஒரு பல்கலைக்கழகத்தில் முதுநிலை பல் மருத்துவம் படித்து வருகிறார். தனது மகனை சினிமாவில் சேர்க்காமல் அவர் விரும்பிய மருத்துவம் படிக்க வைத்த வையாபுரிக்கு வாழ்த்துகள் குவிகின்றன.
வையாபுரி தேனியை அடுத்த முத்துத்தேவன்பட்டி எனும் ஊரைச் சேர்ந்தவர். இவரது இயற்பெயர் ராமகிருஷ்ணன். இவர் முத்துத்தேவன் பட்டியிலுள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியிலும் பழனிசெட்டிபட்டி மேல்நிலை பள்ளியிலும் படித்தார். 10 ஆம் வகுப்பு வரை படித்தார்.

பிறகு தேனியில் உள்ள மருந்துக் கடை ஒன்றில் வேலை பார்த்தார். அப்போது திரைப்படத் துறையில் ஏற்பட்ட ஆர்வத்தால் சென்னைக்குச் சென்ற அவர் முதலில் திரைப்படத் துறையில் பல வேலைகளைச் செய்தார்.
சென்னைத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 'சின்ன மருது பெரிய மருது', 'மால்குடி டேஸ்' போன்ற தொடர்களில் நடித்தார். 'இளைய ராகம்' எனும் படத்தில் நடிகர் விவேக்தான் இவரை நடிக்க வைத்தார். அதன் பிறகு 'துள்ளாத மனமும் துள்ளும்' படத்தில் திருநங்கை வேடத்தின் மூலம் பெயர் பெற்றார்.
இதைத் தொடர்ந்து தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட 250 படங்களுக்கும் மேல் நடித்துள்ளார். இவருக்கு நிறைய இடங்களில் பெண் பார்த்து யாரும் பெண் தர மறுத்தனர். பின்னர் 2001 ஆம் ஆண்டு ஆனந்தி என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
நடிகர் வையாபுரியின் மகன் ஷ்ரவன், சென்னையில் பிடிஎஸ் பட்டப்படிப்பு முடித்த நிலையில், ஐதராபாத் யுனிவர்சிட்டியில் எம்டிஎஸ் ஆர்த்தோ பட்டப்படிப்பில் சேர்ந்துள்ளார்.#Vaiyapuri #DrShravan #MDS_Ortho @GovindarajPro pic.twitter.com/paqfddYk3a
— Actor Kayal Devaraj (@kayaldevaraj) September 2, 2025
இவருக்கு ஷ்ரவன் என்ற மகனும் ஷிவானி என்ற மகளும் உள்ளனர். ஷ்ரவன் சென்னையில் பிடிஎஸ் பட்டப்படிப்பு படித்திருந்தார். இதையடுத்து அவருக்கு மேற்கொண்டு படிக்க விருப்பம் இருந்தது. இதனால் அவரை ஹைதராபாத்தில் உள்ள பல்கலைக்கழகத்தில் எம்டிஎஸ் ஆர்த்தோ பட்டப்படிப்பில் சேர்ந்துள்ளார்.
திரைப்படங்களைத் தவிர, தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றுள்ளார். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டார்.
வையாபுரி, தமிழ் சினிமாவில் தொடர்ந்து நடித்து வரும் ஒரு முக்கிய நடிகர். இவர் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து பணியாற்றியுள்ளார். இவரின் நகைச்சுவை திறமைக்கு என தனி ரசிகர் பட்டாளம் உள்ளது.
மேலும் தனது மகனை தான் வளர்ந்த சினிமா துறையில் ஈடுபடுத்தாமல் மருத்துவத் துறையில் ஈடுபடுத்தியமைக்கு வையாபுரிக்கு பாராட்டுகள் குவிகின்றன. அதே வேளையில் தனது தந்தையின் செல்வாக்கால் ஏதாவது சினிமாவில் நடிக்கலாம் என எண்ணாமல் கல்விதான் முக்கியம் என கருதி தற்போது மேற்படிப்பு படிக்கும் ஷ்ரவனையும் பாராட்டுகிறார்கள்.












Click it and Unblock the Notifications