கன்னட அமைப்புகளுக்கு இதேதான் வேலை.. சத்யராஜ், ரஜினிக்கு கொடுத்த தொல்லை! கமல்ஹாசனிடம் வேலைக்கு ஆகல!
சென்னை: கமல்ஹாசன் மன்னிப்பு கேட்காவிட்டால் கர்நாடகாவில் 'தக் லைஃப்' படம் தடை செய்யப்படும் என சில கன்னட அமைப்புகள் மிரட்டல் விடுத்து வருகின்றன. சில கன்னட அமைப்புகள், கர்நாடகா மாநில சினிமா வியாபாரத்தை வைத்து மிரட்டல் விடுப்பதை வாடிக்கையாகவே வைத்துள்ளன. இந்த தாக்குதல்களுக்கு இதற்கு முன்பு ரஜினிகாந்த், சத்யராஜ் என பலர் சிக்கி உள்ளனர்.
மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்துள்ள 'தக் லைஃப்' திரைப்படம் வரும் ஜூன் 5 ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்த படத்தின் புரமோஷன் பணிகளில் படக்குழுவினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கன்னட நடிகர் சிவராஜ்குமார் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் பேசிய நடிகர் கமல்ஹாசன், "உயிரின் உறவே தமிழே! எனது வாழ்க்கையும், குடும்பமும் தமிழ் மொழிதான். எனது குடும்பம் இங்கு இருக்கிறது. அதனால்தான் சிவராஜ்குமார் இங்கு வந்துள்ளார். அவரது மொழி (கன்னடம்) தமிழ் மொழியில் இருந்து பிறந்தது. அவரும் நமது குடும்பத்தில் ஒரு அங்கமாவார்" என்று தெரிவித்தார்.

தக் லைஃப் படத்துக்கு எதிர்ப்பு
இந்நிலையில், கமல்ஹாசனின் பேச்சுக்கு கர்நாடகாவில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. அதாவது தமிழில் இருந்து கன்னடம் பிறந்ததாகக் கூறி கன்னட மக்களை கமல்ஹாசன் அவமதித்து விட்டதாக கன்னட அமைப்புகள் போர்க்கொடி தூக்கி உள்ளன. தக் லைஃப் படம் கர்நாடகாவில் தடை செய்யப்படும் என எச்சரிக்கிறோம் என தெரிவித்தார். படத்தின் போஸ்டர் கர்நாடகாவில் ஒட்டப்பட்ட இடங்களில் எல்லாம் அவற்றை சில கன்னட அமைப்பினர் கிழித்து வருகின்றனர்.
சில கன்னட அமைப்புகள் 'தக் லைஃப்' பட ரிலீஸ் நெருங்கும் சூழலில் கமல்ஹாசனுக்கு நெருக்கடி தரும் வகையில் இத்தகைய நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றன. பெரிய தமிழ் நடிகர்களின் படங்கள் வரும்போது, அதை வைத்து நெருக்கடி கொடுத்து தொல்லை தருவதை சில உள்நோக்கம் கொண்ட கன்னட அமைப்புகள் செய்து வருகின்றன.
கமல்ஹாசன் மன்னிப்பு கேட்க மறுப்பு
எனினும், கன்னட மொழி குறித்த கருத்துக்கு மன்னிப்பு கேட்க முடியாது என கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். அன்பு எப்போதும் மன்னிப்பு கேட்காது என கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். கன்னட அமைப்புகள், கர்நாடக முதல்வர் சித்தராமையா உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்த நிலையிலும் கமல்ஹாசன் தனது கருத்தில் இருந்து பின்வாங்கப்போவதில்லை எனக் கூறியுள்ளார்.
பாகுபலி-2 சத்யராஜ் விவகாரம்
ராஜமெளலி இயக்கிய 'பாகுபலி 2' படத்தில் கட்டப்பா என்ற கேரக்டரில் சத்யராஜ் நடித்தபோதும் இப்படி ஒரு பிரச்சனை கிளம்பியது. பாகுபலி 2 படம் வருவதற்கு 9 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு நிகழ்வில் சத்யராஜ் பேசிய விஷயத்தை கையில் எடுத்து பிரச்சனை ஆக்கி, சத்யராஜை மன்னிப்பு கேட்க வைத்தன.
