லோக்சபா தேர்தலில் வாக்களிக்க சைக்கிளில் வந்தது ஏன்? விஷால் போட்டாரே பாருங்க போடு

Subscribe to Oneindia Tamil

சென்னை: என்னிடம் கார் இல்லாததால் தமிழக லோக்சபா தேர்தலில் வாக்களிக்க சைக்கிளில் சென்றேன் என நடிகர் விஷால் விளக்கியுள்ளார்.

நடிகர் விஷால் தற்போது ரத்னம் என்ற ஆக்ஷன் படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை பிரபல இயக்குநர் ஹரி இயக்கியுள்ளார். அவரது இயக்கத்தில் 3ஆவது முறையாக விஷால் நடித்துள்ளார். இந்த ரத்னம் படம் விஷாலின் 34 ஆவது படமாகும்.

Actor Vishal explains why he came in bicycle to cast his vote in Lok sabha election 2024

இந்த படத்தில் நடிகை பிரியா பவானி ஷங்கர், யோகி பாபு, சமுத்திரக்கனி, கவுதம் மேனன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். கார்த்தி சுப்புராஜ் இந்த படத்தை தயாரித்துள்ளார். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்.

இந்த படம் வரும் வெள்ளிக்கிழமை அன்று தியேட்டர்களில் வெளியாகிறது. இந்த நிலையில் நடிகர் விஷால் ரத்னம் பட பிரமோஷன் பணிகளில் ஈடுபட்டு வருகிறார். அந்த வகையில் அவர் சேலத்தில் நடந்த நிகழ்ச்சியில் கூறியதாவது: நாடாளுமன்றத் தேர்தலில் நான் சைக்கிளில் சென்று வாக்களித்தேன்.

இதை விஜய்யின் இன்ஸ்பிரேஷன் என சொல்ல முடியாது. என்னிடம் கார் இல்லை. அப்பா, அம்மாவிடம் இருந்தது. என்னுடைய காரை விற்றுவிட்டேன். நடிகர் விஜய்யை பொருத்தவரை அவரிடம் இருக்கும் தன்னம்பிக்கை பிடிக்கும். இன்றைக்கு இருக்கும் சாலை கண்டிஷன் மோசமாக உள்ளது.

டிராபிக் ஜாம் இல்லாமல் சீக்கிரம் சென்றுவிடலாம் என்பதற்காகத்தான நான் வாக்கு பதிவு செய்ய சைக்கிளில் வந்தேன். தமிழகத்திற்கு நிச்சயம் மாற்றம் தேவை. 2026 ஆம் ஆண்டு மற்றவர்கள் ஆட்சிக்கு வருவதற்கு ஏன் வழி கொடுக்கிறீர்கள். எல்லோரும் நல்லது செய்யவே அரசியலுக்கு வருகிறார்கள். நீங்கள் நல்லது செய்துவிட்டால் நாங்கள் ஏன் எங்கள் தொழிலை விட்டுவிட்டு அரசியலுக்கு வருகிறோம்.

தமிழகத்திற்கு மாற்றம் தேவைப்படுகிறது. மக்களுக்கான தேவைகளை பூர்த்தி செய்தால் என்னை போன்ற நடிகர்கள் வாக்களித்துவிட்டு எங்கள் தொழிலை பார்த்துக் கொண்டுவிடுவோம். திமுகவாக இருந்தாலும் அதிமுகவாக இருந்தாலும் நீங்கள் செய்ய வேண்டியது நலப்பணிகள். மக்களுக்கு ஏதாவது என்றால் அரசு மருத்துவமனைக்குச் செல்ல வேண்டும். எம்எல்ஏ, எம்பிக்கள் மட்டும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார்கள். இது என்ன கொடுமை சார் என விஷால் கேள்வி எழுப்பினார்.

அண்மையில் இந்த படத்தின் பிரமோஷனுக்காகவா இல்லை நிஜ சம்பவமா என தெரியவில்லை. ரத்னம் படத்திற்காக ஒரு டாஸ்மாக் கடை செட் போடப்பட்டது. அதில் யாரோ சிலர் வரிசையில் நின்று மதுவாங்க காத்திருந்தனர். அப்போது அங்கு வந்த விஷால் டாஸ்மாக்னு போர்டை பார்த்தால் போதுமே உடனே வந்துடுவீங்களே! யோவ் இது ரத்னம் பட செட் என கூறி அவர்களை விரட்டி அனுப்பினார்.

கடந்த 2021 ஆம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் நீலாங்கரை வாக்குச் சாவடிக்கு நடிகர் விஜய் சைக்கிளில் வந்தார். அவர் பெட்ரோல் , டீசல் விலை உயர்வை கண்டித்து சைக்கிளில் வந்ததாக சொல்லப்பட்டது. பின்னர் விஜய் தரப்பு அதை மறுத்தது. தற்போது விஷாலும் சைக்கிளில் வந்ததால் அவரும் விஜய்யை பின்பற்றினாரா என கேட்கப்பட்டதற்கு அவரும் மறுத்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+