ஓபிஎஸ் மீண்டும் அழைப்பு.. ‛ஓகே’ சொன்ன டிடிவி தினகரன்.. அடுத்த மூவ் என்ன? விளக்கிய சிஆர் சரஸ்வதி!
சென்னை: அதிமுகவில் அனைவரும் சேர்ந்து செயல்பட வேண்டும் என ஓ பன்னீர் செல்வம் கூறிய நிலையில் அவருக்கு சாதகமான பதிலை தான் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார். இந்நிலையில் அமமுகவின் அடுத்த நடவடிக்கை என்ன ? என்பது பற்றி விளக்கம் அக்கட்சியின் சிஆர் சரஸ்வதி விளக்கமளித்துள்ளார்.
தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணமடைந்த பிறகு அதிமுகவில் பல்வேறு குழப்பங்கள் ஏற்பட்டன. அதிமுக ஆட்சி அதிகாரத்தில் இருந்ததால் உள்கட்சி பூசல்கள் வெளியே தெரியாமல் இருந்து வந்தது.
இந்நிலையில் தற்போது எதிர்க்கட்சியான நிலையில் தலைவர்கள் இடையேயான மனக்கசப்பு வெளிப்படையாக தெரிய தொடங்கி பூதாகரமாக வெடித்துள்ளது.

அதிமுக உள்கட்சி பூசல்
அதிமுகவில் ஒற்றை தலைமை வேண்டும் என முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தரப்பினர் கூறி அவரை கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்தனர். இதன்மூலம் பொதுக்குழு கூட்டத்தில் ஓ பன்னீர் செல்வத்தை அவமானப்படுத்தி வெளியே அனுப்பி கட்சியில் இருந்து நீக்கியுள்ளனர். இருப்பினும் பொதுக்குழுவை எதிர்த்த வழக்கில் ஓ பன்னீர் செல்வத்துக்கு ஆதரவான தீர்ப்பை உயர்நீதிமன்றம் வழங்கியது. இதனால் எடப்பாடி பழனிச்சாமியின் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் பதவி செல்லாத நிலையில் உள்ளது. இதனை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்பட்டு வழக்கின் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

ஓ பன்னீர் செல்வம் அழைப்பு
இதற்கிடையே தான் ஓ பன்னீர் செல்வம் தொடர்ந்து அனைவரும் சேர்ந்து செயல்பட வேண்டும் என கூறி வருகிறார். மனக்கசப்புகளை மறந்து ஒன்றாக செயல்படலாம் என அவர் எடப்பாடி பழனிச்சாமிக்கு வெளிப்படையாக அழைப்பு விடுத்தார். இதனை அவர் முற்றிலுமாக மறுத்துள்ளார். அதேபோல் சசிகலா மற்றும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் உள்ளிட்டவர்களுக்கும் ஓ பன்னீர் செல்வம் அழைப்பு விடுத்தார். நேற்றைய பேட்டியின்போது இன்னும் ஓபனாக நேரில் சென்று சசிகலா, டிடிவி தினகரன் ஆகியோரிடம் பேச உள்ளதாக ஓ பன்னீர் செல்வம் கூறினார். இதனை அவர்கள் வரவேற்றுள்ளனர்.

சசிகலா மகிழ்ச்சி-டிடிவி தினகரன் ஓகே
ஓ பன்னீர் செல்வத்தின் அழைப்பால் சசிகலா மகிழ்ச்சி அடைந்துள்ளதாக கூறப்படுகிறது. அதோடு டிடிவி தினகரனும், ஓ பன்னீர் செல்வத்துக்கு ஆதரவான நிலைப்பாட்டில் தான் உள்ளார். அதாவது சமீபத்திய அவரது கருத்துக்கள் என்பது ஓ பன்னீர் செல்வத்துடன் சேர்ந்து செயல்பட வாய்ப்புள்ளது என்பதற்கு ஓகே சொல்லும் வகையில் தான் அமைந்துள்ளது.

சிஆர் சரஸ்வதி விளக்கம்
இந்நிலையில் தான் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் செய்தி தொடர்பாளரான சிஆர் சரஸ்வதி இதுபற்றி பேசியுள்ளார். அவர் கூறுகையில், ‛‛அண்ணன் ஓ பன்னீர் செல்வம் மீண்டும் ஒருமுறை சசிகலா, அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் ஆகியோர் சேர்ந்து செயல்பட வேண்டும் எனவும் அனைவரும் ஒன்றாக தேர்தலை சந்திக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார்.

டிடிவி தினகரன் அறிவிப்பார்
எங்களை பொறுத்தவரை தமிழகத்தில் மீண்டும் ஜெயலலிதாவின் ஆட்சி வர வேண்டும் என்பதை நோக்கமாக வைத்து தான் அம்மா மக்கள் முன்னேற்றக கழகம் பயணித்து வருகிறது. யார் யாரோடு சேர போகிறோம். என்ன செய்ய போகிறோம் என்பதை எங்கள் கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அறிவிப்பார்.

உரிய முடிவு
நாங்கள் கடவுளிடம் வேண்டி கொள்வது எல்லாம் தமிழகத்தில் மீண்டும் எம்ஜிஆர், ஜெயலலிதா ஆட்சி வர வேண்டும் என்பது தான். இதன்மூலம் மக்களுக்கான திட்டங்களோடு நல்லாட்சி செய்ய வேண்டும் என்பது தான் சசிகலா மற்றும் டிடிவி தினகரன் ஆகியோரின் விருப்பமாக உள்ளது. கண்டிப்பாக தலைவர்கள் அதற்குரிய முடிவை உரிய நேரத்தில் எடுப்பார்கள்'' என கூறியுள்ளார்.
-
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
ரீல்ஸ் போட்டு ஆட்சிக்கு வந்து.. ரீல் விட்டு ஆட்சியை தொடரலாமா? விஜய் கனவு பலிக்காது! டிடிவி அட்டாக்! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications