ஏற்கனவே "சாக்லேட் பாய்".. இப்போ மெச்சூரிட்டி வேற இல்லையாமே.. உதயநிதியை போட்டு தாக்கிய மாஜி
உதயநிதியை விமர்சித்து ஜெயக்குமார் பேட்டி தந்துள்ளார்
சென்னை: தங்கமணிக்கு சாவுமணி அடிக்கப்படும் என்றெல்லாம் உதயநிதி பேசி வருகிறார்.. இப்படித்தான் பேசுறதா? நான் கேட்கிறேன், சி.வி சண்முகம் மீது வழக்குப்பதிவு செய்த காவல்துறை உதயநிதி மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை?" என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி எழுப்பினார்.
கோவை மாநகராட்சி தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்களை ஆதரித்து திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், கோவை சுந்தராபுரம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டார்.
நேற்றைய தினம் கடைசி நாள் பிரச்சாரம் என்பதால், திமுக தரப்பு உள்ளிட்ட பொதுமக்கள் திரண்டு வந்திருந்தனர்.. அப்போது உதயநிதி பேசும்போது, வழக்கம்போல் கடந்த அதிமுக ஆட்சியை கடுமையாக விமர்சித்திருந்தார்.

எடப்பாடி பழனிசாமி
குறிப்பாக அவர் பேசும்போது, "அதிமுக ஆட்சி முடிந்து செல்லும்போது கஜானாவில் 6 லட்சம் கோடி கடனை வைத்து சென்றனர்.. ஆனாலும் திமுக ஆட்சியமைந்தவுடன் பால் விலை குறைப்பு, இலவச பேருந்து பயணம் பெண்களுக்கு, என பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளது.. கண்டிப்பாக நிதிநிலை சரி செய்யப்பட்டு விரைவில் பெண்களுக்கு மாதாமாதம் உரிமைத்தொகை ஆயிரம் வழங்கும் திட்டம் துவங்கப்படும்.. ஊழல்மணிக்கு சாவுமணி அடிப்பது நிச்சயம்.. ஏற்கனவே 110 கோடி ரூபாயை முடக்கிவிட்டோம்" என்று பேசியிருந்தார்.

கோயம்புத்தூர்
உதயநிதியின் இந்த பேச்சுக்குதான் மாஜி அமைச்சர் ஜெயக்குமார் கொந்தளித்துள்ளார்.. சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவாலை சந்தித்து ஜெயக்குமார் புகார் மனு ஒன்றை அளித்தார்... அதில், தேர்தல் ஆணையம் ஒருதலைபட்சமாக செயல்படுவதாக குற்றம்சாட்டிய அவர், வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை தடுக்க கூடுதல் போலீசாரை பணியில் அமர்த்த வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.. இதற்கு பிறகு ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் பேசியதாவது:

பணப்பட்டுவாடா
"அதிமுகவின் வெற்றியை பறிக்க வேண்டும் என்பதற்காக ஜனநாயகத்தில் அனுமதிக்க முடியாத அநியாயங்களை திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் செய்துவருகிறார்கள்.. சென்னை உட்பட பல்வேறு இடங்களில் பணப்பட்டுவாடா செய்த திமுகவினர் கையும் களவுமாக பிடிபட்ட பின்னரும் வழக்குப்பதிவு செய்யவில்லை... பலமுறை தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை. மாநில தேர்தல் ஆணையம் செயலற்ற ரோபோ போல் உள்ளனர். அந்த பொம்மைக்கான ரிமோட் முதலமைச்சர் வைத்திருக்கிறார்.

சாவுமணி
சென்னை உட்பட பல்வேறு இடங்களில் வாக்குப்பதிவு மையங்களை கைப்பற்ற ரவுடிகள் இறக்கப்பட்டிருக்கிறார்கள்.. அதனால், கூடுதல் காவலர்களை பயன்படுத்த வேண்டும் என்று காவல் ஆணையரிடம் கோரியிருக்கிறேன்... எப்படியும் தோற்றுவிடுவோம் என்ற பயத்தில் உதயநிதி அரசியல் பக்குவம் இல்லாமல் பேசிவருகிறார்.. அதிலும் தங்கமணிக்கு சாவுமணி அடிக்கப்படும் என்றெல்லாம் பேசி வருகிறார்.. நான் கேட்கிறேன், சி.வி சண்முகம் மீது வழக்குப்பதிவு செய்த காவல்துறை உதயநிதி மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை?" என்று கேள்வி எழுப்பினார்.

