" ஜுலை 17ல் 2 முக்கிய நிகழ்வு".. அதிமுகவின் ஆலோசனை கூட்டம் திடீர் ஒத்திவைப்பு.. பின்னணி இதுதான்
சென்னை: சென்னையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் வரும் 17 ம் தேதி அந்த கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்ட நிர்வாகளின் ஆலோசனை கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில் அதன் பின்னணி குறித்த முக்கிய தகவல் வெளியாகி உள்ளது.
அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி உள்ளார். நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் அதிமுகவும், அதன் கூட்டணி கட்சிகளும் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் தோல்வியை சந்தித்தனர்.

இந்நிலையில் தான் லோக்சபா தேர்தல் தோல்வி குறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தொகுதி வாரியாக நிர்வாகிகளை சென்னைக்கு அழைத்து தீவிர ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.
இந்த ஆலோசனை கூட்டம் என்பது சென்னையில் உள்ள அதிமுகவின் தலைமை அலுவலகத்தில் நடந்து வருகிறது. இந்த கூட்டத்துக்கு எடப்பாடி பழனிச்சாமி தலைமை வகித்து வரும் 2026 சட்டசபை தேர்தலுக்கு தயாராவது தொடர்பாக அறிவுரைகளை வழங்கி வருகிறார். அதுமட்டுமின்றி கூட்டணி விவகாரம், ஒவ்வொரு தொகுதியிலும் கட்சியை பலப்படுத்துவது தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் இன்றும் ஆலோசனை கூட்டம் என்பது நடந்தது. கடந்த 10ம் தேதி தொடங்கிய ஆலோசனை கூட்டம் இன்று 3வது நாளாக நடந்தது. இந்த தொகுதி வாரியான ஆலோசனை கூட்டம் என்பது வரும் 19ம் தேதி வரை நடைபெற உள்ளது. இத்தகைய சூழலில் தான் வரும் 17 ம்தேதி சென்னையில் நடைபெற இருந்த அதிமுக ஆலோசனை கூட்டம் என்பது திடீரென்று ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
அன்றைய தினம் எடப்பாடி பழனிச்சாமி தேனி, திண்டுக்கல், தென்காசி உள்ளிட்ட தொகுதி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்த இருந்தார். இந்நிலையில் தான் 3 மாவட்ட நிர்வாகிகளுடனான ஆலோசனை கூட்டம் என்பது திடீரென்று ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அதிமுக தலைமை அறிவித்துள்ளது.
அதாவது வரும் 17 ம் தேதி மொஹரம் பண்டிகை மற்றும் ஆடி 1 ம் தேதியாகும். இதன் காரணமாக அன்றயை தினம் தேனி, திண்டுக்கல், தென்காசி மாவட்ட அதிமுக நிர்வாகிகளுடனான ஆலோசனை கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த ஒத்திவைக்கப்பட்ட 3 மாவட்டங்களுக்கான ஆலோசனை கூட்டத்துக்கான மாற்று தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை. இதற்கான தேதி என்பது பின்னர் அறிவிக்கப்பட உள்ளது.
-
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications