ஜெயலலிதா நீக்கம்.. எம்ஜிஆர் உயில் - அதிமுக சொத்து யாருக்கு? “குண்டை” போட்ட அதிமுக முன்னாள் அமைச்சர்
சென்னை: முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவை எம்ஜிஆர் தான் இறப்பதற்கு 10 நாட்களுக்கு முன்பாகவே கட்சியிலிருந்து நீக்கியதாக அதிமுக முன்னாள் அமைச்சர் சௌந்திரராஜன் தெரிவித்துள்ளார்.
எம்ஜிஆருடன் காலத்திலிருந்தே அதிமுகவில் செயல்பட்ட முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சௌந்தரராஜன் புதிய கட்சியை தொடங்கும் முயற்சியில் இறங்கி இருக்கிறார். இது தொடர்பாக திருச்சியில் அவர், செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், "இந்த கட்சி ஆரம்பிப்பதற்கு முதல் காரணம் நாட்டில் எங்கே பார்த்தாலும் அச்சம் நிலவுகிறது. என்ன பரிகாரம் என்பது குறித்து தேடிக் கொண்டிருக்கிறார்கள. அப்படி தேடுபவர்களுக்கு இந்த இயக்கம் வழிகாட்டியாக இருக்க வேண்டும்.

கட்சியின் நோக்கம்
இந்த கட்சியின் நோக்கம் எதிர்காலத்தில் லஞ்சமும், ஊழலும் அற்ற அரசு உருவாக வேண்டும். மதுவிலக்கை கொண்டு வராமல் இந்த நாட்டினுடைய இளைஞர்களை காப்பாற்ற முடியாது. மதுவிலக்கால் குடும்பங்கள் செயல்படாமல் இருக்கிறது. அவற்றை மாற்றி அமைக்க வேண்டும் இது எங்களது பிரதான கொள்கை.

இலவச கல்வி
மருத்துவம், பொறியியல் என எந்த கல்வியாக இருந்தாலும் தகுதி உள்ளவர்களுக்கு அரசாங்கமே இலவச கல்வி வழங்க வேண்டும். தனியாருக்கு கொடுத்துவிட்டு அவர்கள் கொள்ளையடிப்பதற்கு வழிவகை செய்வதை நீக்கி அதனை பொதுவுடமையாக்கி படிப்பை அரசாங்கம் ஏற்றுக்கொள்ள வேண்டும். இதனை தட்டி கழித்தால் அரசியல் செய்வதற்கு தகுதி இல்லை.

எம்ஜிஆர்
அதிமுகவை எம்ஜிஆர் ஏற்றுக்கொள்ளவில்லை. கடைசியாக எம்ஜிஆர் உயில் எழுதும் போது இந்த கட்சியின் மீது நம்பிக்கை வைத்து எழுதவில்லை. கட்சியை சரியாக நடத்த முடியவில்லை என்றால் இந்த சொத்துக்களை எல்லாவற்றின் வருவாயை வாய் பேசாதோர், காது கேளாதோர் பள்ளிகளுக்கு கொடுக்க வேண்டும் என்று எழுதினார். இதை எழுதியதற்கு காரணம் கட்சி இருக்கும் என்று நம்பிக்கை அவருக்கு இல்லை.

ஜெயலலிதா
இறப்பதற்கு பத்து நாட்கள் முன் ஜெயலலிதாவை கட்சியை விட்டு நீக்கினார். 'வயதுக்கு மீறிய அதிகாரத்தை கொடுத்தது நான் வாழ்க்கையில் செய்த மிகப்பெரிய தவறு. எனவே யாரும் அந்த அம்மையாரோடு எந்தவிதமான தொடர்பும் கூடாது.' என தெரிவித்தார். ஆனால் சிலர் பதவிக்காக அந்த அம்மையாரை வைத்துக் கொண்டால் தான் பதவி சுகம் காணலாம் என்று உருவாக்கினார்கள்.

கொள்ளைக்கூட்டம்
அதிமுககாரன் கையில் அண்ணா படம் இல்லை, எம்.ஜி.ஆர் படமும் இல்லை, இந்த அம்மையார் படம் மட்டும் தான் உள்ளது. அவர்களுக்கு அண்ணாவையும் தெரியாது. எம்ஜிஆரையும் தெரியாது. அதிமுகவை விட்டு வெளியே வந்த பின்னர் நாங்கள் அதிமுகவை ஒரு இயக்கமாகவே ஏற்றுக்கொள்ளவில்லை. அது ஒரு கொள்ளை கூட்டமாக தான் இருக்கின்றது. திமுகவும் அதிமுகவும் அண்ணன் தம்பிகள்தான் இதில் எந்தவிதமான வித்தியாசமும் இருப்பதாக கருதவில்லை." என்றார்.
-
தண்ணீர் பாட்டில் வீசுனாங்க.. ஆனால் இன்னைக்கு! ஓபிஎஸ் சொன்னதுமே ஸ்டாலின் கொடுத்த ரியாக்ஷன் -
அந்த மூவரையும் சேர்க்காதீங்க.. தடுக்கும் நிர்மல்குமார்.. மதுரை தவெகவில் நடப்பது என்ன? -
சின்ன புரட்சித் தமிழர்..அதிமுகவில் என்ட்ரி கொடுக்கும் எடப்பாடி மகன்? மிதுனால் மிரளும் அதிமுக தலைகள்? -
4 சட்டமன்ற தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கு தடை விதிக்க முடியாது - சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி -
வயிறு எரியுது! விஜய்யிடம் சரணடைவதை விட உயிரை விடலாம்! விஜயபாஸ்கர் மீது ஆர்பி உதயகுமார் கடும் தாக்கு! -
அதிமுகவில் உடைந்த அடுத்த செங்கல்.. சனிக்கிழமை பனையூரில் மெயின் புள்ளி! இவரா? பரபர புதுக்கோட்டை! -
47ல் இருந்து 42ஆக வீழ்ச்சி! எடப்பாடிக்கு அடுத்தடுத்த அதிர்ச்சி கொடுக்கும் அதிமுக எம்எல்ஏ-க்கள்! -
அதிமுக 4 எம்எல்ஏக்கள் ராஜினாமா செல்லுமா? எடப்பாடி பழனிசாமி வழக்கு! சென்னை ஹைகோர்ட்டில் நாளை விசாரணை -
எடப்பாடி பழனிசாமிக்கு ஷாக்.. விஜயபாஸ்கரை தொடர்ந்து அதிமுகவில் இருந்து விலகிய ஆர்.வி.உதயகுமார் -
கலக்கத்தில் கரூர்.. தவெகவுக்கு தாவும் விஜயபாஸ்கர்? அவரே சொன்ன விளக்கம்! குஷியான அண்ணனின் விழுதுகள்! -
அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைகிறாரா செல்லூர் ராஜு? பேச்சே கிடையாது.. விரலிலேயே சிக்னல்! -
பாமக போட்ட பிச்சை.. அதிமுகவைக் காப்பாற்றிய அன்புமணி! போட்டுத் தாக்கிய சிவி சண்முகம்! உண்மை என்ன?












Click it and Unblock the Notifications