Latha in ADMK: அதிமுகவில் நடிகை லதா ஐக்கியம்! எம்ஜிஆர் கட்சி தொடங்கிய போதே 3வது பெண்ணாக இணைந்தவர்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்த பிரபல நடிகை லதா, அக்கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு கட்சியில் இருந்து ஒதுங்கியிருந்த நிலையில் தற்போது மீண்டும் இணைந்துள்ளார்.

லதா, நல்ல பேச்சாற்றல் கொண்டவர். எனவே வரும் சட்டசபை தேர்தலில் தமிழகம் முழுவதும் தேர்தல் பரப்புரையை மேற்கொள்வார் என தெரிகிறது. எம்ஜிஆர் கட்சி தொடங்கிய போதே அவரது மனைவி ஜானகி அம்மாள், சத்தியவாணி முத்துக்கு பிறகு, 3ஆவது பெண் உறுப்பினராக, அக்கட்சியில் நடிகை லதா இணைந்தார்.

latha admk mgr

நடிகை லதாவின் உண்மையான பெயர் நளினி! சினிமாவுக்காக லதா என பெயர் வைத்ததே எம்ஜிஆர்தான். எம்ஜிஆர்தான் லதாவுக்கு நடிக்கக் கற்றுக் கொடுத்தார். யாரிடம் எப்படி பேச வேண்டும் என்பதெல்லாம் கற்றுக் கொடுத்தார்.

அதனால் அவரை குருவாக நினைத்து தனது பூஜை அறையில் வைத்து இன்று வரை பூஜை செய்து வருகிறார் லதா. 1986 ஆம் ஆண்டு லதாவின் தாயார் உடல்நலம் பாதிக்கப்பட்டு அப்பல்லோவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவரை எம்ஜிஆர் நேரில் போய் சந்தித்து தரமான சிகிச்சைக்கான ஏற்பாடுகளை செய்யுமாறு, அதற்கான செலவுகளை தான் ஏற்பதாகவும் தெரிவித்திருந்தார். ஆனால் துரதிருஷ்டவசமாக லதாவின் தாய் காலமானார்.

லதாவின் உயிரை காப்பாற்றியது எம்ஜிஆர் என்கிறார்கள். ஒரு முறை இருவரும் மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் படப்பிடிப்பிற்காக ஜெய்ப்பூர் சென்றிருந்தனராம். அப்போது படப்பிடிப்பில் லதாவின் சீனை எடுத்துக் கொண்டிருந்தனராம்.

அப்போது திடீரென எம்ஜிஆர், லதாவை வேகமாக ஓடி வருமாறு கூறினாராம். என்னவென புரியாமல் லதாவும் ஓடி வந்து எம்ஜிஆர் அருகே நின்றுக் கொண்டார். அப்போது சில வினாடிகளில் அங்கு லதா நின்றிருந்த இடத்தில் தொங்கிக் கொண்டிருந்த விளக்கு ஒன்று அறுந்து கீழே விழுந்தது.

எம்ஜிஆர் மட்டும் அன்று தீர்க்கதரிசியாக செயல்படாவிட்டால் லதாவின் உயிரே போயிருக்கும் என்கிறார்கள். வெளிநாட்டு பயணங்களில் எம்ஜிஆர் தனது கட்சிக் கொள்கையை தமிழில் விளக்கும் போது லதா அதை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து சொல்வாராம்.

லதாவின் பணிவான பேச்சும், இனிமையான குரலும் எம்ஜிஆரின் அரசியலுக்கு பிளஸ் பாயிண்ட்டாக இருந்தது என்கிறார்கள். லதா, ஆங்கிலம், இந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் கைதேர்ந்தவராம். ஜெயலலிதாவே வேண்டாம் என கருதிய ஆர்.எம்.வீரப்பன் போன்ற மூத்தவர்கள் லதாவின் பணிவையும் பண்பையும் பாராட்டியிருந்தனராம்.

இப்படி எம்ஜிஆருக்கு அரசியலில் உறுதுணையாக இருந்த லதா, ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அரசியலில் இருந்து ஒதுங்கியே இருந்தார். இந்த நிலையில் இன்றைய தினம் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து தன்னை அதிமுகவில் இணைத்துக் கொண்டார் நடிகை லதா! எம்ஜிஆர் அதிமுக என்ற கட்சியைத் தொடங்கிய போது ஜானகி அம்மாள், சத்தியவாணி முத்துவுக்கு பிறகு 3ஆவது பெண் உறுப்பினராக லதா இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+