பாகுபலி 2 சர்ச்சை சமயத்தில் சத்யராஜ் வெளியிட்ட அறிக்கையில், "ஒன்பது வருடங்களுக்கு முன்னர் காவிரி நதிநீர் பிரச்சனையின்போது கர்நாடகாவில் தமிழர்கள் தாக்கப்பட்டனர். அந்த சமயத்தில் கர்நாடகாவில் தமிழ் திரைப்படங்கள் திரையிட எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதனை கண்டித்து தமிழ் திரையுலகம் சார்பில் நடைபெற்ற கண்டனக்கூட்டத்தில் பலரும் ஆவேசமாக பேசினர். அவர்களில் நானும் ஒருவன்.
மன்னிப்பு கோரிய சத்யராஜ்
அந்த கண்டனக் கூட்டத்தில் நான் பேசிய சில வார்த்தைகள் கன்னட மக்களின் மனதை புண்படுத்தியதாக அறிகிறேன். நான் கன்னட மக்களுக்கு எதிரானவன் அல்ல. 35 ஆண்டுகளாக என்னுடைய உதவியாளராக இருக்கும் சேகர் என்பவரின் தாய் மொழி கன்னடம். கடந்த ஒன்பது வருடங்களில் 'பாகுபலி' உள்பட சுமார் 30 திரைப்படங்கள் கர்நாடகாவில் வெளியாகியுள்ளது. அப்போதெல்லாம் எந்த பிரச்சனையும் வரவில்லை. ஒருசில கன்னட படத்தில் நடிக்க அழைப்பும் வந்தது. ஆனால் நேரமின்மை காரணமாக நடிக்க முடியவில்லை
ஒன்பது வருடங்களுக்கு முன்னர் நடந்த கண்டன கூட்டத்தில் நான் பேசியதை தற்போது பார்த்து நான் பேசிய சில வார்த்தைகள் கன்னட மக்களின் மனம் புண்படுத்தியதாக கருதுவதால் அந்த சில வார்த்தைகளுக்காக ஒன்பது வருடங்களுக்கு பின்னர் நான் கன்னட மக்களிடம் எனது மனப்பூர்வமான வருத்தத்தை தெரிவித்து கொள்கிறேன். இந்த முடிவால் என் நல விரும்பிகளும் தமிழக மக்களும் வருத்தம் கொள்ள வேண்டாம் என்று கேட்டு கொள்கிறேன்.
பாகுபலி என்ற மிகப்பெரிய படத்தின் மிகச்சிறிய தொழிலாளிதான் நான். என் ஒருவனால் பல ஆயிரம் தொழிலாளிகளின் உழைப்பும், பணமும் விரயமாவதை நான் விரும்பவில்லை. பாகுபலி 2 படத்தின் கர்நாடக மாநில உரிமையை பெற்ற விநியோகிஸ்தர்களும், திரையரங்க உரிமையாளர்களும் பாதிக்கப்படுவதை நான் விரும்பவில்லை." என மன்னிப்பு கேட்டு அந்த பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வந்தார் சத்யராஜ்.
ரஜினிகாந்த்தையும் விட்டுவைக்கவில்லை
அதற்கு முன்பு வடிவேலுவின் 23ம் புலிகேசி படத்திற்கும் கன்னட அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து பஞ்சாயத்தைக் கூட்டி இருந்தன. புலிகேசி தங்கள் மாநில பகுதியில் ஆட்சி செய்த மன்னன், அவனை கிண்டலாக சித்தரிக்க உள்நோக்கம் இருக்கிறது என்று ஒரு பெரிய கண்டுபிடிப்போடு எதிர்ப்பு தெரிவித்தனர் அவர்கள்.
அதற்கு முன்பாக ரஜினிகாந்த் நடித்த குசேலன் திரைப்படம் ரிலீசான நேரத்தில், அதற்கு கர்நாடகாவில் எதிர்ப்பு கிளம்பியது. தனது பேச்சுக்கு விளக்கம் அளித்த ரஜினிகாந்த், தான் கர்நாடக மக்களை அவ்வாறு கூறவில்லை. ஒகேனக்கல் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் வாட்டாள் நாகராஜ் போன்றவர்களைத்தான் அப்படி கூறினேன் என்று கூறியிருந்தார்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications