Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் பதவி... எடப்பாடி பழனிச்சாமிக்கு புது உத்தரவிட்ட நீதிமன்றம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: அதிமுக இடைக்கால பொதுச் செயலாளராக செயல்பட தடை விதிக்க கோரிய வழக்கில் எடப்பாடி பழனிசாமி பதிலளிக்க சென்னை உரிமையியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அதிமுகவின் ஒருங்கிணைப்பாளராக ஓ பன்னீர் செல்வமும், துணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிச்சாமியும் இருந்தனர். இந்நிலையில் தான் கட்சியில் ஒற்றை தலைமை விவகாரம் பூதாகரமாக வெடித்தது.

இதன் தொடர்ச்சியாக ஓ பன்னீர் செல்வத்தை ஓரம்கட்டி அதிமுகவின் பொதுச்செயலாளராக மாற எடப்பாடி பழனிச்சாமி தனது ஆதரவாளர்கள் மூலம் காய் நகர்த்தினர்.

இடைக்கால பொதுச்செயலாளரான எடப்பாடி

இடைக்கால பொதுச்செயலாளரான எடப்பாடி

இதற்கு ஓ பன்னீர் செல்வம் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இருப்பினும் எடப்பாடி பழனிச்சாமி தனது முடிவில் இருந்து பின்வாங்கவில்லை. இதனால் அதிமுக விவகாரம் நீதிமன்றத்தில் படியேறியது. இதற்கிடையே கட்சியின் பொதுச்செயலாளராக மாற எடப்பாடி பழனிச்சாமி எடுத்த முடிவு கடந்த மாதம் நடந்த பொதுக்குழுவில் கைக்கூடவில்லை. இருப்பினும் கடந்த 11ம் தேதி நடந்த பொதுக்குழுவில் எடப்பாடி பழனிச்சாமி இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். இதன் தொடர்ச்சியாக ஓ பன்னீர் செல்வத்தின் பதவிகள் பறிக்கப்பட்டு கட்சியின் அடிப்படை பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டார்.

சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு

இந்நிலையில் தான் அதிமுக உறுப்பினர் என கூறி திண்டுக்கல்லை சேர்ந்த சூரியமூர்த்தி என்பவர் சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். அதில், ஜூலை 11ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவில் இரட்டை தலைமை முறையை ஒழித்துவிட்டு, ஒற்றை தலைமையை உருவாக்கும் வகையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை ரத்து செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார். இந்த வழக்கில் இடைக்கால பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட எடப்பாடி பழனிசாமி கட்சியில் முடிவுகளை எடுப்பதற்கும், உத்தரவுகளை பிறப்பிப்பதற்கும், பதவி நீக்கம் செய்யவும், நியமனம் செய்யவும் தடை விதிக்க வேண்டும் என்றும் இடைக்கால கோரிக்கை வைத்துள்ளார்.

 எடப்பாடி பழனிச்சாமிக்கு உத்தரவு

எடப்பாடி பழனிச்சாமிக்கு உத்தரவு

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ் பிரியா, இடைக்கால மனு குறித்து அதிமுக நிர்வாகிகள் மற்றும் இடைக்கால பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 16ஆம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளார். ஒற்றை தலைமை தொடர்பான பொதுக்குழு தீர்மானங்களை ரத்து செய்யக் கோரிய வழக்கு செப்டம்பர் 1ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

Recommended Video

    அடுத்தடுத்த சோதனைகளால் கலக்கத்தில் இருக்கும் ADMK மாஜிக்கள்
    கை ஓங்கிய நிலையில் உத்தரவு

    கை ஓங்கிய நிலையில் உத்தரவு

    அதிமுகவில் ஓ பன்னீர் செல்வம்-எடப்பாடி பழனிச்சாமி இடையேயான பிரச்சனையில் தொடர்ந்து எடப்பாடி பழனிச்சாமியின் கையே ஓங்கி வருகிறது. இடைக்கால பொதுச்செயலாளர் பொறுப்பை கைப்பற்றி வெற்றி பெற்ற எடப்பாடி பழனிச்சாமி, சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் அதிமுக அலுவலகத்தின் சாவியை பெற்றுள்ளார். இந்நிலையில் தான் இந்த வழக்கு தொடர்பாக பதிலளிக்க சென்னை உரிமையியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+