கருத்து மோதல்
ஜெயக்குமாரும் சரி, உதயநிதியும் சரி, ஏற்கனவே இருவருக்கும் பலமுறை கருத்து மோதல்கள் ஏற்பட்டுள்ளது.. இருவருமே ஒருவருக்கொருவர் விமர்சித்து கொள்வார்கள்.. உதயநிதியை ஜெயக்குமார் ஒருமுறை "சாக்லேட் பாய் என்று சொல்ல போக, அதற்கு உதயநிதி சாக்லேட் பாய் என்பது கெட்ட வார்த்தை கிடையாது... அது நம்மை புகழும் சொல்தான். என்னை சாக்லேட் பாய் என்று சொன்னவர் ஒரு பிளே பாய்" என்று பதிலடி தந்தார்..
Recommended Video

சேகுவேரா
"சினிமாவில் ஜாலியா இருந்த ஒரு மனுஷனை வலுக்கட்டாயமாக இந்த சட்டமன்றத்தில் உட்கார வைத்தால், எப்படி இருக்கும்? சட்டமன்றம் அவருக்கு போரடிக்கத்தான் செய்யும் என்பது முதல் சேப்பாக்கம் சேகுவேரா" இன்றைக்கு எங்கிருக்கிறார் என்றே தெரியவில்லை" என்பது வரை ஜெயக்குமார், உதயநிதி ஸ்டாலின் இருவருக்கும் இடையேயான காமெடி கலாட்டாவை இந்த தமிழகமே வேடிக்கை பார்த்தது.
இப்போது மெச்சூரிட்டி இல்லை என்று ஜெயக்குமார் சொல்லி உள்ளார்.. இதற்கு உதயநிதி என்ன பதில் சொல்ல போகிறார் என்பதை பார்க்கலாம்..!
-
ஓபிஎஸ்ஸின் Ex ஆதரவாளர்கள் கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி, தர்மர் எம்பிக்கு பதவி! அப்போ காளியம்மாளுக்கு? -
விஜய் வந்தால்! அதிமுக 134 தொகுதிகளில் மட்டுமே போட்டியிடும்? எடப்பாடி பழனிசாமியின் சீட் கணக்கு! -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி: 5 சவரன் தங்கம் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்! எப்படி விண்ணப்பது -
திரிஷா சர்ச்சை அடங்குவதற்குள் மீண்டும் பரபரப்பு… காதல், கள்ளக்காதல் பற்றி பார்த்திபன் ஓபனாக பேச்சு -
தங்கம் vs ரியல் எஸ்டேட்.. கடைசி காலத்தில் நிம்மதியாக வாழ எது சிறந்தது? ஆனந்த் சீனிவாசன் ஈஸி விளக்கம் -
பாஜகவுடன் கூட்டணி வைக்கலாம்.. எழுதிக் கொடுத்த மாவட்டச் செயலாளர்கள்.. நாளை விஜய் எடுக்கும் முடிவு? -
விரால் மீனின் ஸ்பெஷாலிட்டி இது.. பாம்பு தலையன் மீனுக்குள் அற்புதமான சீக்ரெட்! பெண்களின் வரப்பிரசாதம் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை பழிதீர்த்த கர்மா.. முத்துவால் ஏற்பட்ட குழப்பம்.. சந்தோஷத்தில் ரோகிணி -
ஜான் ஆரோக்கியசாமி போட்ட மெகா ஸ்கெட்ச்.. மிரண்டு போன பாஜக மேலிடம்.. B டீம் முத்திரையை உடைப்பாரா விஜய் -
Rasi Palan: கடகம், சிம்மம், கன்னிக்கு மார்ச் மாதத்தில் அடிக்குமா ஜாக்பாட்.. முழு பலன்கள் விவரம் -
அதிமுக எம்பியாக இருந்தபோதே கனிமொழி அக்கா எனக்கு பயிற்சி கொடுத்தார்.. ஓ.பி. ரவீந்திரநாத் -
ஸ்டன் ஆன விஜய்.. "80 சீட்+ துணை முதல்வர்" எல்லாம் ஓகே.. ஆனா ஒரு விஷயத்தை யோசிக்கும் தவெக தலைமை












Click it and Unblock the Notifications